ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர குழுவினர் கண்டிக்கு விஜயம்

Spread the love

(அஷ்ரப் ஏ சமத்)

ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், செயலாளா் சாதீக் ஷஹான், அகமத் முனவா், ஜாவித் முனவா், கண்டி வைஸ், அப்பாஸ் அனஸ், சித்தீக் மற்றும் ஆகியோர்களோடு உறுப்பினர்களும் நேற்று (12) கண்டி திகன, பல்லேகல கெங்கல்ல, மெனிகின்ன அம்பேத்தன்ன போன்ற பிரதேசங்களுக்குச் சென்று பாதிக்க்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டனர். 

அத்துடன் கலவரத்தில்  மரணமடைந்த அப்துல் பாசித்யின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினாா்கள். திகன பிரதேச செயலாளரினால் திகன ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டமொன்றிலும் கலந்து கொண்டனா். அத்துடன் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்கள், எரித்து நாசமாக்கப்பட்டு கொள்ளையிடப் பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வா்த்தக நிலையங்கள், வீடுகள், வாகனங்களையும் பாா்வையிட்டனா். அச் சம்பவ தினத்தில் அங்கு தமது உயிா் தப்புவதற்கும் ஓடி ஒழிந்த விதம் சிங்கள காடையா்கள் பெற்றோல் பொம்களை வீசி தம் கண்முன்னே தாக்கிய விதம், எமது உடைமைகள் சொத்துக்களை கொள்ளையிட்ட விதங்களை அங்குள்ள முஸ்லீம்கள் தத்தமது துயரக் கதைகளைக் கூறி கண்னீா்விட்டு அழுது விபரித்தமையும் குறிப்பிடத்தக்கது. 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*