கேரளா கஞ்சாவுடன் ஓட்டமாவடியில் ஒருவர் கைது

0
267

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)    

சட்டவிரோதமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சாவினை வியாழக்கிழமை (15) மதியம் ஓட்டமாவடி பிரதேசத்தில் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

ஓட்டமாவடி பிரதேசத்தில் கேரளா கஞ்சா விற்பனை இடம் பெறுவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுனவிற்கு கிடைத்த இரகசிய தகவலைடுத்து அவரின் வேண்டுகோளுக்கிணங்க மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக இரண்டு கிலோவும் நூறு கிராம் இடையுடைய கேரளா கஞ்சா ஓட்டமாவடியில் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவ் வீட்டு உரிமையாளரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளா கஞ்சா விற்பனை குறித்த இடத்தில் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலையடுத்து அவரின் வேண்டுகோளுக்கிணங்க அனுப்பப்பட்ட பொலிஸ் குழுவினர் கேரளா கஞ்சாவை கைப்பற்றியதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவின் பெறுமதி இரண்டரை லட்சம் ரூபாஇருக்கலாம் எனவும் இக் கஞ்சா விற்பனையுடன் தொடர்புடைய இன்னும் பலர் இருக்கலாம் என்ற ச்தேகத்தின் பேரில் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here