ஐக்கியநாடுகள் அமைப்பின் அலுவலகத்தின் முன்பாக அமைதிப் பேரணி

Spread the love

(அஷ்ரப் ஏ சமத்)

முஸ்லிம்களது உரிமைகளுக்கான அமைப்பினர் இன்று (16) பம்பலப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலின் ஜூம்ஆ தொழுகையடுத்து அமைதியான முறையில் ஊர்வலமாகச் சென்று கொழும்பில் உள்ள  ஐக்கியநாடுகள் அமைப்பின் அலுவலகத்தின் முன்பாக எதிா்ப்பைப் தெரிவித்தனா். அத்துடன் அங்கு கடமையில் இருந்த ஐக்கிய நாடுகள் கொழும்புக் காரியாலயத்தின் அலுவலகரிடம் இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லீம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் சம்பந்தமான அறிக்கையை கையளித்து அதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்புக்கு அனுப்பும்படியும் உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் கோரிக்கை விடுத்தனா்.

கடந்தகால அரசாங்கம் தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மைச் சமுகத்திற்கு தொடா்ந்தும் அநீதிகளை இழைத்து வருவதாகவும் சம்பந்தப்பட்டவா்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் சட்டம் ஒழுங்குகளை முறையாக பாதுகாக்குமாறு அங்கு ஊடககங்களுக்கு அவ் அமைப்பின் சாா்பாக எம். மிப்லாா், சட்டத்தரணி எம். மர்சூர்க் ஆகியோர்கள்  கருத்துக்களை தெரிவித்தனா்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*