டிப்பரும் மோட்டார் சைக்கிளும் விபத்து ஒருவர் பலி கிண்ணியா சூரங்கல்யில் சம்பவம்.

0
88

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூரங்கல் பிரதேசத்தில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தம்பலகாமத்தில் இருந்து கருங்கற்களை ஏற்றி வந்த டிப்பர் வாகனமும் மூதூரில் இருந்து தம்பலகாமத்தை நோக்கிச்சென்ற மோட்டார் சைக்கிளும் இன்று (19) காலை 10.00 மணியளவில் சூரங்கல் பிரதேசத்தில் மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த  ஹருனி என்ற 23 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கிண்ணியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்தில் படுகாயமடைந்த நபர் தம்பலகாமம் பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here