“பாதுகாப்பாக சென்றுவாருங்கள்’’ மாணவிகளுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு.

0
288

-எச்.எம்.எம்.பர்ஸான்-

வாழைச்சேனை பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் ஏற்பாட்டில் பாடசாலைகள் தோறும் மாணவ மாணவிகளை வீதி விபத்துக்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் விழிப்பூட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

அதன் தொடரில் குறித்த விழிப்பூட்டும் நிகழ்வானது (16) ம் திகதி வெள்ளிக்கிழமை வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் அதிபர் அல்ஹாஜ் எம்.ரீ.எம். பரீட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

குறித்த விழிப்பூட்டல் நிகழ்வில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் பீ.எஸ்.பத்திரன கலந்துகொண்டு பாடசாலைகளுக்கு வரும்போதும் பாடசாலை கலைந்தவுடனும் எவ்வாறு வீதி ஒழுங்குகளை கடைப்பிடித்து செல்லவேண்டும் என்பன பற்றிய பல்வேறுபட்ட ஒழுங்கு முறைகளை மாணவிகள் மத்தியில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here