சுற்றுலா வந்த கொழும்பு ஹமீத் ஹல் ஹுசைனியா தேசிய பாடசாலை மாணவன் ஆற்றில் மூழ்கி பலி

0
284

கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த உயர்தர மாணவன் கொத்மலை ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (22) பகல் 1 மணியளவில் கொழும்பு ஹமீத் ஹல் ஹுசைனியா தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் 18 வயதுடைய உயர்தர மாணவனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குறித்த பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் 42 மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் நுவரெலியா பிரதேசத்திற்கு வருகைத்தந்துள்ளனர். இன்று மீண்டும் கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்து கொத்தலை ஆற்றில் நீராடுகையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாணவ நண்பர்களுடன் நீராடுகையில் திடீரென சுழியில் சிக்குண்டுள்ள மாணவனை சக மாணவர்கள் காப்பாற்ற முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை என்றும் கொத்மலை பொலிஸாரின் உதவியுடன் பிரதேச வாசிகளினால் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் கொத்மலை வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here