குடிவரவு – குடியகழ்வுத் திணைக்களத்தின் பயிற்சிப்பற்றறை.

0
319

(அபூ இன்ஷிபா)

கடந்த 20.03.2017 செவ்வாய்க்கிழமை இலங்கை குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தினால் நாடாளாவிய ரீதியில் திணைக்களத்தின் அனுமதி பெற்ற மற்றும் அதிக புகைப்படப்பிடிப்பை மேற்கொள்ளும் புகைப்பட நிலைய படப்பிடிப்பாளா்களுக்கான பயிற்சிப்பற்றறை கண்டி Devon Rest Hotel யில் நடைபெற்றது.

அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரும் பல முக்கிய நிருவாகத்தினரும் கலந்து கொண்டனா் காலை 10.00 மணிமுதல் 1.30 மணிவரை நடைபெற்ற இந்நிகழ்வில் நாட்டின் நாலா பக்கமும் இருந்து 250 க்கும் மேற்பட்ட குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் அனுமதிப்பெற்ற புகைப்படப்பிடிப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

சர்வதேச தரத்துடன் இலங்கை நாட்டின் கடவுச்சீட்டினை தரம்வாய்ந்த கடவுச்சீட்டினை வழங்கும் நோக்கில் கடந்த 2015ம் ஆண்டு அறிமுகமாகிய e-photo studio Passport Photo Online ஒரு புகைப்படத்தில் சுமார் 10 குறியீடுகளை கொண்டே அடையாளப்படுத்தப்படுகின்றது. அதனை இன்னும் விருத்தி செய்து ஒருவரது முகத்தில் 62 குறியீடுகளை இனங்காணக்கூடிய வகையில் செயற்படுத்த உள்ளதுடன் நாடுபூராவும் சுமார் 974 புகைப்பட நிலையங்கள் அனுமதிபெற்றுள்ளன அதிலிருந்து குறிப்பிட்ட சில ஸ்ரூடியோக்களையே நாம் அழைத்துள்ளோம் புகைப்படங்கள் குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் கட்டளைக்கு மாற்றமாக எடுக்கப்படும் போது எதிர்காலத்தில் அப்புகைப்பட நிலையங்களில் அனுமதி ரத்து செய்யப்படலாம். என பணிப்பாளா் தனதுரையில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here