ஜனாஷாத் தொழுகை தொடா்பான ஓட்டாவடி முகைதீன் ஜூம்ஆப்பள்ளிவாயலின் அதிரிடி அறிவிப்பு.

0
671

(அபூ இன்ஷிபா)

ஓட்டமாவடி முகைதீன் ஜூம்ஆப்பள்ளிவாயலை புதிய ஒரு நிருவாகம் பொறுப்பேற்ற பின் பல காத்திரமான முன்னெடுப்புக்களை செய்து வருகின்றது. அந்தவகையில் ஜனாஷாத் தொழுகையின் போது எம்மிடையே ஏற்படும் சிறுசிறு சலசலப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்களின் கருத்துக்களை ஆராய்ந்து கடந்த வெள்ளிக்கிழமை 23.03.2018 ந்திகதி ஜனாஷாவொன்று ஏற்பட்டால் அந்த நல்லடக்கம் தொடா்பான ஒழுங்கு விதிகளை பள்ளிவாயலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய நிறுவாகத்தின் இச்செயற்பாடு மக்களிடையே வரவேற்பை பெற்றுனள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலின் ஜனாஷா நல்லடக்கம் தொடர்பான ஒழுங்கு விதிகளும் தீர்மானங்களும்

1. ஜனாஷா ஏற்பட்டவுடன் ஓட்டமாவடி ஜூம்ஆப் பள்ளிவாயலில் அறிவிப்புச் செய்வதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளல்.

2. கப்ரு தோண்டுவதற்கு குடும்ப உறுப்பினர்களோ அல்லது பள்ளிவாயலிலுள்ள வேலையாட்களையோ பயன்படுத்தி மேற்கொள்ளலாம் அதற்குரிய உபகரணங்கள் பள்ளிவாயலில் உண்டு.

3. ஜனாஷா தொழுகையானது குடும்ப உறவினர் ஒருவரினால் தொழுவிக்கப்படல் வேண்டும். உறவினர் முன்வராத பட்சத்தில் இப்பள்ளிவாயல் இமாம் அவர்களால் தொழுகை நடாத்தப்படும்.

4. ஜனாஷா தொழுகையின் பின்னர் கூட்டு துஆ ஓதப்படும் இதனை ஜனாஷாவின் குடும்ப உறுப்பினர்கள் தவிர்க்குமாறு வேண்டினால் கைவிடப்படும்.

5. ஜனாஷா நல்லடக்கத்தின் பின்னர் பேஷ் இமாம் அவர்களால் பயான் நடாத்தப்பட்டு ஜனாஷாவிற்கான தனிப்பட்ட முறையில் துஆப் பிரார்த்தனையும் நடைபெறும். நல்லடக்கத்தின் பின்னர் குடும்பத்தினர் சார்பாக பயான் நிகழ்ச்சியை நடாத்த வேண்டுமானால் பேஷ் இமாமோடு கலந்துரையாடி முன்கூட்டியே அனுமதியைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

நிருவாகம்

ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here