சிறுவன் அஸ்லம் முகம்மட் சயாம்யின் சத்திரசிகிச்சைக்காக உதவுவோம்.

0
870

கொடிய தலசீமியா நோயில் இருந்து விடுபட உதவிக்கரம் நீட்டுங்கள் என்பு மச்சை மாற்று சத்திரசிகிச்சைக்காக 3838000 நிதி தேவைப்படுகின்றது.

வவுனியாவைச் சேர்ந்த அஸ்லம் முகம்மட் சயாம் வயது 4.1/2.  இந்த சிறுவனின் நோய் தலசீமியா எனும் நிரந்தர நோய் இதை முற்று முழுதாக குணப்படுத்தக் கூடிய எந்த தீர்வும் இலங்கையில் இல்லை இந்த நோயுடைய குழந்தைகளுக்கு இரும்பு சத்து அதாவது கீமோ குளோபின் (HB) அளவு குறைந்து விடும் அதை சரி செய்வதற்கு ஒவ்வொரு மாதமும் இரத்தம் மூலம் அவர்களின் உடம்பில் உட்செலுத்தப்படும் இது ஒவ்வொரு மாதமும் 5 அல்லது 6நாட்கள் வைத்தியசாலையில் தங்கி இருந்து இதற்கு சிகிச்சை எடுக்க வேண்டும் இது போக 3 அல்லது 4 மாதங்களுக்கு பிறகு கண், காது, இருதயம், கல்ஈரல். ஏனைய உள் உறுப்புக்கள் வரை பரிசோதிக்க வேண்டும். ஏன் என்றால் இவர்களுக்கு இரத்தத்தின் மூலம் செயற்கையாக உட் செலுத்தப்படும் கீமோ குளோபின் இரும்பு சத்து இவர்களின் மேற் கூறிய உறுப்புக்களில் படிந்து அந்த உறுப்புக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

நம் எல்லோருக்கும் உணவு மூலம் கிடைக்கும் இரும்பு சத்து தன்னியங்கியாக சுழற்சி முறையில் செயற்படும் இவர்களுக்கு அப்படி அல்ல இவர்கள் உணவு மூலம் உள் எடுக்கும் இரும்பு சத்தை தன்னியங்கி மூலம் செயற்படுத்தும் முறை இந்த நோயாளிகளுக்கு கிடையாது. அதனால் மேற்கூறிய உறுப்புக்களை பரிசோதிக்க வேண்டும் இதுவும் போக இன்னும் ஒரு பெரிய கஸ்டத்தையும் இவர்கள் அனுபவிக்க வேண்டும் அதாவது இவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை காரணமாக கல்ஈரல் வழமைக்கு மாற்றமாக பெரிதாகும் இதை குறைக்க ஒரு நாளைக்கு 8மணித்தியாலம் ஊசி மூலம் வயிற்றில் பம் ஒன்று பொருத்தப்படும் இதற்கும் சரிவரவில்லை என்றால் கல் ஈரல் வெற்றி அகற்றபடும் நிலமையும் இவர்களுக்கு ஏற்படும் கொடிய நோய்களில் இதுவும் ஒன்று இதை நான் இவ்வளவு தெளிவாக எழுதுவதற்கு காரணம் எனது 9 வயது மகனும் இதே கொடிய நோயினால் அவஸ்த்தைப் பட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புகளுக்கு:-0711500517
0711064038
மக்கள் வங்கி:- 009200164509160.

இலங்கை வங்கி:-71082828

தகவல்.
ஏ.எல்.சமீம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here