வாழைச்சேனை – மாவடிச்சேனையில் டெங்கொழிப்பு வேலைத்திட்டம்.

0
237

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட   மாவடிச்சேனை 208A கிராம சேவகர் பிரிவில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் கி.சே. பிரிவிலுள்ள வீடுகள், பாடசாலை, பொதுத்தளங்கள் என பல இடங்களில் கள விஜயம் மேற் கொள்ளப்பட்டதுடன் சிரமதான நிகழ்வும் இன்று 2018.03. 24ம் திகதி சனிக்கிழமை இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர், பொதுச் சுகாதார பரிசோதகர், கிராம அபிவிருத்தி ,விளையாட்டு கழக, இளைஞர்கள் கழக உறுப்பினர்கள், பள்ளிவாயல் போன்றவற்றின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் டெங்கு பரவும் இடங்கள் அடையாளங்காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் விழிப்பூட்டலும் வழங்கப்பட்டது.

தகவல்.
ஏ.எல்.சமீம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here