ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் டெங்கொழிப்பு வேலைத்திட்டம்.

0
333

-எச்.எம்.எம்.பர்ஸான்-

கோறளைப்பற்று மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் பெருகிவரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்காக வேண்டி டெங்கொழிப்பு வேலைத்திட்டம் இன்று (25) ம் திகதி இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினரும் ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழக தலைவருமான  யூ.எல்.அஹமட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் வேலைத்திட்டத்தில் டெங்கு நோய் பரவக்கூடிய இடங்களை சுத்தம் செய்து அந் நோய் பற்றியும் அதனால் ஏற்படும் விபரீதங்கள் பற்றியும் மக்களுக்கு விழிப்பூட்டல் செய்யப்பட்டது.

இவ் வேலைத்திட்டத்தில் கழக உறுப்பினர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு ஒத்துழைப்புக்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here