அரசாங்கத்திற்கு எதிராக செயற்படத் தயார் – சரத் பொன்சேகா

0
147

தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதில் பின்வாங்கும் பட்சத்தில், அரசாங்கத்துக்கு எதிராக செயற்படத் தாம் தயார் என, பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கும் விடயத்தில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாகவும், அவர் இன்று கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் குறிப்பிட்டுளள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவர முயற்சிப்பது தொடர்பில், கடந்த 3 மூன்று வருடங்களாக தாம் அறிவுறுத்தி வருகின்றபோதிலும், அது தொடர்பில் தலைவர்கள் எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை எனவுமம் அவர் சுட்டிக்காட்டினார்.

(TM)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here