திருக்கோவிலில் சஜித் பிரேமதாசாவினால் வீட்டுத்திட்டம் திறந்துவைப்பு.

0
260

(அஷ்ரப் ஏ சமத்)

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் 50 வது சங்காமான் கண்டி கிராமம் ” திருக்கோவில் பிரதேச செயலாளா் பிரிவில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது

இவ் வீடமைப்பு திட்டம் திறந்து வைக்கும் நிகழ்வின்போது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் அமைச்சாினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சங்கமன் பிரதேசத்தில் வீடுகளற்ற 25 தமிழ் குடும்பங்கள் வீடுகளைப் பெறுகின்றனா். அத்துடன் இவ் வீட்டுரிமையாளா்களுக்கான இலவச காணிகளுக்கான உறுதிகளும் வழங்கப்படும். அத்துடன் 100 குடும்பங்களுக்கு 100 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுக்கடன்களுக்கான காசோலை வழங்குதல், ”சில்பி சவிய” எனும் நிர்மாணத்துறையில் 100 இளைஞா் யுவதிகளுக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்படும். ”சொதுரு பியச” வீடமைப்புக் கடன் திட்டத்தின் கீழ் 50 குடும்பங்களுக்கு 100 இலட்சம் ரூபா வீடமைப்புக் கடன்கள் வழங்கி வைக்கபடும். 250 குடும்பங்களுக்கு 1250 மாமரக் கன்றுகள் வழங்கிவைக்கப்படும். அத்துடன் நிரமாணத் தொழில் பயிற்சியில் அளிக்கப்பட்ட 80 பேருக்கு நிர்மாணத்துறை அதிகார சபையினால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்ட்டன.

இந் நிகழ்வில் அமைச்சா் தயாகமகே, பாராளுமன்ற உறுப்பிணரான க. கோடீஸ்வரன், 
மாவட்ட அரசாங்க அதிபா், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் எஸ்.பல்ன்சூரியவும் கலந்து சிறப்பித்தாா்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here