வரலாற்றில் முதல்தடவையாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கண்ணில் வெண்புரை கண்டறிதல் சிகிச்சை முகாம்.

0
248

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)    

இலங்கை கண் வைத்திய நிபுணர்கள் சங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக கண்ணில் வெண்புரை கண்டறிதல் சிகிச்சை முகாம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் நேற்று திங்கட்கிழமை முழுநேரமாக நடைபெற்றது.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் நடைபெற்ற சிகிச்சை முகாமில் இலங்கை கண் வைத்திய நிபுணர்கள் சங்க தலைவரும், கண் வைத்திய நிபுணருமான வைத்தியர் நளின் ராஜகருல மற்றும் சங்கத்தின் இணைப்பாளர், கண் வைத்திய நிபுணருமான வைத்தியர். திருமதி.எஸ்.வானகல ஆகியோர் தலைமையிலான கண் வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவினர்களினால் கண்ணில் வெண்புரை கண்டறிதல் தொடர்பான சிகிச்சை முகாம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற கண் கிச்சை முகாமில் இருநூறுக்கு மேற்பட்ட கண் நோயாளர்கள் பரிசோதிக்கப்பட்டதுடன், இதில் ஐம்பது பேருக்கு கண் வில்லைகள் ஏப்பிரல் மாத இறுதியளவில் சத்திர சிகிச்சை இடம்பெறுமென இலங்கை கண் வைத்திய நிபுணர்கள் சங்க தலைவரும், கண் வைத்திய நிபுணருமான வைத்தியர் நளின் ராஜகருல தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here