கா.பொ.த. சா/தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ, மாணவிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் – ஷிப்லி பாறூக்

0
285

(எம்.ரீ. ஹைதர் அலி)

2017ஆம் ஆண்டு நடைபெற்ற கா.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

மேலும், இப்பரீட்சையில் சித்தியடைந்து கா.பொ.த. உயர்தரப் பிரிவில் கல்வி கற்பதற்கு தெரிவான மாணவ, மாணவிகள் தமது துறைகளில் சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி தமது துறைகளில் சிறப்புற்று நிபுணத்துவம் அடைந்து தங்களது பிரதேசங்களுக்கும், இந்நாட்டிற்கும் சிறந்த சேவைகளை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு அனைவருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என மனமார வாழ்த்துவதாகவும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தனது வாழ்த்துச் செய்தியில் கா.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் எமது மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதேபோன்று எமது மாகாணம் மற்றும் நாடளாவிய ரீதியிலும் சிறந்த சித்தியுடன் உயர்தரத்தில் வைத்திய துறை, பொறியியல் துறை, தொழிநுட்பத் துறை, முகாமைத்துவ வர்த்தக துறை மற்றும் கலைத்துறை, ஆகிய துறைகளுக்கு பல மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற்று தெரிவாகியுள்ளனர். என்பது ஓர் மகிழ்ச்சிகரமானதும், பெருமை சேர்க்கக் கூடியதொரு விடயமாகவும் உள்ளது.

இம்மாணவர்கள் இப்பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரத்திற்கு தெரிவாவதற்கு உறுதுணையாக இருந்த பாடசாலைகளின் அதிபர்கள், கற்பித்த ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நழ்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதே நேரம் க.பொ.த. உயர்தரத்தில் கல்வி கற்பதற்கு தெரிவு செய்யப்படாத மாணவ மாணவியர்களுக்கும் எனது வருத்தத்தினை தெரிவித்துக் கொள்வதோடு, அவர்கள் சோர்ந்து துவண்டு விடாமல், மீண்டும் முயற்சி செய்து கா.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றி தனது ஆற்றலினை வெளிப்படுத்தி நல்ல பெறுபேறுகளை பெற்று உயர் கல்விகளை கற்க வேண்டுமெனவும் அல்லாஹ்வை பிரார்த்தித்தவனாக வாழ்த்துகின்றேன் என தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here