நிந்தவூர் பிரதேசசபையினை மு.கா வெற்றி பெற்றது. ஆனாலும் புதிய தேர்தல் முறைமை ஆட்சி அமைப்பதனை தடுத்துவிட்டது.

0
202

(முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது)

நடந்துமுடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசசபையில் மு.கா பாரிய சதிகளுக்கு மத்தியில் வெற்றி பெற்றது. ஆனாலும் புதிய தேர்தல் முறைமை ஆட்சி அமைப்பதனை தடுத்துவிட்டது.

எட்டு வட்டாரங்களைக்கொண்ட அச்சபையில் ஆறு வட்டாரங்ககளை மு.கா கைப்பேற்றியதுடன் அதிகூடுதலான மொத்த வாக்குகளையும் மு.காங்கிரசே பெற்றிருந்தது.
அதில் ஏனைய இரண்டு வட்டாரங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும், மயில் சின்னத்தில் போட்டியிட்ட ஹசனலியின் ஐக்கிய சமாதான கூட்டமைப்பும் தலா ஒவ்வொரு வட்டாரங்களை கைப்பேற்றியது.

நிந்தவூரில் தொண்ணூறு சதவீதமான வாக்குகளை மு.கா பெற்றுக்கொள்வது வழமையாகும். ஆனால் இந்த தேர்தலில் அவ்வாறு முடியவில்லை. மு.கா செயலாளராக இருந்த ஹசனலியும், பிரதேசசபை தவிசாளராக இருந்த தாஹிரும் கட்சியைவிட்டு வெளியேறி மு.காங்கிரசுக்கு எதிராக இருந்ததே இதற்கு காரணமாகும்.
பதின்மூன்று ஆசனங்களைக்கொண்ட சபையை ஆட்சி அமைப்பதென்றால் ஏழு ஆசனங்களை பெறவேண்டும். அதில் மு.காங்கிரசுக்கு ஆறு ஆசனங்களும், ஐக்கிய சமாதான கூட்டமைப்புக்கு ஐந்து போனசுடன் ஆறு ஆசனங்களும் கிடைக்கப்பெற்றது. இதில் சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினரே ஆட்சியினை தீர்மானிக்கின்ற நபராக காணப்பட்டார்.

அவரை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கான பண பலம் மு.காங்கிரசிடம் இருக்கவில்லை. ஆனாலும் என்ன விலைகொடுத்தாவது மு.காங்கிரசை அழிக்க வேண்டும் என்று வரிந்துகட்டிக்கொண்டு திரிகின்ற சக்திகள் மு.கா ஆட்சி அமைப்பதனை தடுப்பதற்கு தேவையான அனைத்து அனுசரணைகளையும் வழங்கியது.

ஆனாலும் தேர்தல் வியூகங்களை சரியாக செய்திருந்தால் எவ்வளவுதான் பணத்தினை வாரியிறைத்தாலும் மு.கா தவிர்ந்த வேறு எந்த சக்தியாலும் ஆட்சி அமைத்திருக்க முடியாது.
அந்தவகையில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனுக்கு எந்தவொரு முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை. இத்தேர்தலில் அவர் போட்டியிட அதிகம் ஆர்வம் காட்டியிருந்தும் பிரதியமைச்சரின் ஆசீர்வாதம் இருக்கவில்லை.
அவ்வாரில்லாவிட்டாலும் பருவாயில்லை, அவரை தேர்தல் நடவடிக்கை குழுவுக்கு பொறுப்பாக நியமித்திருந்தாலும் இன்னும் முஸ்லிம் காங்கிரசுக்கான வாக்குகளை அதிகரிக்க செய்திருக்கலாம்.

அத்துடன் ஹசனலியின் சகோதரரான ஜப்பார் அலியின் மரணமும் மு.காங்கிரசுக்கு பேரிழப்பாகும். மர்ஹூம் ஜப்பாரலியின் மத்திய வட்டாரத்தில் மு.கா தோல்வியடைந்தது.
அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் வெற்றிபெற்ற மீராநகர் வட்டாரத்திலும் மு.கா சார்பில் பலமிக்க வேட்பாளர் இறக்கப்படவில்லை.
மட்டுமல்லாது பிரதியமைச்சரின் செயலாளர் ஒருவர் மீது கொண்ட வெறுப்புக்களும் சிலரை கட்சியைவிட்டு தூரத்தில் நிறுத்திவைத்துள்ளது.

எனவே நிந்தவூர் பிரதேச சபையினை மு. காங்கிரஸ் இழந்தமைக்கு புதிய தேர்தல் முறைமை மட்டும் காரணமல்ல. மு.காங்கிரசை அழிக்க நினைக்கும் பேரினவாத சக்திகளும், அவர்களுக்கு துணைநிக்கின்ர எமது பண பலம் கொண்ட அரசியல்வாதிகளின் சதித்திட்டமும் பிராதான காரணமாகும்.

இருந்தாலும் அதனை ஈடுகொடுக்கக்கூடிய விதத்தில் மு.கா உள்ளூர் அரசியல்வாதிகளின் அரசியல் வியூகங்களில் ஏற்பட்ட குறைபாடுகளும் முக்கிய காரணமாகும். இதற்கான அனைத்து பொறுப்புக்களையும் பிரதி அமைச்சரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here