ஓட்டமாவடி – மீராவோடை உம்மு சுலைம் மகளிர் அரபுக்கல்லூரிக்கு புதிய மாணவிகளைச் சேர்த்தகொள்வதற்கான நேர்முகப்பரீட்சை.

0
140

அல்குர்ஆன் சுன்னா வழியில் மகளிருக்கு இஸ்லாமிய போதனைகளை வழங்கி இஸ்லாதை கற்றறிந்த ஆலிமாக்களாகவும் தாயியாக்களாகவும் உருவாக்கும் நோக்கில் உம்மு சுலைம் மகளிர் அரபுக்கல்லூரி எம்.பீ.ஸீ.எஸ் வீதி, மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயலில் வெள்ளி தவிர்ந்த ஏனைய நாட்களில் முற்பகல் 07.30 மணி முதல் பிற்பகல் 05.00 மணி வரை கடந்த இரு வருடங்களாக மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றது அல்ஹம்துலில்லாஹ்.

மேற்படி கல்லூரிக்கு புதிய மணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுகின்றது. இதற்கான நேர்முகப்பரீட்சை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 03.04.2018ம் திகதி செவ்வாய்க்கிழமை கலை 09.00 மணி முதல் எம்.பீ.ஸீ.எஸ் வீதிஇ மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது.

தகமைகள் :
2016 / 2017ல் க.பொ.த சாதாரண தரத்திற்கு தோற்றியிருத்தல்.

அல்குர்ஆனை நன்கு சரளமாக ஓதத்தெரிந்திருத்தல்.

இஸ்லாமிய ஒழுக்க முறைகளைக் கடைப்படிப்பவராகவும் தஃவா பணியல் ஆர்வமுடையவராகயிருத்தல்.

தேக ஆரோக்கியமுடையவராகயிருத்தல்.

18 வயதிக்குட்பட்டவராகயிருத்தல்.

மேலதிக தகவல்களுக்கு எம்.பீ.ஸீ.எஸ் வீதி, மீராவோடையில் அமைந்துள் ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய – கல்குடாவின் அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here