நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக பிரதமரை பதவி நீக்குவதற்கு கடுமையாக செயற்படுகள்.

0
149

கண்டி, திகன பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தை கூட்டு எதிர்க்கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது சுமத்தும் தோல்வியான முயற்சியில்  சில தரப்பினர் ஈடுபட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறியுள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைக் கூறினார்.

இதேவேளை அந்த ஊடக சந்திப்பில் பங்கேற்றிருந்த ரோஹித அபோகுணவர்தன பேசும்போது, மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரமே இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரக் காரணம் எனக் கூறினார்.

எதிர்வரும் 04ம் திகதி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை ஊடாக பிரதமரை பதவி நீக்குவதற்கு கடுமையாக செயற்படுவதாக அவர் கூறினார்.

(அட)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here