கல்முனையில் முஸ்லிம் காங்கிரசுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏன் ஆதரவு வழங்கவில்லை ?

0
283

(முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது)

இந்நாட்டு சிறுபான்மை மக்கள் மத்தியில் பலதரப்பட்ட அரசியல் கட்சிகள் இருந்தாலும், இரு சமூகங்களின் ஏக பிரதிநிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசுமே உள்ளது.
இதனால் இரண்டு சிறுபான்மை மக்களுக்கிடையில் இருக்கின்ற பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வுகள் விடயத்திலும் புரிந்துனர்வோடு தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் செயல்பட்டு வருகின்றது.

அப்படியிருந்தும் பொத்துவிலில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபையினை ஆட்சி அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர், கல்முனையில் அவ்வாறு ஏன் ஆதரவு வழங்கவில்லை என்ற கேள்வி எழுகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. அதில் பிரதானமானதுதான் இலங்கை தமிழரசு கட்சியாகும். ஏனைய கட்சிகள் முன்னாள் போராளிகள் இயக்கங்களாகும்.
அந்தவகையில் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் தலைமை வகிக்கின்ற இடங்களில் முஸ்லிம் காங்கிரசுக்கே ஆதரவினை வழங்குகிறார்கள்.

ஆனால் கல்முனையில் உள்ள ஏழு மாநகரசபை உறுப்பினர்களில் பிரதானமானவர்கள் டெலோ இயக்கத்தை சேர்ந்தவர்கள். அதனாலேயே முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கைகள் விடுத்ததுக்கு அவர்களால் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
டெலோ இயக்கத்தின் தலைவரான செல்வம் அடைக்கலநாதன் மன்னார் மாவட்டத்தின் விடத்தல் தீவை சேர்ந்தவர். அவருக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும் இடையில் நீண்டகால உறவுகள் உள்ளது. அது சாதாரணமான உறவு அல்ல. குடுக்கல் வாங்களுடன் கூடிய வர்த்தக உறவாகும்.
நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரசின் மரச்சின்னத்திலும், ஏனைய சபைகளில் தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்திலும் இரு கட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது என்று சம்பந்தன், மாவை, சுமந்திரன், சார்ள்ஸ் ஆகியோருடன் நடாத்திய பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு காணப்பட்டது.
அந்த உடன்பாட்டுக்கமைவாக தேர்தல் உடன்படிக்கை செய்வதற்காக மு.கா செயலாளர் நிசாம் காரியப்பர் ஹெலிக்கொப்டரில் மன்னாருக்கு சென்றிருந்தார். ஆனால் அங்கு பலமணி நேரங்கள் காத்திருந்தும் எந்தவித ஒப்பந்தங்களும் செய்யாமல் திரும்பியிருந்தார்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் தனது நண்பர் செல்வம் அடைக்கலநாதன் மூலமாக வழங்கிய அழுத்தமே இந்த நிலைமைக்கு காரணமாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் டெலோ இயக்கம் பிரதானமான கட்சியாக இருப்பதனால் அதன் தலைவர் அடைக்கலநாதனை பகைத்துக்கொள்ள தமிழரசு கட்சியினர்கள் விரும்பவில்லை.
அந்தவகையிலேயே கல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூலமாக தெரிவானவர்களில் ஹென்றி மகேந்திரன் உட்பட நான்கு பேர்கள் டெலோ இயக்கத்தை சேர்ந்தவர்கள். அதனால் அடைக்கலநாதனின் உதவியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஏழு உறுப்பினர்களையும் சேர்த்து சாய்ந்தமருது சுயட்சைக்குழு உறுப்பினர்களின் துணையுடன் கல்முனை மாநரசபையை கைப்பேற்றுவதற்கு அமைச்சர் றிசாத் கடும் பிரயத்தனம் மேற்கொண்டார்.

எனவே அமைச்சர் றிசாத் அவர்கள் டெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் உதவியுடனேயே கல்முனையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்களை முஸ்லிம் காங்கிரசுடன் சேரவிடாது தடுத்ததுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உதவியுடன் கல்முனை மாநகரசபையை ஆட்சி செய்ய எடுத்த பாரிய முயற்சியில் தோல்வியடைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here