ஓட்டமாவடி – அல் மஜ்மா கிராமத்தில் மாதர் சங்கம் உதயம்!

0
272

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அல் மஜ்மா கிராமத்தில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏற்பாட்டில் மாதர் கிராம அபிவிருத்தி சங்க அங்குராப்பண பொதுக்கூட்டமும் நிர்வாக தெரிவும் மஜ்மா மேற்கு ஜும்மா பள்ளிவாயல் வளாகத்ததில் நேற்று  இடம்பெற்றது.

இக்கூட்டத்திற்கு கோ.ப.மேற்கு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.துஸ்யாநந்தன், கிராம சேவகர் ஏ.எல்.எம்.றிஸ்மின், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.இர்பான், கிராம அபிவிருத்தி சங்க உருப்பினர்கள் உட்பட பெரும் திரளான மாதர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகத்தினர் பின்வருமாறு

தலைவர் ஐ.சம்ரோஸ், செயலாளர் என்.ஏ.பேகம், பொருளாலர் எஸ்.ஐ.நபீரா, உப தலைவர் என்.பாத்தும்மா, உப செயலாளர் ஏ.எல்.ஹசைனிய, உறுப்பினர்கள் எம்.ஐ.றகுமதும்மா, எம்.என்.சஹானா, எச்.எல்.மக்கியா, எ.எம்.ரூபியா, யூ.எல்.றஸ்லியா, யூ.எல்.ஹஜாரா வீவீ, எ.பி.கதீஜா உம்மா ஆகியோர்களோடு சங்கத்தின் கணக்காய்வாளாராக ஆபூபக்கர் மாஜிதாவும் சங்கத்தின் ஆலோசகராக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரும் தெரிவு செய்யப்பட்டனர்.

(ஏ.எல்.சமீம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here