ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் க.பொ.த சா/தரப் பரீட்சையில் 9 பாடங்களிலும் ஏ பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு கௌரவிப்பு.

0
368

-எச்.எம்.எம்.பர்ஸான்-

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளில் இம்முறை க.பொ.த சா/தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் ஏ சித்தி பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (8) ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கல்குடா சைடா அமைப்பின் ஏற்பாட்டில் ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் அனுசரணையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே. றகுமான் அவர்கள் கலந்து கொண்டதோடு ஏனைய அதிதிகளாக கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவரும் கலாசார உத்தியோகத்தருமான ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி, தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் அதிபர் எம்.பீ.எம்.இஸ்மாயில் மதனி மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இம்முறை வெளியாகிய பெறுபேற்றின் படி ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் எட்டு மாணவர்களும், ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவில் இரண்டு மாணவிகளும், வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் ஒரு மாணவியுமாக கோட்டத்தில் மொத்தமாக அனைத்துப் பாடங்களிலும் ஏ பெறுபேறுகளை பதினொறு மாணவ மாணவிகள் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here