மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தின் 11வது பரிசளிப்பு விழா

0
300

(அபூ அனூஸ்) 

மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தின் 11வது பரிசளிப்பு விழா 11.04.2018 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரியின் அதிபர் ஜனாப் ஏ.எல். அபுல்ஹஸன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ. அமீஸ்தீன் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எல்.ஏ. ஜுனைட், கோரளைப்பற்று மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே. ரஹ்மான், மற்றும் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச பாடசாலை அதிபர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதன் போது கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கல்வியிலும், இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் சிறந்து விளங்கி பல்கலைக்கழகம், கல்வியல் கல்லூரிகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் பரிசில்கள் வழங்கி பாராட்டப்பட்டதுடன், உயர் பதவிகள் பெற்று இப்பாடசாலைக்கு பெருமை சேர்த்த பழைய மாணவர்களும் கெரவிக்கப்பட்டனர்.

மாணவர்கள், மற்றும் பழைய மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகள் இடம் பெற்றதுடன், இப்பாடசாலையில் கற்ற பழைய மாணவர்கள் அநேகர் இதன் போது பிரசன்னமாயிருந்ததும் சிறப்பம்சங்களாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here