வாழைச்சேனை அந்நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு மற்றும் பாராட்டு விழா.

0
134

(யூ.எல்.எம். சாஜஹான் நஹ்ஜி)

வாழைச்சேனை அந்நஹ்ஜதுல் இஸ்லாமியா அரபுக் கல்லூரியின் ஆறாவது மெளலவி, ஹாபிழ் பட்டமளிப்பு மற்றும் பாராட்டு விழா இன்ஷா அல்லாஹ் நாளை (13) ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

கல்லூரியின் தலைவர் அல்ஹாஜ் எம்.எச்.முகம்மத் அவர்களின் தலைமையில் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். றஹ்மத்துல்லாஹ் (அல்-பலாஹி) அவர்களின் முன்னிலையில் நடைபெறவுள்ள இவ் விழாவில் பட்டம் பெற்று வெளியாகும் அல் ஆலிம் மற்றும் அல் ஹாபிழ் ஆகியோர்கள் கெளரவிக்கப்படவுள்ளனர்.

மாணவர்களின் இஸ்லாமிய கலை கலாசார நிகழ்ச்சிகளோடு நடைபெறவுள்ள இவ் சிறப்பு நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here