தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

0
31

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஐ.ரீ.அஸ்மி தனது கடமைகளை நேற்று வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் பிரதேச சபை செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜூத், பிரதேச சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் மற்றும் மத பெரியார்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது மத வழிபாடுகள் இடம்பெற்றதுடன், நிகழ்வில் கலந்து கொண்ட மத பெரியார்களுக்கு பிரதம அதிதி மற்றும் தவிசாளரால் நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here