பிரதேச சபையின் சொந்த வருமானத்தில் அபிவிருத்தி செய்ய முடியாது

0
373

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

கோறளைபற்று மேற்கு பிரதேச சபையினால் இந்த பிரதேசத்திற்கு ஆற்றப்பட வேண்டிய பணிகள் மலை போல் குவிந்து இருக்கின்றன. ஆனால் அதனை பிரதேச சபையின் சொந்த வருமானத்தினை மாத்திரம் கொண்டு நிறைவேற்ற முடியாது என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும். என்று கோறளை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் இலவத்தம்பி அமிஸ்டீன் (அஸ்மி) தெரிவித்தார்.

பிரதேச சபையில் கடமையினை நேற்று வியாழக்கிழமை பொறுப்பேற்றதன் பின்னர் உத்தியோகஸ்த்தர்கள் முன்னிலையில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது கிராமிய பொருளாதார பிரதி அரமச்சருமான கௌரவ எம்.எஸ்.எஸ்.அமிர்அலி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

வேறுபாடுகளுக்கு அப்பால் நாம் ஒன்றினைந்து பணியாற்றுவதன் மூலம் தேசிய அரசினதும் மாகாண அரசினதும் உதவிகளையும் சர்வதேச மற்றும் உள்நாட்டு அரசசார்பற்ற நிறுவணங்கள் அத்தோடு வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்வதன் மூலம் பிரதேச சபையின் இலக்குகளை அடைய நாம் அனைவரும் அர்பணிப்போடும் உள சுத்தியோடும் வெளிப்படை தன்மையோடும் கூட்டுப்பொறுப்போடும் மக்களக்கு பொறுப்புக் கூற கடமைப்பட்டவர்கள் என்பதையும் நாம் நமது கொள்கையாக கொண்டு பணிபுரிய வேண்டும் என்ற அவசியத்தினை பொறுப்புடன் இன்று வலியுறுத்திக் கூற விரும்புக்கின்றேன்.

இப்பிரதேச சபையின் தவிசாளராக உங்களை வழி நடாத்த வேண்டிய பொறுப்பினையும் இப்பிரதேசத்தின் தலைமகன் என்ற அடிப்படையில் பிரதேச சபைக்கும் கௌரவ மக்கள் பிரநிதிகளுக்கும் இப்பிரதேச மக்களுக்கும் தலைமைத்துவம் வழங்க வேண்டியதன் பொறுப்பை உணர்ந்தவனாக அல்லாவிற்கும் எனது மனசாட்சிற்கும் பயந்தவனாக எனது கடமைகளையும் பொறுப்புக்களையும் இன்சா அல்லாஹ் நிறைவேற்றுவேன் என்பதனை இந்த சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக உறுதிப்படுத்துகின்றேன்.

இப்பிரதேச சபையினால் ஆற்றப்பட வேண்டிய பணிகள் அனைத்தும் கௌரவ உறுப்பினர்கள் சமூகத்திலுள்ள துறைசார் நிபுனர்களையும் கொண்ட ஆலோசனை குழுக்கள் மூலம் பிரதேச சபை சட்ட வரம்பிற்குள் உட்பட்டு தீர்மானிக்கப்படும்.

நான் சார்ந்த அரசியல் கட்சியின் தலைமைக்கும் இப்பிரதேச பாராளுமன்ற உறுப்பினரும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான கௌரவ எம்.எஸ்.எஸ்.அமிர்அலி அவர்கட்கும் விசுவாசமாக செயற்படுவதோடு 1987 ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்திற்கும் நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் மாகாண சபைகள் சட்டத்திற்கும் நிதி நிர்வாக சட்டங்களுக்கும் அமைய இந்த சபையை வழி நடாத்தி கட்சி பேதங்களுக்கு அப்பால் அரசாங்கத்தினதும் மாகாண சபையினதும் ஏனைய தரப்பினரதும் ஒத்துழைப்புக்களை தயவுடன் கோருகிறேன்.

குறிப்பாக இப்பிரதேச சபையின் எல்லைக்குள் உள்ள பல தமிழ் கிராமங்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவ் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குவதை கண்கூடாக காண்கின்றோம்.இச்சபை எல்லைக்குள் உள்ள நகர பிரதேசங்களுக்கு சமமாக அப்பிரதேசங்களை முன்னுரிமை அடிப்படையில் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

மிக முக்கியமாக இப்பிரதேச சபையின் இன்றைய நிதி நிலவரத்தை அனைவரும் அறிந்திருப்பதும் அது பகிரங்கப்படுத்தப்பட்ட விடயமாக இருப்பது நல்லாட்சியின் முதல் அடையாளமாகும்.

சபையின் நிதி நிலவரத்தை சீர் செய்வதற்கு அவசரமாகவும் அவசியமாகவும் செய்யவேண்டிய நடவடிக்கைகக்கு சபையின் கொளரவ பிரதி நிதிகளும் உள்ளுராட்சி திணைக்களமும் உள்ளுராட்சி அமைச்சும் அரசியல் தலைமைகளும் அரசாங்கமும் இப்பிரதேச மக்களும் முளுமையான ஒத்துழைப்புக்களையும் பங்களிப்புக்களையும் உடனடியாக வழங்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இப்பிரதேச சபையை வழி நடாத்தவும் மீள் உருவாக்கம் செய்யவும் இப்பிரதேச மக்களின் பங்குபற்றுதலுடனான செயல் திட்டங்கள் இன்றியமையாததாகும்.மக்களுக்காக நாம் என்ற கோட்பாட்டை எமது ஆட்சி காலப்பகுதியில் முழுமையாக கடைப்பிடித்து பணியாற்றுவோம் என்பதையும் உறுதியாக கூறிக்கொள்கின்றேன்

மேலும் இப்பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் இந்து கிறிஸ்த்தவ பௌத்த மக்கள் அனைவருக்கும் எவ்வித பாகுபாடுகளோ வேறுபாடுகளோ இல்லாமல் ஒரே குடிமக்களாக கொண்டு இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசின் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு அமைவாகவும் எனது மனசாட்;சிக்கு விரோதம் இல்லாமலும் நானும் இச்சபையின் உத்தியோகஸ்த்தர்களும் ஊழியர்களும் பணியாற்ற பொறுப்புடன் செய்படுவேன் என்பதையும் தயவுடன் இன்று பதிவு செய்கின்றேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here