அடகு வைக்கப்படும் இலக்குகள்

0
239

(எம்.எம்.ஏ.ஸமட்)

பல்லின சமூகங்களைக் கொண்ட இந்நாட்டில் பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்களின் நலன்கள் பெருவாரியாக நிறைவேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. வாழ்விடத்துக்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும் அம்மக்கள் போராட வேண்டிய தேவையில்லை. ஏனெனில், இந்நாட்டை எவர் ஆண்டாலும் ஆளும் இனத்தின் அங்கத்தவர்களாகவே பௌத்த சிங்கள மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சில தேவைகள் நிறைவேற்றப்பட வில்லை அல்லது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லையென ஏதாவது ஒரு பிரதேசத்தில் வாழும் பௌத்த சிங்கள மக்கள் வீதிக்கு இறங்கி போராடினாலும், அப்போராட்டமானது வெவ்வேறு சக்திகளின் மறைமுக ஆதரவுடனும், ஊக்குவிப்புடனுமே நடந்தேறுகிறது என்பது வெள்ளிடைமலை. அண்மைக்காலமாக தலைநகர் கொழும்பிலும் அதன் அண்டிய பிரதேசங்களிலும் நடைபெறுகின்ற போராட்டங்கள் இவற்றிற்குச் சான்றுகளாகும்.

ஆனால், ஒட்டுமொத்த பௌத்த சிங்கள மக்கள் தங்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு விட்டது அல்லது மறுக்கப்படுகிறது. எங்களது வாழ்விடமும், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது அல்லது பறிபோகிறது என்பதற்காக நாட்டின் எந்தவொரு பகுதியிலாவது தொடராகப் போராடவில்லை.
ஆனால், இந்நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்கள் 1956ஆம் ஆண்டு முதல் இன்று வரை சமூகம் சார்ந்த உரிமைகளுக்காகப் தொடராகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அகிம்சைப் போராட்டங்கள் ஆயுதப் போராட்டமாக மாறி மீண்டும் அகிம்சைப் போராட்ட வழிக்குத்; திரும்பியிருக்கிறது.

கடந்த கால உரிமைப் போராட்டங்களினால் தமிழ் மக்கள் அழிவுகளை அதிகளவில் சந்தித்;திருக்கிறார்கள். கசப்பான பாடங்கள் பலவற்றைக் கற்றிருகிறார்கள். இருப்பினும், கற்றுக்கொண்ட பாடங்களின் வலிகளோடு எதிர்கால சந்ததிகளாவது இந்நாட்டில் நிம்மதியாக வாழ வேண்டும். அதற்கான தீர்வுகளை ஆளும் தரப்பிடமிருந்து எவ்வாறாயினும் பெற்றுக்கொள்ள வேண்டும். அவற்றிற்காக சில விட்டுக்கொடுப்புக்களையும் செய்தாக வேண்டும் என்ற கொள்கைக்கேற்ப தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில கட்சித் தலைமைகள் முன்வந்து செயற்பட்டுக் கொணடிருக்கிறார்கள்.

இருப்பினும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பலரினால் இக்கொள்கைச்சிந்தனை நீரோட்டத்தில் இணைந்து நீந்த முடியாதிருப்பதை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததன் பிற்பாடு எழுந்துள்ள விமர்சனங்கள் மூலம் அறிய முடிகிறது.

இருந்தபோதிலும், உள்நாட்டில் தமிழ் மக்களின் விடிவுக்கான ஆதரவும், சூழ்நிலையும் இல்லாவிடின் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக பிரச்சினைகளை சர்வதேசமயப்படுத்தி, சர்வதேச சமூகத்தின் கவனத்தை தம்பக்கம் ஈர்க்கச் செய்யும் செயற்பாடுகளிலும் தமிழ் தலைமைகள் செயற்படுபதையும் அவதானிக்க முடிகிறது. ஆனால், இக்கொள்கைப்போக்கு முஸ்லிம் தேசியத்தின் அரசியல், ஆன்மீக மற்றும் சிவில் சமூகத்திடம் முஸ்லிம் சமூகம்சார்ந்த இலக்குகளை அடைவதற்கான இதய சுத்தியுடனான கொள்கைப்பற்று காணப்படுகிறதாக என்ற கேள்வி எழுவைத் காண முடிகிறது.

முஸ்லிம் அரசியலும் இலக்குகளும்

அரசியல், சமூக, சமய, பொருளாதார ரீதியிலான அழுத்தங்களிலிருந்து முஸ்லிம்கள் விடுவிக்கப்பட்டு இந்நாட்டில் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ வேண்டும். அவ்வாறான வாழ்தலுக்கான உரிமையை உரியவர்களிடமிருந்து அரசியல் அதிகாரங்களினூடாக சமூகத்திற்கு பெற்றுக்கொடுப்பதை இலக்காகக் கொண்டே முஸ்லிம் சமூகம்சார் அரசியல் கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டன.
அவ்வாறுதான் மக்களை இறைவழியில் நல்வழிப்படுத்தி, நல்லவற்றை புரியும்படி ஏவி வாழ்நாட்களை இறைவனுக்கு மாறு செய்யாது, மனிதனுக்கு அநீதியிழைக்காது மனிப் புனிதர்களாக வாழ வைப்பதற்காகவே ஆன்மீக அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன.
ஆனால், இவ்விலக்குகள் ஒரு சுகபோகங்களுக்காக பல்வேறு பெயர்களில் அரசியல் தலைமைகளினாலும் மக்களை நல்வழிப்படுத்தும் ஆன்மீகவாதிகளினாலும் அடகு வைக்கப்படுவதான விமர்சனங்களைக் காண முடிகிறது. இலக்குகளை அடைந்துகொள்ளவதற்காக மக்களை இணைந்து செயற்பட வேண்டிய முஸ்லிம் அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் அவற்றிற்கு மாற்றமாக செயற்பட முற்பட்டதன் விளைவு பல்வேறு அழுத்தங்களை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வருகின்றன.
இந்நாட்டில் இரண்டாம் நிலைச் சிறுபான்மைச் சமூகமாக முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வாழும் இச்சமூகத்தின் மத்தியிலுள்ள பலருக்கு சமூகம் சார்ந்த விடயங்களில் இறந்த காலம் எதைக் கற்றுத்தந்தது. நிகழ்காலம் எதைக் கற்றுத்தந்து கொண்டிருக்கிறது. எதிர்காலம் எதைக் கற்றுத்தரப்போகிறது, எத்தகைய ஆபத்துக்களை எதிர்நோக்கவுள்ளது. வாழ்வுரிமை எந்நிலையயை அடையப்போகிறது என்ற உணர்வில்லாதவர்களாக, அவை குறித்து சிந்திக்காதவர்களாக சுயதேவைகளை அடைந்துகொள்ளும்; இலக்குகளுடன்; செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம் சமூகம்சார் இலக்குகளையும், நோக்கங்களையும் அடைந்துள்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், ஆன்மீக இயக்கங்களும், அவற்றின் இலக்குகளையும், நோக்கங்களையும் மறந்து குடும்பிச் சண்டடையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நடந்து முடிந்த உள்ளுராட்சி அச்சபைகளுக்கான தலைவர்களை தெரிவு செய்துகொள்வதில் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கிடையே இடம்பெற்றுவருகின்ற குத்துவெட்டுக்களும், நம்பிக்கைத் துரோகங்களும், வாக்குறுதி மீறல்களும் இவற்றிற்கு உதராணங்களாகவுள்ளதைக் காணலாம்.

சமூகம் எதிர்நோக்கியிருக்கின்ற ஆபத்துக்களிலிருந்து இச்சமூகத்தை எப்படிக் காப்பாற்ற முடியும், அதற்காக எத்தகைய நடவடிக்கைகளை ஒன்றுபட்டு முன்னெடுக்க வேண்டும்; என்று சிந்திக்காமல் அதற்காக கால நேரங்களையும், செல்வங்களையும், செல்வாக்குகளையும் பயன்படுத்தாமல் அதற்காக ஒன்றுபடாமல், பதவிகளுக்ளுக்காகவும், தனிநபர்நிகழ்ச்சி நிரல்களுக்காகவும், கட்சி அரசியலுக்காகவும், கொள்கை விருத்திக்காகவும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக்கொண்டும், காட்டிக்கொடுப்புக்களை மேற்கொண்டும், அசிங்கங்களை அரங்கேற்றிக்கொண்டும், வெற்று அறிக்கைகளை விடுத்துக்கொண்டும் செயற்பட்டுக்கொண்டிருப்பது முஸ்லிம் சமூகத்தை ஆரோக்கியமான வழியில் இட்டுச் செல்லாது.
பிறர் மீது ஏறிச் சவாரி செய்து தமது இலக்குகளை அடைந்து கொள்ள எத்தகைய வியுகங்களை வகுத்துச் செயற்பட முடியுமோ அவற்றைச் சாணக்கியமாகச் செய்து முடிப்பதில் அரசியல் கட்சிகளும், ஆன்மீக இயக்கங்களும், சமூக அமைப்புக்களும் காட்டும் அக்கறை, கடும்போக்காளர்களின் செயற்பாடுகளும், சமகால அரசியல் நகர்வுகளும் எத்தகைய நெருக்கடிகளை சமகால முஸ்லிம்களை மாத்திரமின்றி எதிர்கால சந்ததியினரையும்; எதிர்கொள்ளச் செய்யும் அவற்றிற்கு எவ்வகையில் முகம்கொடுக்க முடியும் என்பதை முன்னுரிமைப்படுத்தி செயற்படுவதாகக் காணவில்லை. மாறாக, முஸ்லிம் சமூகம் அரசியல் மற்றும்; ஆன்மீகத் தலைமைகளினால்; பேய்காட்டப்பட்டுக்கொண்டிருக்கிறாhகள் என்பதை அவர்களின் அறிக்கைகள் நன்கு புலப்படுத்துகின்றன.

உள்ளுராட்சி, மாகாண சபை தேர்தல் முறைமைத் திருத்தச்சட்டம் முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பலமுறை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தும், இத்திருத்தச்சட்டங்களுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்; எல்லோரும் கைகளை உயர்த்திவிட்டு பின்னர் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டியதையும் கடந்த காலங்களில் காண முடிந்தது.
புதிய அரசியல் நகர்வுகளினால் ஏற்படுகின்ற மாற்றங்கள் எத்தகை சாதக, பாத நிலைகளை சிறுபான்மை சமூகங்களில் ஒன்றான முஸ்லிம்களை எதிர்நோக்கச் செய்யும்? எந்தவகையில் பாதிக்கும்? அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாக உருவாக்கப்படவுள்ள அதிகாரப் பகிர்வுகள் முஸ்லிம்களுக்கு சாதகமாக அமையுமா? அல்லது பாதகமாக அமையுமா? இவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அவற்றுக்கு விடைகாண்பது எவ்வாறு என்று ஒன்றுபட்டு சிந்திக்க வேண்டி வேளையில், அவை குறித்து தங்களுக்குள் கூடி ஆரோக்கியமாக ஆராய வேண்டி நேரத்;தில், அவை தொடர்பில் சமூகத்தை விழிப்புணர்வூட்ட வேண்டிய தருணத்தில் அரசியல் கட்சிகளும், ஆன்மீக இயக்கங்களும்; அவற்றின் ஆதரவாளர்களும் தங்களுக்குள் குடும்பிச் சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை தினசரி சமூகவலைத்தள பதிவுகள் பறைசாட்டிக்கொண்டிருக்கின்றன.
தனிநபர் நிகழ்;ச்சி நிரல்களின் அடிப்படையில் சமூகத்தைக் கூறுபோடுவதற்காக அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும் இயக்கங்களும் செயற்படுவதும், அதன் விளைவாக ஏற்படும் கசப்பான சம்பவங்களும்;; சமூகத்தைக் கேவலமானதொரு நிலைக்குத் தள்ளியிருப்பதோடு; இனவாதிகளின் வெறுப்புப் பேச்சுக்களுக்கு ஆதாரவான நிகழ்வுகளாகவும் காட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் முஸ்லிம் சமூகம் ஒற்றுமை என்ற கயிற்றை இறுகிப்பிடிப்பதற்குப் பதிலாக அவற்றை அறுத்துக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அதன் தலைமைகளும் இயக்கங்களும்; சுய விசாரணை செய்ய வேண்டியதும் சமகால மற்றும் எதிர்கால சமூகத்தின் தேவை கருதி ஒன்றுபட வேண்டியதும் அவசியமாகவுள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் அரசியல், ஆன்மீக தலைமைகளின் ஒரு முகச் சரியையும் மறுமுகப் பிழையையும் முஸ்லிம் சமூகம் கண்டுகொண்டிருக்கிறது. சமூகத்திற்குள் அல்லது சமூகத்திற்கு வெளியிலிருந்து ஒரு பிரச்சினை வருகின்றனபோது அப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை உரியவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான முறைமைகளை ஏற்படுத்த வேண்டும். மாறாக தற்காலி நிவாரணத்தப் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிகளை முன்னெடுப்பதற்காக் வாயு நிரப்பிய சோட போத்தல்கள் போல செயற்பட்டு விட்டு ஓரிரு தினங்களில் அல்லது ஓரிரு வாரங்களில் மறந்துவிடுவதும், ததத்தமது அரசியல் நலன்களுக்காகவும், சுய விளம்பரங்களுக்காகவும் செயற்படுவதும் என்ற பரிதாபகரமான நிலையே முஸ்லிம் தேசியத்தில் தொடராக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

இப்பரிதாபகரமான சிந்தனைப் போக்கே முஸ்லிம் அரசியலில் மாத்திரமின்றி சில சிவில் அமைப்புக்கள் மத்தியிலும் மேலோங்கியிருக்கிறது. இவை சமூகம் சார்ந்த சகல விடயங்களையும் கேள்விக்குறியாக்கி சமூகத்தை எடுப்பார் கைப்பிள்ளையாக மாற்றிவிடும். இலக்குகளை அடகு வைக்கவும் செய்து விடும்.

சமகால அரசியல் நகர்வுகளின் மாற்றங்களின் தன்மைகள் குறித்து முஸ்லிம் சமூகம் வழிப்புணர்வூட்டப்படுவது காலத்தின் தேவையாகவுள்ளன. திட்டமிட்ட சதித்திட்டங்களை வெற்றிகொள்ள வேண்டுமாயின் சமூகம் விழிப்படைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்ற புரிதல் இன்னும் ஏற்படவில்லை என்பதே கவலையளிக்கக் கூடியவிடயமாகவுள்ளது.

சமூகத்தை விழிப்படையச் செய்வதோடு சமகால முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சவால்கள் அச்சவால்களை முறியடிப்பதற்கான இராஜதந்திர முறைiமைகளை வகுத்துச் செயற்பட வேண்டிய முக்கிய பொறுப்பை சிவில் சமூகங்களும் சுமந்திருக்கின்றன என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியது. சமூகத்தின் நலன்களில் அக்கறை கொண்டு சமூகப்பொறுப்பைச் சுமக்க சமூகத்தின் சிவில் அமைப்புக்கள் இதயசுத்தியுடன் முன்வருதும் காலத்தின் அவசரத் தேவையாகும் எனச் சுட்டிக்காட்டுவது பொறுத்தமாகும்.

சிவில் அமைப்புக்கள்;

சமகால தேசிய அரசியல் நகர்வுகளில்; முஸ்லிம் சமூகத்திற்குள்ள நன்மை தீமைகள், வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழுகின்ற முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற இனவாத நெருக்குதல்கள் உட்பட முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற அத்தனை பிரச்சினைகளும் பிராந்திய ரீதியான, கட்சி ரீதியான, ஆன்மீகக் கொள்கைகள் ரீதியான பிரச்சினைகளாக நோக்கப்படாது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் எதிர்நோக்கும் பிரச்சினைகளாக நோக்கப்படுவது அவசியமாகும்.

இவ்வசியத்தை நிறைவேற்ற வேண்டுமாயின் அரசியல், ஆன்மீகக் கொள்கைகள், பிராந்தியம் என்பவற்றைக் கடந்து ஒரே சமூகம் என்ற அடிப்படையில் இதயசுத்தியோடு, செயற்படக் கூடிய, எவற்றிற்கும் சோரம்போகாத, இலக்குகளை அடகு வைக்காத சமூக நலனை அடைவதை மாத்திரம் இலக்காகக்கொண்ட சிவில் அமைப்புக்கள் உருவாகுவதும் முக்கியமாகும்.

அந்தவகையில், சமூகத்தில், சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த மாற்றத்திற்காக கருத்து ஒருமைப்பாடுயுடையவர்கள் ஒன்றுபடுவதும் அவர்களை ஒன்றிணைப்பதும் அவசியமாகும். அதற்காக தங்களை மாற்றிக்கொண்டு அல்லது மாறியாவது பலமான சிவில் அமைப்பை உருhவக்க சமூக சிந்தனை கொண்டோர் முன்வர வேண்டுமென முன்னைய எமது பல கட்டுரைகள் முலம் அழைப்பு விடுக்கப்பட்டமையை இங்கு நினைவு படுத்துவது அவசியமாகவுள்ளது.

பூணைக்கு மணி கட்டும் முயற்சிகள் காலத்திற்குக் காலம் முன்னெடுக்கப்பட்டு, அவ்வாறு மணி கட்டப்பட்டு உருவாக்கப்பட்ட அமைப்புக்களினூடாக ஒரு சில பணிகள் முன்னெடுக்கின்ற போதிலும் அதன் தலைவர்களாகவும் பதவி நிலை உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்படுகின்றவர்கள் காலப்போக்கில் தமது இலக்குகளையும் நோக்கங்களையும் மறந்து அல்லது பதவிகளுக்குகாகவும்; சலுகைகளுக்காகவும் அவற்றை அடகு வைத்து கட்டிய மணியைக் கழற்றி விடுகின்றனர்.

இவ்வாறில்லாமல், இந்நாட்டில் வாழும் சமூகங்களில் முஸ்லிம்களும் தனித்துவ அடையாளங்களைக் கொண்ட சமத்துவமிக்க சமூகம் என்ற வகையில் புதிய அரசியல் மாற்றங்களினால் சமூகம் பாதிக்கப்படாமல் அதற்கான ஆரோக்கியமிக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிவில் சமூகங்கள் தங்களது பங்களிப்பை சமூகப் பொறுப்பாக உணர்ந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

முஸ்லிம்களின் வாழ்வியலுக்கான தனித்துவச் சட்டங்கள் நீக்கப்படுவதோ அல்லது முஸ்லிம்களின் சுயநிர்ணைய உரிமைகள் பறிபோகும் வடிவில் இவ்வரசியல் மாற்றங்கள் அமைந்துவிடுவதோ ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இந்நிலையில், அரசியல் மாற்றங்களின் நன்மைகளை முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் முழுமையான விழிப்புணர்வு நடவடிக்கையை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில்; இதய சுத்தியுடன் முன்னெடுப்பது அவசியமாகவுள்ளது.

அரசியல் தலைமைகளிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு இலக்குகளை மறந்தவர்களை அல்லது இலக்குகளை அடகு வைத்தவர்;களாக செயற்படுவதை விமர்சனம்; செய்யும் சமூகமாக முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் பயணிக்காது, சிவில் அமைப்புக்கள் சமூகப் பொறுப்பை சுமக்க வேண்டும். அதற்காக சமூகத்தை விழிப்படையச் செய்ய வேண்டும். சமூகம் விழிப்படையும்போதுதான் ஏமாற்றங்களைத் தவிர்க்க முடிவதோடு சுயநிர்ணைய உரிமையையைப் பெற்று சமத்துவத்தைத்துடன் வாழ்வதற்கான வழிகளை ஏற்படுத்திக்;கொள்ள முடியும். அழிவுகளிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதே யதார்த்தமாகும்.

வீரகேசரி – 13.04.2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here