ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கல்குடா ஜம்மியதுல் உலமாவிடம் கலந்துரையாடல்.

0
244

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் பதவியேற்றதன் பின்னர் முதலாவதாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் கல்குடா கிளையினரை சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டார்.

இச்சந்திப்பு நேற்று வியாழக்கிழமை இரவு ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கல்குடா ஜம்மியதுல் உலமா சபை தலைவர் மௌலவி ஏ.எல்.இஸ்மையில் தலைமையிலான உலமா சபை பிரதிகள், பிரதேச சபை செயலாளர் எச்.எம்.எம்.ஹமீம், உப தவிசாளர் யூ.எல்.அகமது லெவ்வை எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்குடா ஜம்மியதுல் உலமா சபையினரிடம் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி ஆறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதில் இஸ்லாமிய வாழ்க்கை முறையை மக்கள் முழுமையாக பின்பற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகளை உலமா சபையுடன் இணைந்து பிரதேச சபை மேற்கொள்ளல்.

கல்குடா முஸ்லிம் பிரதேசத்திற்கு ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதற்கு உலமா சபைக்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் வழங்குதல், பிரதேச சபையின் சட்ட திட்டங்களையும், நிருவாகத்தையும் நடாத்த தேவையான ஒத்துழைப்பையும், பங்களிப்புகளையும் உலமா சபை பிரதேச சபைக்கு வழங்க வேண்டும்.

மாதத்தில் ஒரு தடவை பிரதேச சபை நிருவாகம் மற்றும் உலமா சபையினர் கலந்து ஆலோசனை செய்தல், பிரதேசத்தில் அனைத்து போதைவஸ்து பாவனை, இஸ்லாமிய கலாச்சார சீரழிவுகளையும் தடுப்பதற்கு சமூக அமைப்புக்களுடன் சேர்ந்து உலமா சபையும், பிரதேச சபையும் விசேட வேலைத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தல்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருங்கிணைத்து வழி நடாத்துவதற்கு உலமா சபை உறுதுணை செய்ய வேண்டும் எனவும் தவிசாளர் உலமாக சபையிடம் குறித்த கோரிக்கைகளை முன்வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here