சுற்றுலாப் பயணிகளின் பணத்தை சூரையாடும் கோறளைப்பற்று பிரதேச சபை

Spread the love

(அபூ இன்ஷிபா) 

யுத்தகாலம் கடந்து சாதாரண சூழ்நிலை ஏற்பட்ட பின் பாசிக்குடா நோக்கி நாளாந்தம் மக்கள் வருகை தரும் இச்சந்தர்ப்பத்தில் அங்கு தரிப்பிடத்திற்காக நிறுத்தப்படும் வாகனங்களுக்கான கட்டணங்களாக ஆட்டோவுக்கு 40/= ரூபாயும் மோட்டார் சைக்கிளுக்கான கட்டணமாக 30/= ரூபாயும் அறவிடப்படுகிறது. எந்தவித கட்டமைப்போ பாதுகாப்போ அற்ற திறந்தவெளியில் கிடக்கும் வாகனங்களுக்கு இவ்வாறான தொகையொன்றை பெற்றுக்கொள்வது பகல் கொள்ளையாக தோன்றுகிறது என அங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அங்கலாய்க்கின்றனர்.

இது சம்பந்தமாக அங்கு பணத்தை அறவிடும் நபர்களிடம் வினவியபோது பிரதேச சபை பெருந்தொகை பணத்தை அதாவது முப்பது இலட்சம் பணத்தை வருடம் ஒன்றுக்கு அறவிடுகிறாரார்கள் நாங்களும் அந்தப் பணத்தை திரட்ட வேண்டும் ஆதலால்தான் அப்பணத்தினை மக்களிடம் அறவிடுகின்றோம் என தெரிவித்தனர்.

கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளரே மக்களின் பணத்தில் முறைகேடான அறவீடு நடைபெறுகிறது இது உங்களின் கவனத்திற்கு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*