(வீடியோ). மாகாண சபை தேர்தலில் உதுமான் கண்டு நாபீரை களமிறங்குமாறு பிரதேச மக்கள் வேண்டுகோள்.

Spread the love

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாத்)

நாடு தழுவிய ரீதியில் முக்கிய சமூக சேவைகள் அமைப்பாக செயற்பட்டு வரும் நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீரை வருகின்ற மாகாண சபை தேர்தலில் களமிறங்குமாறு அம்பாறை பிரதேசத்து மக்கள் பொறியியலாளர் உதுமான் கண்டு நாபீரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த வாரம் பெளண்டேசனின் உத்தியோக பூர்வ காரியாலயத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை மற்றும் சாய்ந்தமருது பிரதேச அமைப்புக்களை சேர்ந்த மக்களே மேற்கண்டவாறு தங்களது வேண்டுகோளினை பொறியியலாளரிடம் முன்வைத்தனர். அத்தோடு தாங்கள் எந்த கட்சியில் களமிறங்கினாலும் தங்களது ஆதரவினை தருவதாகவும் வெற்றிக்காக உழைப்பதாகவும் தெரிவித்த மக்கள் சம காலத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் களமிறங்குவதே மிக பொறுத்தமான விடயமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*