எஸ். பி. சி தாஸிமின் மறைவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம்

Spread the love

மாளிகாவத்தை வை எம் எம் ஏ தேசிய கவுன்ஸிலின் ஸ்தாபகரும் நாடறிந்த சமூக சேவையாளருமான எஸ். பி. சி தாஸிமின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மீடியா போரம் விடுத்துள்ள அனுதாப செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் அல்ஹாஜ் எஸ். பி. சி ஹலால்டீனின் மூத்த சகோதரரான மர்ஹூம் தாஸிம் அவர்கள் போரத்தின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு பங்களிப்புக்களை வழங்கியுள்ளார்.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களின் எதிர்கால நலனுக்காக பாடுபட்ட இவர் மாளிகாவத்தையில் வை. எம். எம். ஏ (முஸ்லிம் வாலிபர் சங்க) தேசிய கவுன்ஸிலை ஸ்தாபித்து அதன் மூலம் தாய் நாட்டிற்கும் குறிப்பாக முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கும் பல்வேறு சேவைகளை ஆற்றிய சிறந்த ஒரு முன்னணி சமூக சேவையாளராவார்.

தனது சகோதரரான எமது போரத்தின் ஸ்தாபகர் எஸ் பி சி ஹலால்டீனின் மனைவியான இலங்கையின் முதலாவது பயிற்றப்பட்ட ஆசிரியை மர்ஹூமா பாத்துமுத்து ஹலால்டீனின் பெயரில் அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் வருடாந்தம் 50 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கு கல்விக்காக சேவையாற்றி வந்தமை குறிப்பிடதக்கது.

சவுதி அரேபியாவில் இஸ்லாமிய வங்கித்துறையில் நீண்ட காலம் சேவையாற்றி ஓய்வு பெற்ற இவர் கனடாவின் டொரொன்டோ நகரில் வாழ்ந்து வந்த நிலையில் தனது 77வது வயதில் 2018.04.17ஆம் திகதி இறையடிச் சேர்ந்துள்ளார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை மீடியா போரம் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது மண்ணறை வாழ்விலும் மறுமை வாழ்விலும் ஈடேற்றம் பெற்று உயர்ந்த சுவனத்தை அடைய பிராரத்திப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அனுதாப அறிவிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸாதிக் ஷிஹான்
பொதுச் செயலாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் 17.04.2018

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*