ஓட்டமாவடியில் கொள்ளைச் சம்பவம்: வீட்டிலிருந்த பணம் திருட்டு.

0
216

-எச்.எம்.எம்.பர்ஸான்-

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி எம்.கே வீதியிலுள்ள வீடொன்றில் 290,000 ரூபாய் பணத்தினை கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வீட்டு உரிமையாளர்கள் வழக்கம்போல் இரவு உறக்கத்துக்கு சென்று அதிகாலைவேளையில் எழும்பிப் பார்க்கின்ற போது வீட்டின் பின்பக்க கதவு திறந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அவ்வேளையில் வீட்டின் அறைக்குள் சென்று பார்க்கின்றபோது அங்கு வைக்கப்பட்டிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது.

எனவே குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் உடனடியாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்து சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு பொலிசார் வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here