“நானும் ராஜாதான்”

0
293

‘ரியாத் சர்வதேச விமான நிலையம். ஏசி காற்றோடு சென்ட் வாசனைகளும் கமகமவென மணத்திட வெளிநாட்டுவாசிகள் ஒரு பக்கம் மற்றொரு பக்கத்தில் இலங்கை-உம்றா யாத்ரீகர்கள், தங்களது ஆண்ட்ரைட் மொபைல்களில் முகைத்தை புதைத்து பேசுவதும் சிரிப்பதுமாக இருந்தது. ஒரு கோனரில்- இஸ்மாயில் மட்டும் குனிந்துபடி அமைதியோடு ஒரு சேரில் உற்கார்ந்திருந்தார்.

“” டிங்க்…டாஆங்க்…டிங்க்

“குட்ஈவினிங்க் லேடிசன்ட் ஜென்டில்மேன் டைங்கு கபோர் வெய்ட்டிங்க்….” “”சவுதி அரேபியன் எயர்ளைன் ப்ரோம் ரியாத் டூ கெழம்பு. ‘போயிங்க்’ ஏ; த்ரி சீரோ சீரோ – செவன் டூ சிக்ஸ் எய்ட்டீங். நௌவ் ரெடி கபோர் டிவோர்டிங், கேட் நம்பர் பைவ். டைங்கூ…”

“”டிங்க்…டாஆங்க்…டிங்க்…”

எயார்போர்ட் அறிவித்தலுடன் நிமிர்ந்து பார்த்தார் இஸ்மாயில். அறிவித்தலின் இடையே குறிக்கிட்டு சென்ற “கொழும்பு’ என்ற ஒற்றை வார்த்தை மட்டும் புரிந்துவிட அவருக்கேற்ற ரேட்மார்க் புன்னகையுடன் உம்றா யாத்ரீகர்கள் எல்லோரையும் ஒருமுறை திரும்பி பார்த்துக்கொண்டார்.

‘இஸ்மாயில்; “யார் இவர்…?”

கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதியில் வாழும் இஸ்லாமிய மக்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமான ஒரு சாதாரண மனிதர்.’

’50-55வயது மதிக்கத்தக்க நரைமுடி தாடியுடன் தொப்பியொன்ரு அணிந்துருப்பார். தேய்ந்து பிய்ந்துபோன செறுப்பும், சில சேர்ட்டும், லுங்கிளுமே இவருடைய வாழ்நாள் சொத்து எனலாம்.’

‘கடைத்தெருக்களிலும், இவர் நடமாடும் இடங்களிலும் இவருடைய உடல் நலினத்தையும் பேச்சின் வெகுளித்தனத்தையும் வைத்து நக்கல், நையாண்டி பண்ணுவதும், அவரது பெயரைக்கூட சரிவர அழைக்காமல் ‘மொம்முஸ்மாயில்’ என கிண்டலடித்து சந்தோஷப்பட்டுக்கொள்வதும் மக்களின் மத்தியில் ஒருவிதி நோயாக இருந்து வந்தது.

இச்சமுகம் ஒதிக்கி ஓரங்கட்டியபோதும், எதையும் பொருட்படுத்தாமல், அவரும் சில கனவு வேட்கையுடன் காத்திருந்தார்.

இரண்டு இறைத் தூதர்களின் பெயர்களை சுமந்த ‘முஹமது இஸ்மாயில்’ எனும் இவர் சிறுவனாக இருக்கும்போதே வாப்பாவும் மரணித்துவிட்டார் . குறிப்பிட்ட காலம் தன் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். வாலிப வயதை அடைந்ததும் இவரது பலவீனத்தை பயண்படுத்தி ஊரில் உள்ள சிலரால் ஒரு புத்தி சுவாதினமுற்ற பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்து வேடிக்கை பார்த்தார்கள்.

திருமணம் முடிந்து முதல் நாளே புத்தி சுவதானிமுற்ற அந்த பெண்ணோடு வாழ முடியாமல் வீட்டை விட்டு வெளியேறியவர்தான், அதனாலும் பல்வேறு இழிவுகளையும் அவமானங்களையு தன் வாழ்க்கையில் கடந்துகொண்டிருந்தார்.

எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்ட இஸ்மாயில்.
பள்ளியும் தொழுகையுமாக தன்னை தொடர்புபடுத்திக்கொண்டவர், கடைசி ஆசை புனித ஃகவ்பாவை காணவேண்டும் என்ற அவாவில் வாலிப வயது தொடக்கம் சிறுக சிறுக பணத்தை சேமிக்க தொடங்கினர் .

காலங்கள் உருண்டோடின இந்த சமூகமும் இஸ்மாயிலை பொழுதுபோக்காக மட்டுமே பயண்படுத்திக்கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் உம்மாவும் நோய்வாய்ப்பட்டு
ஒருநாள் மரணித்துவிட உறவினர்கள் சடலத்தை நல்லடக்கம் பண்ணுவதற்குறிய ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்த சமயம், தான் மெக்காவுக்கு போவதற்காக
சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து கொடுத்து, ‘தன் தாயின் நல்லடக்கம் எனது செலவில் இருக்கவேண்டும்’ என்று கூறினார் இஸ்மாயில் . இதை கொஞ்சம்கூட எதிர்பார்க்காத மக்கள் நெகிழ்ந்துவிட்டார்கள்.

அதன் பிறகு இஸ்மாயிலுக்கு கடைத்தெருவும் – அவருடைய சகோதரிகளில் சிலரின் அடைக்கலம் மாத்திரமே இறுதியில் ஆறுதலானது.

வயதாகி நரை பருவத்தை கடந்து பல கட்டத்தில் நோய்வாய்ப்பட்ட இஸ்மாயில் ‘இனியும் எனக்கு ஃகவ்பாவை தரிசிக்க கிடைக்குமோ என்ற ஏக்கம்-சுமையாக மனதோடு கணத்துப்போக, வீதிக்கு வந்தவர் அடிக்கடி எல்லோரிடமும் தன் ஆசையை கூறி வந்தார். இதை செவிமடுப்பவர்கள் “கிறுக்கன் உளர்கின்றான்” என பலர் கேளிக்கை செய்தும், அவருடைய நம்பிக்கையை உதாசீனம் செய்துவிட்டும் சென்றார்கள்.

ஆனால் இதை கவனத்தில் எடுத்துக்கொண்ட ஒரு மனிதர் அந்த வாய்ப்பை இஸ்மாயிலுக்கு அமைத்துக்கொடுக்க முன் வந்தது, பொருமையோடு இருந்த இஸ்மாயிலுக்கு இறைவன் கொடுத்த வரம் என்றுகூட சொல்லலாம்.

அளவற்ற மகிழ்ச்சியடைந்தவர் மெக்காவுக்கு செல்வதற்காக தன்னுடைய வாலிப வயதில் பாதுகாத்து வைத்திருந்த கிழிந்த பையொன்றை ஊசி நூலினால் தன் கைகளினாலே தைத்து அதற்குள் தன்னுடைய பழைய துணிமணிகளை வைத்துக்கொண்டவர், அந்த நல்லுள்ளம் படைத்த மனிதர் வாங்கி கொடுத்த புத்தாடையை அணிந்து ஒரு உம்றா குழுவினரோடு அழுக்கு பையோடு தன் பாவங்களையும் சுமந்து மெக்கா நோக்கி பயணிக்க தயாரானார்.

இஸ்மாயில் விடைபெற்று சென்றதுமே அவரது தோற்றத்தையும் அறிவையும் கேவலப்படுத்தியவர்கள் முதன்முதலில் வியந்து ஆச்சரியப்பட்டுக்கொண்டனர்.

மெக்காவுக்கு சென்று சேர்ந்த உம்றா யாத்ரீகர்கள் இறைவனின் ஆலையைாமான புனித ஃகவ்பாவை தரிசிக்க இஸ்மாயிலின் கனவும் நிறைவேறியது. இஹ்ராமில் ‘அஸ்வத் கல்லை’ கண்ணீரோடு முத்தமிட்டு அவர் மனதிலிருந்த கவலைகளை கரைத்துவிட்டு தன் கடமை முடிந்த நிறைவோடு நாடு திரும்புவதற்குதான் விமானத்துக்காக எயார்போர்ட்டில் காத்திருக்கின்றார்.

சக உம்றா யாத்ரீகர்கள் கடமையை முடித்துக்கொண்ட சந்தோசாத்தில் நாடு திரும்புகையில் நாட்டிலிருந்து கொண்டு வந்த வெற்று பைகளில் பொருட்களை வாங்கி நிரப்ப இஸ்மாயிலின் கிழிந்த பழைய பை மாத்திரம் வெற்று பையாக தனது மனதுபோன்று தூய்மையாக காட்சியளித்தது…

உம்றா யாத்ரீகர்களுடன் இலங்கை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அதிகாலையில் சூரிய உதயத்துடன் தரையிறங்கியது.

எல்லோரும் நாடு வந்து சேர்ந்த மகிழ்ச்சியில் முட்டி மோதிக்கொண்டு விமானத்திலிருந்து இறங்கிக்கொண்டிருந்தார்கள்.

இஸ்மாயில் தனது கால்களை படியில் எடுத்து வைத்தார். பறவைகளின் கீச்சிடும் குரல்ளொளி ஒளிர மரங்களின் நடுவில் கதிரவனின் கதிர் ஒலி தென்றலோடு முகத்தில் முத்தமிட்டு இஸ்மாயிலை வரவேற்று வாழ்த்திக்கொண்டிருந்தது இறைவனின் இயற்கை.

சற்று நிமிர்ந்து பார்த்த இஸ்மாயில் நாலாபக்கமும் திரும்பி பார்த்துவிட்டு, தனது தோற்றத்திலும் அறிவிலும் குறைகளை கண்ணீருடன் அல்லாஹ்விடம் ஒப்படைத்த திருப்த்தியில், பூரிப்புடன்
“அல்லாஹ் ஒருவனே என்னை கௌரவித்து விட்டான். அவனிடம் மாத்திரம் ஏற்றத்தாழ்வு கிடையாது” என நினைத்துக்கொண்டே மகிழ்ச்சியுடன் ‘இனி நானும் ராஜாதான்… வாழ்ந்துவிட்டேன்… என தன் உடலை நிமிர்த்தி ஒரு கெத்தோடு அசல் ராஜாகவாட்டாம் தனது ரேட்மார்க் புன்னகையுடன் விமானத்தின் படியில் கம்பீரமாக நின்றார் ‘முஹமது இஸ்மாயில்’…!.

‘”செல்வந்தர்-ஏழை, வெள்ளை-கருப்பு, அழகு-அசிங்கம், படித்தவர்-படிக்காதவர், அறிவாளி-முட்டாள்!’ என பிரித்து பார்த்து, தங்களது வாழ்வியலாக இந்த அமைப்பை உருவாக்கி அதை நாகரீகம் என்று கருதிக்கொண்ட சமூகத்தின் நடுவில் வாழ்ந்த மனிதர்தான் ‘இஸ்மாயில்.’

மேற் குறிப்பிட்ட இரண்டாம் தரத்தில் ‘இஸ்மாயில்’ என்ற மனிதரையும் விட்டு வைக்காமல் ‘கிறுக்கன், கோமாளி’ என்ற முத்திரையை இட்டு கேளிக்கை பொம்மையாக சித்தரித்துவிட்டனர் மனதலவில் பாதிக்கப்பட்ட மனநோயாளிகள்.

ஆசை, இலட்சியம், இலக்கு, புகழ் என உலக வாழ்க்கைக்கைக்கு மாத்திரம் அறுவருப்பாக எதையும் கடந்து மனிதன் வாழ்ந்துகொண்டிருக்கின்றான்.

இஸ்மாயில் எனும் வெள்ளந்தி மனிதனின் மறுமை நோக்கிய பயணத்தின் கனவு வெற்றிபெற்று, ஒட்டுமொத்த மக்களையும் ஆச்சரியபடுத்திய உண்மை சம்பவத்தை தழுவிய கதையே இச்சிறுகதை!.

(திரு.முஹமது இஸ்மாயில் அவர்களுக்கு சமர்ப்பணம்)

எஸ்.எஜ்.எம்.ரபிதீன்
ஏ.ஜி.எம்.நிவாஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here