வாழைச்சேனை வை.அஹமட்யில் நாளை போதையொழிப்பு நிகழ்ச்சித்திட்டம்.

0
222

(அபூ இன்ஷிபா)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் நாளை (24) ம் திகதி செவ்வாய்க்கிழமை போதையொழிப்பு நிகழ்ச்சித்திட்டமொன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் என்.எம்.ஹஸ்ஸாலி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதையற்ற சமுகத்தை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந் நிகழ்வில் போதை வஸ்துப் பாவனையால் மனித சமுகத்துக்கு ஏற்படும் ஆபத்துக்கள் தொடர்பிலும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள இளம் சமுகத்தை மீட்டெடுப்பது தொடர்பிலான செயலமர்வு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவுள்ள இந் நிகழ்வுக்கு மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அதிகாரிகள், வாழைச்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் புத்திஜீவிகள் நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here