எமது சமூகத்தில் மிகக் கொடூரமான செயற்பாடாக போதை மாத்திரைகள் பாவிக்கப்படுகின்றது.

0
292

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

கடந்தகால போதை பாவனை ஒழித்து வருகின்ற நிலையில் தற்போது போதை மாத்திரை பாவனை ஆரம்பித்துள்ளது என ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றஹ்மான் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தில் போதைப் பொருள் பாவனையில் இருந்து சமூகத்தை பாதுகாப்போம் என்னும் தொனிப் பொருளில் வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தினால் இன்று செவ்வாய்கிழமை விழிப்புணர்வு பேரணியும், விழிப்புணர்வு கூட்டமும் இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-

கடந்த காலத்தில் மது, கஞ்சா, அவின், ஹேரோயின் பாவனையில் இருந்து எமது சமூகம் விடுபட்டு வருகின்ற வேளையில் மிகக் கொடூரமான செயற்பாடாக போதை மாத்திரைகள் பாவிக்கப்படுகின்றது.

கடந்த காலத்தில் மது, கஞ்சா, அவின், ஹேரோயின் பாவிப்பவர்களை எளிதில் அறிந்து கொள்ள முடியும். ஆனால் தற்போது போதை மாத்திரை பாவிப்பவர்களை அறிந்து கொள்ள முடியாது. ஆனால் படிப்படியான சில வருடங்களில் மாத்திரம் கண்டு கொள்ள முடியும்.

ஐந்து வருடங்களில் ஒரு துரதிஸ்டவசமான நிலைமை கண்டு கொள்ளக் கூடிய விதத்தில் நாம் வாழ்ந்து கொண்டு வருகின்றோம். போதை மாத்திரை தாக்கத்தின் காரணமாக எமது ஆயுள் காலத்திற்குள் எமது பிள்ளைகளை அடக்கம் செய்யும் அச்சமும் இப்போது காணப்படுகின்றது.

எனவே இந்த விடயத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி அவர்கள் வீட்டை விட்டு செல்லும் வரை எங்கெல்லாம் செல்கின்றார்கள், யாருடன் பழக்கம் வைத்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here