அரசியல்

கொழும்பின் கைக்கு மாறும் மாகாணங்களின் மூக்கணாங்கயிறு- ஏ.எல்.நிப்றாஸ்

fdefef

மாட்டு வண்டில்களின் மூக்கணாங்கயிறு அந்த வண்டிலை ஓட்டிச்செல்பவனின் கைகளிலேயே எப்போதும் இருக்க வேண்டும். தேவையான நேரத்தில் அந்த மாடுகளை அவன் கட்டுப்படுத்துவதற்கு இது அவசியமானது. அதற்கு மாற்றமாக, மாட்டு வண்டிலின் உரிமையாளர் என்பதற்காக வீட்டிலிருக்கும் ஒருவரிடம் மூக்கணாங்கயிற்றைக் கொடுக்க முடியாது. அல்லது இந்த மாட்டு வண்டியை எப்படியாவது தனது தேவைக்காகப் பயன்படுத்த நினைக்கின்ற ஒருவரிடம் கையிற்றைக் கொடுத்து விட்டு, வண்டிலோட்டி ஆயாசமாக இருந்து விட முடியாது. அப்படியிருந்தால், வண்டிலையும் மாடுகளையும் அதனூடான பயணத்தையும் அவர் தொலைக்க நேரிடலாம். இது, மாகாண சபை அரசியல் அதிகாரத்திற்கும் ... Read More »

முஸ்லீம் தனியார் சட்டமும் மாற்றத்தை நோக்கிய சந்தேகங்களும்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்

scsccscs

இலங்கையில் தற்போது அமுலிலிருக்கும் முஸ்லீம் தனியார் சட்டம் 1770ம் ஆண்டு டச்சுக்காரர்களால் இந்தனோஷியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டது. 1806 இற்கும் 1951ம் ஆண்டுக்குமிடையில் பலமுறை மாற்றங்கள், திருத்தங்களைக்கடந்து 1951ல் சட்டமாக உருவானது. இருந்தும், இதில் அதிகமான இஸ்லாமிய ஷரீஆக் கோட்பாடுகளுக்கு முரணாக விடயங்களுள்ளது. குறிப்பாக, சீதனம், கைக்கூலி போன்ற சில ஏற்பாடுகளைக்கூறலாம். இலங்கை முஸ்லீம் திருமணம் மற்றும் விவாகரத்துச்சட்டம் 1951ம் ஆண்டு இலங்கையில் சட்டபூர்வமாக நடவடிக்கைக்கு வந்தது. இலங்கை முஸ்லீம் தனியார் சட்டம் தொடர்பான சட்டம் சீரமைக்கப்பட அல்லது மாற்றப்பட வேண்டுமென்ற கோரிக்கை பல ஆண்டுகளாக ... Read More »

ஊடகங்களின் இரு முகங்கள் எம்.எம்.ஏ.ஸமட்

esfdsfds

ஊடகங்கள் மனித வாழ்க்கையில் எவ்வளவுக்கு எவ்வளவு சங்கமித்திருக்கிறது. அவசியமாகியிருக்கிறது என்பதை சம காலத்தில் எவரும் அறியாமலில்லை. அந்தளவுக்கு ஊடகங்கள் மனித வாழ்வியலில் இரண்டரக் கலந்ததாகக் காணப்படுகிறது. மனித வாழ்வின் ஒவ்வொரு விடயத்திலும்  ஊடகங்களின் செல்வாக்கு அதி முக்கியத்துவமிக்கதாகக் காணப்படுவதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். அதே போல, ஒரு சில ஊடகங்களினதும், ஊடகவியலாளர்களினதும் செயற்பாடுகள்  ஊடகத்தர்மத்தையும், ஊடக ஒழுக்கக்கோவையும் மாசுபடுத்துவதாகவும், சமூக ஒற்றுமையில் விரிசலை ஏற்படுத்த துணை போகின்றவையாகவும் நோக்கப்படுவதோடு, தங்களுக்கு விரும்பிய ஆட்சியை நிலை நாட்டுவதற்கும், அதற்காக செய்திகளையும், விவரணங்களையும் வடிவமைத்து மக்கள் ... Read More »

எந்தத்தேர்தலையும் முஸ்லிம் காங்கிரஸ் அச்சமின்றி எதிர்கொள்ளும்-நவாஸ் சௌபி

அட்டாளைச்சேனை எஸ்.முஹம்மது பர்ஷான் முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய விமர்சனங்களை முன்வைக்கின்றவர்கள் தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வருகின்ற எந்தத்தேர்தலையும் எதிர்கொள்ள அச்சம் கொண்டிருப்பதாக அதன் மீதான விமர்சனங்களை முன்வைப்பதாகத் தெரிகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேர் படந்திருக்கும் கிழக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் இருக்கிறது. மாடு வரும் முன் வருகின்ற மணியோசை போன்று தேர்தல் வருவதற்கு முன்பு முஸ்லிம் காங்கிரஸ் பற்றி இவ்வாறான விமர்சனங்கள் வருவதும் வழக்கமே. கடந்த பாராளுமன்றத்தேர்தல் காலத்திலும் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் செல்வாக்கை இழந்து ... Read More »

தேர்தல் காய்ச்சல்

dscsawq

-    ஏ.எல்.நிப்றாஸ் காய்ச்சல் என்பது பலவற்றின் அறிகுறியாகும். அந்தக்காய்ச்சல் வருவதற்கு முன்னர் தடிமனும் இருமனும் உடல் வலியும் வழக்கத்திற்கு மாற்றமான அறிகுறிகளும் உடம்பிலிருக்கும். இதைக்காய்ச்சல் குணங்குறி, முன்-காய்ச்சல் என்பார்கள். சில வேளை இதைக்கூட சிலர் காய்ச்சல் என்று தான் நினைப்பார்கள். தீவிரமான காய்ச்சல் வந்தாலும் வராவிட்டாலும் அவர்கள் உணர்கின்ற முன்-காய்ச்சல் வந்தே தீரும். இந்தக்காய்ச்சல் வந்து விட்டால் அது தீர்வதற்கு நாளெடுக்கும். தேர்தல் காய்ச்சலும் ஒரு வகையில் அப்படித்தான். தேர்தல் காய்ச்சல் வந்து விட்டால், சிலருக்கு நடுக்கம் எடுத்து விடும். ஒரு போர்வையால் போத்திக்கொண்டு ... Read More »

முஸ்லிம் கூட்டமைப்பு சாத்தியப்படுமா? – யூ.எல்.எம்.என். முபீன்

download (1)

(ஆதிப் அஹமட்) மழை, வெயில், வெப்பம், குளிரை வரையறுத்துக்கூற முடியாத நுவரெலியா காலநிலை போன்று காணப்படும் நம் நாட்டு அரசியல் சூழலில் அவ்வப்போது அரசியலரங்கம் சூடாவதும் பின்னர் சப்பென்று போவதும் இங்கு வாடிக்கை. சில தமிழ் திரைப்படங்கள் வெளிவருவதற்கு முன்பே பிரமாண்டமாகச்செய்தி வரும். கதை அப்படி, கதாநாயகன் இப்படி. வில்லன் அதிரடி என காசு கொடுத்து செய்தி உலாவ விடப்படும். ரசிகர்கள் உசுப்பேற்றப்படுவார்கள். எதிர்பார்ப்புடனிருந்த ரசிகன் படத்தைப்பார்த்ததும் தூ. இவ்வளவு தானா என சப்புக்கொட்டுவான். என்னடா பெரிய கதையளக்கிரார் முபீன் என வாசகர் சப்புக்கொட்டுவது ... Read More »

ஆளுமைமிக்க தலைமையைத்தேடும் கிண்ணியா

fgrgrgr

கிண்ணியா ஐனுதீன் கடந்த 28.07.2017ம்  திகதி முகநூலில் நான் பதிவு செய்த எனது  ஆக்கத்துக்கு  வந்த  பின்னூட்டங்களின்  அடிப்படையில் மக்களுக்கு  தெளிவுபடுத்தும்  நோக்கில்  இதை  எழுதுகின்றேன்.  முன்னைய  காலங்களை  விட தற்போது திருகோணமலை மாவட்ட  முஸ்லிங்கள்  காணும்   அபிவிருத்திகள்  அதிகம். ஆனால், மக்கள்  இன்னும்  தலைமைத்துவத்தைத்தான்  தேடிக்கொண்டடிருக்கின்றாா்கள் என்றால், எமது  தற்போதைய தலைமைகளின் அணுகுமுறைகள் மாற்றங்காண வேண்டுமென்பது புலனாகின்றதல்லவா? அதாவது, அபிவிருத்தியை மையமாகக்கொண்டு மக்கள் மனதைக் கவர முடியாது. ஒழுங்கான ஆளுமை வேண்டும். பயங்காரவாதம்  தோற்க்கடிக்கப்பட்ட இக்காலத்தில் முஸ்லிம்கள்  பேரினவாதிகளினால் மிகவும் நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள ... Read More »

தேசியப்பட்டியலுக்காய் முஸ்லிம்களை விற்ற அய்யூப் அஸ்மின்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்

rgre

மீள்பிரசுரம் தேசியப்பட்டியலுக்காக முஸ்லீம்களை விற்பனை செய்த வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் பதவி நீக்கம் என்ற NFGGன் ஊடக அறிக்கை அறிவுபூர்வமாக இருந்தாலும், நமது சமூகத்தைப் பதவிக்காக தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் அடகு வைத்தமைக்கான காரணம் தெளிவுபடுத்தப்படவில்லை. முஸ்லீம்களின் பாதுகாப்பு, மீள்குடியேற்றம், தொழில்வாய்ப்பு மற்றும் அரசியல் அதிகாரப்பங்கீடு தொடர்பில் முஸ்லீம்களுக்கு விடுதலைப் புலிகளுடன் கூட்டு சேர்ந்து துரோகம் செய்தவர்கள். வெட்கமில்லாமல் இதுவரை எதுவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் முஸ்லீம்கள் நம்பிக்கையை உருவாக்காமல் மௌனமாக இருப்பவர்கள். இவர்களுடன் நீங்கள் பேசிய விடயம் என்ன? இதுவரை வடமாகாண முஸ்லீம்கள் ... Read More »

அதிகாரமிக்க சபையின் அவசியம்

sdsacasc

சமூகத்தின் கட்டமைப்பு மற்றும் ஒழுங்கமைப்பை முன்னெடுப்பதிலும் வழி நடாத்துவதிலும் பொது நிறுவனங்கள் முக்கியம் பெறுகிறது. குறிப்பாக, சிறுபான்மையினராக வாழ்கின்ற நாட்டில் அரசியலுக்கப்பால் கலாசார விழுமியங்களையும் தனித்துவமான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதில் அகில இலங்கை ஐம்மியத்துல் உலமா சபை காத்திரமான பங்களிப்பை வழங்கி வருகிறது. குறிப்பாக, அரசியலுக்கப்பால் நின்று செயற்படும் இந்த அமைப்பு ஒருமைப்பாட்டுடன் இலங்கைக்குள் வாழ்வதற்கும் முஸ்லீம்களின் மதம் சாரந்த விடயங்களில் அதிகாரப்பூர்வமான அமைப்பாகவும் செயற்படுகிறது. இருந்தாலும், கடந்த மஹிந்த ஆட்சியில் இதன் செயற்பாடுகள் தளம்பல் நிலையையும் அரசியல் சாயத்தையும் பூசிக்கொண்டது தூரதிஸ்டவசமாகும். குறிப்பாக, தௌஹீத் ... Read More »

தனி மனித மாற்றமே சமூக மாற்றம்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்

d

எந்தவெரு சமூகமாற்றமும் தனி மனித மாற்றங்களின் மூலம் உயிர் பெறுகிறது. மாற்றத்திற்கான புரட்சியென்பது எமது தனிப்பட்ட உணர்வுகளிலிருந்து தான் முதலில் படையெடுக்க வேண்டும். ஒவ்வொரு மனித நேயமும் மாற்றத்தை விரும்பாமலில்லை. ஆனால், தனது சுயநலம் மற்றும் குறுகிய தேவைகளுக்காக தனக்காக மட்டும் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறான் அல்லது தன்னைத்தானே நிர்ப்பந்திக்கிறான். அதே நேரம், சமூகப்புரட்சியென்பது ஆயுதம் ஏந்துவதால் முழுமைப்பட முடியாது. ஆயுதங்களால் உருவான அதிகமான மாற்றங்களும் புரட்சிகளும் நீண்ட காலம் தொடர்ந்த வரலாறில்லை. சமூகத்தால் மாற்றத்தை நோக்கி உருவான ஆயுதமில்லாத புரட்சிகள் வரலாறு கண்டுள்ளது. ஆயுதப்புரட்சி ... Read More »