தேசியம்

பஷீர் அவர்களிடம் சில கேள்வி: பதில் தருவாரா?

paseer_003

மருதமுனை முஹம்மது இத்ரீஸ் இயாஸ்தீன் பஷீர் சேகு தாவூத் அவர்கள் கடந்த 20ம் திகதி அவரின் முகநூலில் பதிவேற்றியிருந்த போராளிகளுக்கான கடிதத்தில் எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை அதே கடிதத்தில் இடையிடையே கேள்விகளாகக் கேட்டிருக்கிறேன். பஷீர் அவர்கள் பதில் தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். பஷீர் சேகுதாவூதின் கடிதம்   நமது கட்சி தலைவர் அஷ்ரஃப் கேட்ட ஒரேயொரு கேள்விக்கு முஸ்லிம் மக்கள் தந்த உறுதியான பதிலில் முஸ்லிம்களின் தனித்துவமான அடையாள அரசியல் குழந்தை பிறந்தது. சிங்களவர்களுக்கு பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன. தமிழர்களுக்கு என்றும் கட்சிகள் ... Read More »

கிழக்கு மாகாண சபையில் அடுத்து ஆட்சியமைப்பது யார்?

ச

தற்போதைய சூழ்நிலையில் உள்ளூராட்சி சபைத்தேர்தலுக்கு முன் மாகாண சபைத்தேர்தல் நடப்பதற்கான சாத்தியம் இருப்பதாகவே தென்படுகின்றது. அந்த வகையில், அடுத்த கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் முஸ்லீம் முதலமைச்சர் வருவதற்கான சாத்தியமுள்ளதா? ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைப்பதைத்தடுக்கும் வகையில் அம்பாறை மாவட்ட பெரும்பான்மை அமைச்சருடன் வன்னி அமைச்சர் மற்றும் முன்னாள் அக்கரைப்பற்றைச்சேர்ந்த அமைச்சர் ஆகியோர் பல சதித்திட்டங்களை தீட்டியுள்ளனர். அந்த வகையில், 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆட்சியமைக்க சந்தர்ப்பம் இருந்தும் மகிந்தவின் ஆசிர்வாதத்தோடு அன்றைய ... Read More »

முஸ்லிம் கூட்டமைப்பு காலத்தின் தேவை

profile-21636-image-001_500

கிழக்கான் அஹமட் மன்சில் இலங்கையில் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தோற்றம் கடந்த 60 வருடங்களுக்கு முன்பிருந்தே ஆரம்பித்திருந்தது. 1957 ஒக்டோபர் 17ல் கல்முனை நகர மண்டபத்தில் இந்தியாவைச்சேர்ந்த மெளலவி எஸ்.எம் மஷூர் மெளலானா அவர்களின் தலைமையில் நடைபெற்ற கிழக்கிலங்கை பேராளர் மாநாட்டில் “இஸ்லாமிய ஐக்கிய முண்ணனி” எனும் பெயரில் முதலாவது முஸ்லிம் அரசியல் கட்சி உருவாக்கப்பட்டது. இந்த இஸ்லாமிய ஐக்கிய முண்ணனி 1960 ஆம் ஆண்டு ஜுலை தேர்தலுக்காக “உதய சூரியன்” சின்னத்துடன் அங்கீகரிக்கப்பட்ட முதலாவது கட்சியாகும். முஸ்லிம் அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றிருந்தாலும், ... Read More »

கண்கட்டி வித்தை

16730459_10154371443518379_4329467311096968710_n

ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 19.02.2017) இந்திய சினிமாவும் நடிப்புத்துறையும் அந்த நாட்டிற்கு நல்ல அரசியல்வாதிகளைக் கொடுத்திருக்கின்றது. அதே போல், இலங்கை அரசியலானது நல்ல நடிகர்களைக் கொடுத்திருக்கின்றது. முஸ்லிம்களின் அரசியலில் இந்த பண்புகளை பரவலாக நாம் கண்டு கொண்டிருக்கின்றோம்.  முஸ்லிம் அரசியல்வாதிகள் தமக்கு கொடுக்கப்படுகின்ற காட்சியில், கிடைக்கின்ற கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கி விடுகின்றார்கள். ஹீரோக்களாக இருந்த சிலர் உண்மையில் வில்லன்கள் என்பது கிளைமேக்ஸ் காட்சியில் தான் தெரிகின்றது. வில்லன்களாக சித்திரிக்கப்படுபவர்கள் உண்மையில் வில்லன்கள் தானா? என்பது காட்சிகள் எல்லாம் முடிவடைந்த பிறகே தெரிய வரும். அந்த வகையில், ... Read More »

அம்பாறையில் முஸ்லிம் காங்கிரஸால் தனித்துப்போட்டியிட்டு மூன்று ஆசனங்களைக் கைப்பற்ற முடியுமா? நபீர் பெளண்டேசனின் இஸ்தாபகத்தலைவர் அல்ஹாஜ் நபீர் சவால் (வீடியோ)

unnamed

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசானது தனித்து நின்று அம்பாறை மாவட்டத்தில் மரச்சினத்தில் போட்டியிட்டு, மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கைப்பற்ற முடியுமா? என முஸ்லிம் காங்கிரசிற்கும் அதன் தலைமையான அப்துர் ரவூப் ஹிபத்துல் ஹக்கீமிற்கு தான் பகிரங்க சவால் விடுப்பதாக நபீர் பெளண்டேசனின் இஸ்தாபகத் தலைவர் அல்ஹாஹ் நபீர் தெரிவிக்கின்றார். மேலும் தனது கருத்தினைத் தெரிவிக்கின்ற நபீர் பெளண்டேசனின் இஸ்தாபகர், அவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மரச்சின்னத்தில் போட்டியிடுவார்களாயின், இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறுவது கூட கேள்விக்குறியாகவே இருக்கின்றது. மர்ஹும் ... Read More »

முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதிகாரம் ஒரு மையத்தை நோக்கி நகர்வது வலிமையற்றது-சாய்ந்தமருது எம்.எம்.எம்.நூறுல்ஹக்

noo

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 27ஆவது பேராளர் மாநாடு கடந்த 12.02.2017இல் கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் நடந்து முடிந்தது நாமறிந்ததே. அதில் நாம் சிந்திக்க வேண்டிய சில பக்கங்கள் இருப்பதாகவே தெரிகின்றது. ஏனென்றால், மு.காவின் தலைமைத்துவம் முன்னர் கொண்டிருந்த அதிகாரங்களை விடவும் இம்முறை அதிகரித்த அதிகார மையத்தை தன்னிடம் மட்டும் குவித்துக் கொள்கின்ற வகையில் எடுத்துக் கொண்டிருக்கின்றது. அரசியலைப் பொறுத்தவரை அதிகாரங்கள் ஓரிடத்தில் குவிவதென்பது சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வதற்கு வழியாக அமைந்த வரலாறுகளே நமது நாட்டில் பெரும்பாலும் பதிவாகியிருக்கின்றது. இந்த வரலாற்றுத் தடயத்திலிருந்து மு.காவின் ... Read More »

திருகோணமலை முஸ்லிம் பிரதிநிதித்துவமும்:கிண்ணியாவின் தலைமைகளும்-சட்டத்தரணி பஹ்மி

16684523_10154576401603401_1630960473_n

திருகோணமலை மாவட்டம் மிக நீண்ட இடைவெளியின் பின்னர் அபிவிருத்திக்காற்றை சுவாசிப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. இருந்தும், அரசியல் அதிகாரத்தைத் தக்க வைப்பதில் பல சவால்களை எதிர்கொள்கிறது. அரசியல் ரீதியில் 1965 முதல் இன்று வரை முஸ்லீம்களுக்கான அதிகாரத்தையும், தலைமைத்துவத்தையும் தன்னகத்தே வைத்துள்ளதும் சாதனக்குரியதாகும். மர்ஹூம் மக்ரூப் மற்றும் மஜீது ஆகியோர் காலத்தில் SLFP மற்றும் UNP கட்சிகளின் மாவட்டத் தலைமைத்துவமும் அதிகாரமும் கிண்ணியா அரசியல்வாதிகளிடமே இருந்தது. ஆனால், 1994ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த தேசியக்கட்சிகளின் தலைமைத்துவம் கந்தளாய்ப் பிரதேச தலைமைகளுக்குச் சென்றது துரதிஸ்டவசமாகும். இதன் காரணமாக, SLMC ... Read More »

சுட்டு விரல்களை நீட்டுபவர்கள் பெருவிரலைக் கவனிப்பதில்லை

க்கக்

கிழக்கான் அஹமட் மன்சில் இன்றைய காலகட்டத்தைப் பொறுத்த வரையில் அரசியல் சார்ந்த வியாக்கியானங்களையும், விமர்சனங்களையும் செய்யும் அரசியல்வாதிகள் முதல் அடிமட்டத்தொண்டர்கள் வரை அடுத்தவர்களை நோக்கிச் சுட்டு விரலை நீட்டுகின்றனர். ஆனால், அவர்கள் பெரு விரலைக் கவனிப்பதில்லை அது யாரை நோக்கி இருக்கிறது எனும் உண்மைத் தன்மையையும் சிந்திப்பதுமில்லை. முன்னாள் மாகாண சபை உறுப்பினர் துல்கர் நயீம் தற்போது பஷீருக்கு பிறகு பேசு பொருளாகி விட்டார். காரணம் அவர் முஸ்லிம் காங்ரஸ் தலைவருக்கெதிராக விஷ்பரூபம் எடுத்து தாண்டவமாட ஆரம்பித்திருப்பதாகும். மருதமுனையின் அரசியல் வரலாற்றில் மறைந்த மருதமுனை ... Read More »

விளக்கமில்லாமல் அறிக்கை விட்ட வை.எல்.எஸ்.ஹமீத்

images

(இப்றாஹீம் மன்சூர்) “வேண்டாத பொண்டாட்டியின் கை பட்டாலும் குற்றம். கால் பட்டாலும் குற்றம்” என்ற பழ மொழியை நினைவுபடுத்தியவனாக இக்கட்டுரையை வரையலாம் என நினைக்கின்றேன். வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாத் மீது கொண்ட கோபத்தை, அவரை எழுத்தின் மூலம் கரித்துக் கொட்டுவதிலிருந்து தீர்க்கலாமெனச் சிந்திக்கின்றார். தற்போது வை.எல்.எஸ் ஹமீதிற்கு அரசியல் ரீதியான எந்தத்தளமுமில்லை. எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் கூட்டமைப்பு உருவாவதற்கான சாதக நிலை உருவாகி வருகிறது. இந்தக்கூட்டமைப்பில் வை.எல்.எஸ் ஹமீதும் நுழைந்து கொண்டால் மிக இலகுவாக தனக்கான தளத்தைக் கட்டமைத்துக் கொள்ளலாம். அதற்கு “நானும் ... Read More »

அமைச்சர் ஹக்கீமின் இயலாமை செயலாளரின் அதிகாரக்குறைப்பு

16712049_750893188411809_3348124836639532860_n

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-சம்மாந்துறை. இன்றைய அரசியல் அரங்கில் ஹசனலி விவகாரமே சூடுபிடித்துக் காணப்படுகிறது. கடந்த பேராளர் மாநாட்டின் போது, மு.காவின் செயலாளர் அரசியல் பதவி வகிக்க முடியாதவாறு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பலரது வாய்களில் “இது போன்று மர்ஹூம் அஷ்ரபிற்கு செய்யத் தெரியாதா? இதனை அமைச்சர் ஹக்கீம் இப்போது ஏன் செய்கிறார்?” போன்ற வினாக்களை அவதானிக்க முடிகிறது. மர்ஹூம் அஷ்ரப் தனது தலைமைத்துவ காலத்தில் யாராலும் அசைக்க முடியாதளவு மிகவும் உறுதியாக இருந்தார். செயலாளர் பதவி அதிகாரமிக்கதாக இருந்தாலும், அவரின் தலைமைத்துவ உறுதியின் ... Read More »