அரசியல்

முஸ்லிம் காங்கிரஸுக்கெதிரான, சுயநல நோக்கங்கொண்டதே முஸ்லிம் கூட்டமைப்பு-ஏ.ஆர்.எம்.ஜிப்ரி

dvdsvds

நேர்காணல்: ரி.தர்மேந்திரன் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை சிறுபான்மை மக்களே கவிழ்த்தனர். அதே போல, நல்லாட்சி அரசாங்கம் நிலைக்கப்பெறுவதும், கலைக்கப்படுவதும் சிறுபான்மை மக்களின் மனங்களை அது வெற்றி கொள்வதிலேயே தங்கி நிற்கின்றது. ஆகவே, தமிழ் பேசும் மக்களை நல்லாட்சி அரசாங்கம் அரவணைத்து நடக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத்தேர்தல் தொகுதி அமைப்பாளரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீனின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான செயலாளரும், பிரபல அறிவிப்பாளருமான ஏ. ஆர். எம். ஜிப்ரி வழங்கிய சிறப்புப்பேட்டியில் தெரிவித்தார். இவருடனான நேர்காணல் வருமாறு:- ... Read More »

கருணாவின் அழைப்பு: இன ஆதிக்க அரசியலும் கிழக்கின் யதார்த்தங்களும்

cdss

ஏ.எல்.நிப்றாஸ் யுத்த மேகம் கருக்கொண்டிருந்த காலப்பகுதியில் முஸ்லிம் ஊர்களுக்குள் ஒருவித அச்சம் நிலவும். குறிப்பாக, இரவு வேளைகளில் நிம்மதியான உறக்கம் கிடைப்பதே அரிது. இதோ புலிகள் வருகின்றார்களாம். அங்கு சுடுகின்றார்களாம் இங்கு பிரச்சினையாம் என்று ஒவ்வொரு நாளும் கதைகள் வந்து கொண்டேயிருக்கும். இவ்வாறு புலிகளோ ஏனைய ஆயுதக்குழுக்களோ முஸ்லிம் ஊர்களுக்குள் வராத நாட்களிலும் கூட யாராவது ஒரு சிலர் பயங்காட்டல்களையும் அநாமேதயமாக கதைவிடுதல்களையும் மேற்கொண்ட வண்ணமே இருப்பார்கள். இதனால், ஆயுததாரிகள் வராத நாட்களிலும் நிம்மதியிருந்தது இல்லை. யுத்தம் முடிவடைந்த பிறகு, சிலர் தம்முடைய அரசியலுக்காக ... Read More »

தனி மனிதனுக்கு படிப்பினை தரும் அரசியல்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்

defe

சமூகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு வாழ்கின்ற மனித வாழ்வில் அரசியல் நிறையக் கற்றுக் கொடுப்பதோடு, சவாலாகவும் அமைந்து விடுகிறது. ஆதலால், இது சகலருக்கும் சொந்தமான சொத்து. எவரும் தனியுரிமை கொண்டாட முடியாது. முற்போக்கு சிந்தனையாளர்கள், கருத்துக்கூறுபவர்கள், படித்தவர்கள், சமூக சேவை செய்பவர்களெல்லாம் அரசியல்வாதிகளாக முடியாதென்ற விதி சமூகத்தின் தலைவிதியாக எழுதப்பட்டுள்ளது. மாறாக, ஊழல்வாதிகள், காட்டிக்கொடுப்பவர்கள், கைநீட்டிக் காட்டப்பட்டவர்கள் மற்றும் சமூக விரோதிகள் வேஷமிட்டு, அரசியல்வாதியாகலாம். இந்தக் கறைபடிந்த பாடத்தை நம்மீது துரோகிகள் விதைத்து புனிதமும், அர்ப்பணிப்புமுள்ள அரசியலை வியாபாரமாக்கியுள்ளனர். அரசியல் என்ற வட்டத்திற்குள் வந்தவர்களால் வெளியே ... Read More »

உயிர்களை அறுவடை செய்யும் இஸ்ரேல்-எம்.எம்.ஏ.ஸமட்

dd

விலங்கினங்கள் சித்திரவதை செய்யப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கெதிராகவும், அவற்றின் விடுதலை, சுதந்திரத்திற்காகவும் குரல் கொடுக்கின்ற, சட்டம் வகுகின்ற உலக ஆட்சியாளர்களும் அமைப்புக்களும் கொலை வெறி பிடித்த இஸ்ரேல் படைகளினால் பலஸ்தீனத்தில் உயிர்கள் அறுவடை செய்யப்படுவதை  தடுப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு சில நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதற்காக வரிந்து கட்டிக்கொண்டு அவற்றிற்காகச் செயற்படுகின்ற, அறிக்கைளை விடுகின்ற மனித உரிமை அமைப்புக்கள் பலஸ்தீனத்தின் உரிமைகளை மீறி வரும் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கண்டும் காணமலிருக்கிறது. உலகளவில் 36 மனித உரிமைகள் அமைப்புக்கள் சர்வதேச அங்கீகாரம் ... Read More »

மண்ணை நேசித்த அமைச்சர் மர்ஹூம் மன்சூர்-எம்.எம்.ஏ.ஸமட் (சிறப்புக்கட்டுரை)

dvdvdevev

உலகம் தோற்றியது முதல் இன்று வரை கோடான கோடி மக்கள் வாழ்ந்து மறைந்து விட்டனர். அவ்வாறு மண்ணில்  உதித்தவர்கள் எல்லோரும் சாதனை புரியவில்லை. சேவை செய்யவில்லை. சாதிப்பதற்கும் சேவை புரிவதற்கும் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கிடைத்தவர்களும் கூட அவற்றை முறையாகப் பயன்படுத்தவில்லை. ஆனால், சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் காலத்தோடு கச்சிதமாகப் பயன்படுத்திய ஒரு சிலரே தான் சாதனையாளர்களாகவும் சேவையாளர்களாகவும் அன்றும் இன்றும் என்றும் போற்றப்படுகிறார்கள். பாராட்டப்படுகிறார்கள். கௌரவமளிக்கப்படுகிறார்கள். சாதனையாளர்களும் சேவையாளர்களும் மண்ணில் வாழும் போதே வாழ்த்தப்பட வேண்டும். பாராட்டப்பட வேண்டும். அவர்களின் சேவையை அவர்கள் பிறந்து வாழ்ந்த ... Read More »

திருமலை மாவட்ட தேர்தல் களம்: யாரை யார் வெல்லுவார்?

IMG_1163

ஆளுக்கொரு கணிப்பீடும் தேர்தல் ஆணையமும் நமது ஊருக்கு மட்டுமே வெற்றிக்காக இருப்பது போன்ற கருத்துக்கள் மாகாண சபைத்தேர்தல் தொடர்பில் கூறப்படுகிறது. உண்மையில் தேர்தல் இருக்கின்ற விகிதாசார முறையிலா? அல்லது புதிய முறையிலா? என்ற குளறுபடி ஒரு புறமிருக்க, தேர்தல் நடக்குமா? என்ற கேள்விக்குறி மேலாதிக்கம் செலுத்துகிறது. அந்த வகையில், கடந்த காலங்களை விட, திருகோணமலை மாவட்டம் இருக்கின்ற விகிதாசார முறையின் கீழ் நடைபெற்றால், இம்முறை முஸ்லீம்களுக்கு பாரிய சவால்களை எதிர்கொள்ளக் காத்திருக்கிறது. ஆகவே, தங்களுக்கு 2/3 ஆசனம் மற்றும் முதலமைச்சர் பதவி என்று சிறுபிள்ளைத்தனமாகவும் ... Read More »

கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் நயவஞ்சமாக வென்றவர் நஸீர் அஹமட் -அசாத் சாலி

20158119_1480053528704214_1599174303_n

பதவிகளுக்காக எவருக்குப் பின்னாலும் சென்ற வரலாறு எனக்கு கிடையாது என்று எமக்கு வழங்கிய சிறப்புப்பேட்டியில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார். தேசிய ஐக்கிய முன்னணிக்கு தேர்தல் திணைக்களத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையிலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பங்காளதேஷ் விஜயத்தில் கூடவே பங்கேற்று அரசியல் எதிரிகளால் அசாத் சாலி கடுமையாகச் சாடப்பட்டு வருகின்ற நிலைமையிலும் அவர் வழங்கியுள்ள இப்பேட்டி பரபரப்பானதாகும். கேள்வி:- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடத்திய தேசிய இப்தார் விழாவை நீங்கள் இதயபூர்வமாகவா புறக்கணித்திருந்தீர்கள்? அசாத் சாலி மஹிந்த ராஜபக்ஸவின் ... Read More »

வட மாகாண முஸ்லிம்களும் தமிழ் மக்களின் கடமையும்.

download

- ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி) ‘சொர்க்கமே என்றாலும் சொந்த ஊர் போல் வராது’ என்று சொல்வார்கள். ஏனெனில் நாம் பிறந்து, வளர்ந்த மண்ணுக்கும் நமக்கும் இடையிலான உறவென்பது தொப்புள்கொடி உறவு போன்றது. மரத்தின் கிளைகள் எவ்வளவு பரந்து விரிந்து இருந்தாலும் மண்ணுக்குள் புதைந்திருக்கின்ற வேர்களுக்கு இருக்கின்ற முக்கியத்துவத்தைப் போல் பிறந்த மண் என்பது நம்முடைய அடிநாதமாகின்றது. இன்று புலம்பெயர்ந்து கனடா, இலண்டன், ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சுவிஸ்டர்லாந்து, நோர்வே, கனடா போன்ற மேற்குலக நாடுகளில் செல்வச் செழிப்போடும் சகல சௌபாக்கியங்களோடும் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களைக் கேட்டால்…. தாய் ... Read More »

கல்குடாத்தொகுதி மக்கள் கோழைகளா???

IMG_20170722_071033

மஹ்றூப் முஹம்மது றிஸ்வி நவீன ஒரு சமூகத்தை மூன்று வகையான சக்திகள் வழிநடாத்த வேண்டும். 1. களத்திலுள்ள பிரச்சினைகளை  ஆய்வு செய்து விழிப்புணர்வுடனான கருத்துப்பரிமாறல் மற்றும் திட்டமிடல்களை செய்யும் ஒரு கூட்டம். இவர்கள் தெளிவான அதிகார , படித்த, பணபலப்பின்புலங்களை நெறியாயளக்கூடிய இளமை ததும்பும் ஆளுமைகளாக இருப்பர். எல்லோரும் களத்தில் செயற்படவோ அல்லது எல்லோரும் களத்தை திட்டமிடவோ அல்லது  எல்லோரும் சமாதானம் பேசவோ முடியாது. அதுதான் நியதி. எனவே, இவர்கள் களத்தை திட்டமிட்டு கள செயற்பாட்டாளரகளை ஒழுங்குபடுத்தி அவர்கள் பின்னால் அணிதிரள்பவர்களாக இருப்பர். இதற்கு ... Read More »

அமானிதம்-எம்.எம்.ஏ.ஸமட்

ஞ

காற்று, நீர், நிலம், காடு என மனிதனின் பயன்பாட்டுக்காக இறைவன் அளித்த இயற்கையின் அத்தனை வளமும் மனிதன் மீது சுமத்தப்பட்ட அமானிதங்கள். அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பைச் சுமந்தவனாக மனிதன் அவற்றின் பயனோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றான். மாறாக, இயற்கைக்கு அநியாயம் இழைக்கின்ற போது, இயற்கையின் அமானிதத்தைக் காக்க மறக்கின்ற போது, அந்த இயற்கையாலேயே  அழிவையும் சந்திக்கின்றான். உலகளவில் நிகழும் பல இயற்கை அழிவுகளுக்கு மனித செயற்பாடுகளே காரணமாக அமைந்து விடுகின்றன என்பது நிதர்சனமாகும். அவ்வாறு தான் தனி நபர் பெறும் பட்டமும், பதவியும் அவருக்கு அமானிதம். ... Read More »