அரசியல்

உபவேந்தர் இஸ்மாயிலுக்கு நீதியைப் பெற்றுக்கொடுங்கள்-பாராளுமன்றத்தில் அமைச்சர் றிசாத் கோரிக்கை!

13933446_299797423707537_454209346_n

அக்மல் றொஷான் சுயநலம் கொண்டவர்களின் சதி முயற்சியினால் இடை நிறுத்தப்பட்ட புத்தளம் இலவன்குளப்பாதையை மீண்டும் புனரமைக்க நடவடிக்கை எடுத்து கொழும்பு – புத்தளம் – சங்குபிட்டி வழியாக யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் மக்களின் பயணத்தை இலகுபடுத்துமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று (23) மாலை பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார். அமைச்சர்களான லக்‌ஷ்மன் கிரியெல்ல, மகிந்த சமரசிங்க ஆகியோரின் அமைச்சின் கீழான குழுநிலை விவாதத்தில் அவர் உரையாற்றும் போதே இந்தக்கோரிக்கையை விடுத்தார். இலவன்குளப்பாதையைப் புனரமைப்பதன் மூலம் சுமார் 120 கி. மீற்றர் பயணத்தூரத்தில் குறைவு ஏற்படுகின்றது. இதன் ... Read More »

கத்தாரில் இடம்பெற்றது முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடா?

15094464_1913216958911643_1163128576128655838_n-800x414

முகம்மத் இக்பால்-சாய்ந்தமருது கத்தாரின் தலைநகரம் தோகாவிலுள்ள பனார் அரங்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் கடந்த 19ஆம் திகதி கத்தாரிலுள்ள இலங்கை வாழ் சகோதரர்களைச் சந்தித்ததுடன், நாட்டில் நடைபெறுகின்ற சமகால அரசியல் சம்பந்தமான உரையொறையும் நிகழ்த்தினார். தங்கள் தேசிய தலைவரின் வருகையை அறிந்து, கத்தாரில் பணி புரிகின்ற எமது சகோதரர்கள் கத்தார் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் எந்தவித அழைப்புக்களுமின்றி வந்து சேர்ந்தார்கள். தலைவருடனான சாதாரண சந்திப்பு என்றிருந்த அந்த நிகழ்வானது, இறுதியில் மாநாடு போன்று முஸ்லிம் காங்கிரஸ் ... Read More »

நல்லாட்சியில் இனவாதக்கைதுகள்

index

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-சம்மாந்துறை. இலங்கை நாட்டில் வாழ்கின்றவர்களில் அதிகமானவர்கள் இனவாத நீரை அருந்தியே தங்களது வாழ்வை கழித்து வருகின்றனர். இனவாதிகள் என்பவர்கள் இலங்கையில் வாழ்கின்ற பெரும்பான்மை இனத்தில் மாத்திரமல்ல. சிறுபான்மையின மக்களிடமும் இருப்பது மறுக்க முடியாத உண்மை. ஒருவர் தனது மதத்தை இன்னுமொரு மதத்தைப்பாதிக்காத வகையில் போதிக்கும் போது அவரை ஒரு போதும் தவறானவராகக் கூற முடியாது. ஒருவர் தனது மதத்தை ஏனைய மதத்தினரை அழித்து, தவறான முறையில் சித்தரித்து பரப்பும் போதே பிரச்சினைகள் தோன்றுகின்றன. சில வேளை, ஒருவர் தனது மதத்தை ... Read More »

யுத்தம் முடிந்து விட்டதா? யார் சொன்னது?

index

எம்.ஐ.முபாறக் ஆயுத ரீதியான யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் இந்நாட்டின் பெரும்பான்மை இன மக்கள் வேண்டுமென்றால் நிம்மதி அடைந்திருக்கலாம். நிரந்தர அமைதியை அனுபவிக்கத் தொடங்கியிருக்கலாம். ஆனால், தமிழ்-முஸ்லிம் மக்கள் இதற்கு விதிவிலக்காவர். யுத்தம் நிறைவுக்கு வந்து ஏழு வருடங்கள் கடந்து விட்டன. இந்த ஏழு வருடங்களில் வடக்கு-கிழக்கில் வாழும் தமிழ்-முஸ்லிம் மக்கள் உண்மையிலேயே நிம்மதியாகத்தான் வாழ்கின்றார்கள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமுமில்லை. அவர்கள் பெரும்பான்மை இன மக்களைப்போல் சமமாக நடத்தப்படுகின்றார்கள் என்பதற்கும்  எந்தவிதமான ஆதாரமுமில்லை. அவர்கள் இனரீதியாக ஒதுக்கப்படவில்லையென்பதற்கும் எந்தவிதமான ஆதாரமுமில்லை. சிறுபான்மை இன ... Read More »

யுத்தத்தினால் கல்குடா முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை வரலாற்றுப் பதிவுகளாக சமர்ப்பிக்கின்றார் மீராவோடை சுபைர்

20161122_221344

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் மட்டக்களப்பு-கல்குடாத்தொகுதி முஸ்லிம் சமூகம் கடந்த 1985 தொடக்கம் 1990 ஆண்டு காலப்பகுதிகளில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையின் பொழுது தமிழீழ விடுதலைப்புலிகளினால் எதிர்நோக்கிய இனச்சுத்திகரிப்பு மற்றும் விவசாய, பொருளதார அழிப்பு தொடர்பான தனது அனுபவத்தினை ஓட்டமாவடி-மீராவோடையைச் சேர்ந்த சுபைர் எதிர்ச்சமூகத்தின் வரலாற்றுப் பதிவிற்காக நெஞ்சிலிருந்து எனும் சிறுகதையாகத் தயாரித்து, அதற்கு மேலும் உரம் சேர்க்கும் வகையில் தனது கருத்தினையும் முன்னுரையாக இரண்டு கவிதைகளையும் வீடியோக் காணொளியாக இங்கே சமர்ப்பிக்கின்றார். நெஞ்சிலிருந்து… இது நடந்து இருபத்தாறு வருஷம் இன்னும் அந்தச்சம்பவம் நெஞ்சுக்குள் தீயாய்…. ... Read More »

சிறுபான்மையினருக்கெதிரான இனவாதச்செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் சந்திப்பு-கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

147740464844546

ஊடகப்பிரிவு தற்போது முஸ்லிங்கள் மற்றும் தமிழர்களுக்கெதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாதச்செயற்பாடுகள் மற்றும் அதிகரித்து செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மையினரை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் இனவாதச்செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதியைத் தௌிவுபடுத்தி, சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் ஜனாதிபதியிடம் எடுத்துரைக்கவுள்ளேன். அத்துடன், கிழக்கு மாகாணத்தில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைக்குத் தீர்வொன்றை பெற்றுத்தர ஜனாதிபதியை வலியுறுத்தவுள்ளதுடன்,  அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களில் கிழக்கு மாகாணத்துக்கு கூடுதல் அவதானம் ... Read More »

அமைச்சர் ஹக்கீம் உலக முஸ்லிம் கூட்டமைப்பைச் சந்தித்தாரா?

147199871812820

இப்றாஹிம் மன்சூர் ஆசிரியர் அமைச்சர் ஹக்கீமின் கட்டார் விஜயமானது முஸ்லிம் புத்திஜீவிகளிடையே பலத்த எதிர்ப்பைத் தோற்றுவித்துள்ளது. இதனை மூடி மறைக்க அவர்களது ஆதரவாளர்கள் சிலர் அமைச்சர் ஹக்கீம் உலக முஸ்லிம்களின் கூட்டமைப்பை சந்திக்கவே சென்றதாகக் கூறியுள்ளனர். அந்த செய்தியில் எந்த உண்மையும் இருப்பதாக அறிய முடியவில்லை. இந்த வதந்தியைப் பரப்புவர்களில் அதிகமானவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நன்றாக ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த இனவாதத்தால் வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கப்பாலுள்ள மக்களே அதிகம் அச்சத்திலுள்ளனர். உங்கள் தாய், சகோதரி பாதிப்படாமலிருப்பதால் உங்கள் ... Read More »

நீதியமைச்சர் ஞானசார தேரரைப் போன்று இனவாதம் பேசுகிறார் – பிரதியமைச்சர் ஹரீஸ் குற்றச்சாட்டு

%e0%ae%9a

(அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாஸீன்) நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இலங்கை முஸ்லிம்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிலிருப்பதாக பாராளுமன்றத்தில் கூறியிருப்பது ஞானசார தேரரின் இனவாதப் பேச்சை ஒத்ததாக அமைவதோடு, தெற்கிலுள்ள சிங்கள இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு வலுச்சேர்ப்பதாக அமைகின்றதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தேசிய தொலைக்காட்சி நேத்ரா அலை வரிசையில் கடந்த வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்ற ‘வெளிச்சம்’  நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இலங்கை முஸ்லிம்களை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புபடுத்தி ஆற்றிய ... Read More »

அமைச்சர் ஹக்கீமின் கட்டார் கனிமூன்

hakeem-thalaiyil-kai

இப்றாஹிம் மன்சூர் “ரோம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் வீணை வாசித்து கொண்டிருந்தானாம்” இந்த கதையாகத் தான் தற்போது அமைச்சர் ஹக்கீமின் கதையும் அமைந்துள்ளது. அமைச்சர் ஹக்கீமின் கட்டார் நாட்டிற்கான  விஜயமானது, பல நாட்கள் முன்பு திட்டமிடப்பட்ட ஒன்றாகவிருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் அது அவசியமற்றவொன்றாகக் கருதி, அதனை அவர் பிற்போட்டிருக்க வேண்டும். தற்போது இலங்கையில் இடம்பெறும் சம்பவங்களைப் பார்க்கும் போது, முஸ்லிம்களுக்கெதிரான ஒரு கலவரம் ஏற்படுவதற்கான தோற்றங்களை இந்த வாரம் மிகவும் அதிகமாக அவதானிக்க முடிகிறது. இதனை ஒரு சிங்கள ஊடகமும் வெளியிட்டிருந்தது. ... Read More »