அரசியல்

அரசியலமைப்பு மாற்றம் அரசுக்கு ஆப்பாகுமா?

Untitled-1

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-சம்மாந்துறை. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை வீழ்த்தி அமையப்பெற்றுள்ள ஆட்சியை நோக்கி இலங்கை மக்கள் மிகப்பெரும் கனவுகளோடு காத்திருந்தனர். அவைகள் ஒவ்வொன்றாக இவ்வாட்சினாலும் சாத்தியப்படாது என்ற மனோநிலைக்கு இலங்கை மக்களை தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. தற்போதைய ஆட்சியாளர்கள் கடந்த  ஜனாதிபதித்தேர்தல் பிரசார காலத்தின் போது, தேர்தல் முறை மாற்றம், ஜனாதிபதியின் அதிகாரக்குறைப்பு உட்பட சில விடயங்களில் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்ற வாக்குறுதியை இலங்கை மக்களிடம் வழங்கியிருந்தனர். இலங்கை மக்கள் தற்போதைய இலங்கை அரசியலமைப்பின் ... Read More »

தமிழ், முஸ்லிம் உறவைச்சீர்குலைக்கும் முயற்சியில் மட்டு.விகாராதிபதி – ஜுனைட் நளீமி

Untitled-1

நேற்றைய முன்தினம் மட்டக்களப்பு-மீராவோடை சக்தி வித்தியாலய விளையாட்டு மைதான விஸ்தரிப்புக்காக காணி கோரி ஆர்ப்பாட்டமமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மங்கலராமாய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பாடசாலைக்காணியை அத்துமீறி பிடித்துள்ளதாகவும், மாவட்டத்தில் முஸ்லீம் அதிகாரிகள் இன ரீதியாகச் செயற்படுவதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார். குறித்த காணி தொடர்பில் எவ்விதப்பின்னணியுமின்றி முஸ்லிம்களோடு தொடர்புபடுத்தி, தமிழ் சகோதர இனத்துடன் முறுகல் நிலையைத் தோற்றுவிப்பதாகவே அவரது கருத்து அமைந்திருந்தது. குறித்த காணியில் 1950களிலேயே முஸ்லிம்கள் குடியேறி வாழ்ந்து வந்துள்ளனர். தற்போது பதுரியா என அழைக்கப்படும் இப்பிரதேசம் கொண்டயன்கேணி ... Read More »

“பெருந்தலைவர் அஷ்ஃரபின் ஆணையை அப்பட்டமாக மீறும் செயலே ‘அரசியல் வங்குரோத்துகளின்’ கூட்டமைப்புக்கான கோஷம்“- பழீல் BA

dd

முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவர் ‘மாண்புமிகு றஊப் ஹக்கீம்’ அவர்கள் ‘முஸ்லிம் கூட்டமைப்பு’ பற்றி முதன் முதலாக தனது கருத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் நல அபிவிருத்தித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வொன்றில் வைத்து வெளியிட்டிருந்தார். “ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் பலமான பேரியக்கம். அரசியல் பிழைப்பிற்காக “முஸ்லிம் கூட்டமைப்பு” என்ற பெயரில் முகாம் அமைப்போர் தொடர்பில் நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.” என மிகவும் ஆழமான யதார்த்தபூர்வமான விமர்சனக்கருத்தை ஊடகவியலாளர்களின் கேள்விக்கு விடையளிக்கும் போது வெளியிட்டார். இக்கருத்தை எழுமாந்த அடிப்படையில் அவர் கூறவில்லை. ... Read More »

முல்லைத்தீவுப் பேரணியும் முஸ்லிம்களும்- வை.எல்.எஸ்.ஹமீட்

943948_1535310096768337_2132499436675919373_n

முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கெதிராக பேரணி நடாத்தப்பட்டிருக்கின்றது. காடுகளை அழித்து முஸ்லிம்களைக் குடியேற்ற முற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மனிதன் வாழ்வதைவிட காடுகள் வாழ வேண்டும் என்ற நியதி இன்று இரு பேரினவாதங்களாலும் முன்வைக்கப்படுகின்றது. காடுகள் மனித ஆரோக்கிய வாழ்வுக்கு இன்றியமையாதவை என்பதை மறுப்பதற்கில்லை. அது எல்லோருக்கும் பொதுவானவொரு நியதியாகக் கடைப்பிடிக்கப்படுமானால், ஆனால் அது முஸ்லிம்களுடைய விடயத்தில் மாத்திரமே கடைப்பிடிக்கப்படுகின்றது. வில்பத்து, யால போன்ற பாதுகாக்கப்பட்ட சரணாலயங்கள் கூட அழிக்கப்பட்டு பெரும்பான்மைச் சமூகத்தவர்களின் புதிய பாரிய குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. காடுகள் மனிதவாழ்வுக்கு அத்தியாவசியமானது என்ற நியதி அங்கு ... Read More »

முஸ்லிம் கூட்டமைப்பு-கனவில் கட்டும் தேன்கூடு -01

IMG_20170717_182633

-நாச்சியாதீவு பர்வீன்- தேன் ஒரு இனிமையான சுவையான பண்டமாகும். தேனை விரும்பாதவர்கள் இந்த உலகத்தில் யாரும் இருக்கமாட்டார்கள். தேன் ஒரு நோய் நிவாரணியாகும். தேனைத்தொட்டவன் கையை நக்குவான் என்கின்ற கிராமிய பழமொழி ஒன்றும் வழக்கத்தில் உள்ளது. இதன் மூலம் தேனின் பெறுமதியும் இனிமையும் தெளிவாகின்றது. உண்மையிலேயே தூய்மையான தேனை சுவைத்து உண்பவர்கள் அதிஷ்டசாலிகள் எனலாம். ஆனால், உறக்கத்தில்  தேனை உண்ணுவது போன்று  கனவு காண்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தேனின் சுவையை உணர்ந்து தேன்கூட்டினை கனவில் அமைத்து அங்கே கனவினிலேயே தேனீக்களை வளர்த்து தேனை உற்பத்தி ... Read More »

முஸ்லிம் கூட்டமைப்பின் இலட்சணங்கள்?-ஏ.எல்.நிப்றாஸ்

scsc dc

முஸ்லிம் கூட்டமைப்பு – முஸ்லிம்களுக்கான கூட்டமைப்பாக இருக்க வேண்டும் ! அதன் நோக்கங்கள், ஹக்கீமைத் தோற்கடிப்பது போன்ற அற்பத்தனமானதாக இருக்கக்கூடாது. கூட்டுச்சேர்த்து தோற்கடிக்க வேண்டிய பலத்துடனும் அவரில்லை. 1) முஸ்லிம்களை தனியொரு தேசியமாக மாற்றுதல் 2) அரசியலமைப்பு, இனப்பிரச்சினைத்தீர்வில் முஸ்லிம்களின் பங்கை உறுதிப்படுத்தல் 3) வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தல் 4) முஸ்லிம் தனி மாகாணத்திற்கு குரல் கொடுத்தல் 5) வடபுல முஸ்லிம்களை மீள்குடியேற்றல் 6) முஸ்லிம்களின் இருப்பை உறுதிப்படுத்தல் 7) பறிகொடுக்கப்பட்ட காணிகளை மீட்டல் 8) கிழக்கிற்கு வெளியிலுள்ள ... Read More »

உத்வேகம் பெறும் தூய முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி!

dss

தினக்குரலுக்கு சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் வழங்கிய பிரத்தியேக பேட்டியில் கட்சியைத்தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளராக இருந்த பஷீர் சேகுதாவூத் தெரிவித்திருந்தார். அப்போது அவர் ஒரு தனி மரம் போலவே காணப்பட்டார். ஆனால், கிழக்கு மாகாண சபைத்தேர்தல் நெருங்கி வருகின்ற இன்றைய சூழலில் இவருடைய இலட்சியப்பணியில் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளார் என்று கூறுவது சாலப்பொருத்தமானதாகவுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் அடிமரம் என்று வர்ணிக்கப்படுபவர் ஹசன் அலி. கிழக்கிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பதவி கிழக்குக்கு வெளியே உள்ள நிலையில், ... Read More »

பயங்கரவாதத்தின் ஆணிவேர் டார்வினின் தத்துவம்

picsart_07-16-09-00-16

M.I. Muhammadh​ Safshath, University of Moratuwa சடத்துவ வாதத்தத்துவத்தின் இயல்புகளைத் தழுவியதாக, உறுதிப்படுத்தும் அறிவியல் சான்றுகளின் அடிப்படையற்ற நிலையில் தோற்றம் கண்ட ஒரு கோட்பாடாகவே டார்வினின் தத்துவம் உலக வரலாற்றில் இனங்காணப்படுகிறது. விஞ்ஞானக்கண்டுபிடிப்புகளால் இத்தத்துவம் உறுதிப்படுத்தப்படா நிலையில் சடத்துவ வாததத்துவத்தின் பெயரில் கண்மூடித்தனமாக ஆதரிக்கப்பட்டது. அளவு கடந்த இவ்வார்வக்கோளாறு பலவிதமான பேரழிவுகளுக்கு காரணமானது. ‘மனிதன் எதேச்சையாக தோன்றியவன் உயிர் வாழ மேற்கொண்ட உழைப்பின் போராட்டத்தில் உருவெடுத்த ஒரு பிராணி’ எனும் எண்ணப்பாட்டை திணித்த இத்தத்துவம் உலக வரலாற்றில் பேரிழப்புகளை கருவாக்கிய பயங்கரவாத தத்துவங்களான ... Read More »

கிழக்கில் மயில் ஆட முடியுமென்றால்….வடக்கில் ஏன் குதிரை ஓட முடியாது?-ஜான்சி ராணி சலீம் விஷேட பேட்டி

ddvd

- ரி.தர்மேந்திரன் - கிழக்கில் மயில் ஆட முடியுமென்றால் வடக்கில் ஏன் குதிரை ஓட முடியாது? என்று எமக்கு வழங்கிய பேட்டியில் வினவினார் தேசிய காங்கிரஸ் கட்சியின் மகளிர் பொறுப்பாளரும், வட மாகாண அமைப்பாளருமான ஜான்சிராணி சலீம். வட மாகாண முஸ்லிம்களின் அரசியலில் முதலாவது சாதனைப் பெண்ணாக வலம் வரக்கூடிய வாய்ப்பு முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா மூலமாக இவருக்கு கிடைத்துள்ளது. இவருடனான நேர்காணல் வருமாறு:- கேள்வி:- உங்கள் பெயரில் ஏதோ ஒரு இரகசியம் புதைந்திருப்பது போல தெரிகின்றதே? ஜான்சிராணி சலீம் பாரத தேசத்தின் சுதந்திரத்துக்காகப் ... Read More »

‘’அரசியல்வாதிகளுக்கு பேரினவாத மோதல்கள் அவசியமாகின்றன”– எம்.ரிஷான் ஷெரீப்

Untitled-1

குறிப்பு – கடந்த 02.07.2017ம் திகதியன்று ராவய சிங்கள வார இதழில் வெளிவந்த நேர்காணலின் தமிழ் வடிவம். நேர்காணல்– தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி இலங்கையில் தமிழ் பேசும் சமூகத்திலிருந்து கொண்டு, சர்வதேச ரீதியில் பரந்திருக்கும் தமிழ் வாசகர்களையும் கருத்திற்கொண்டு படைப்புக்களை எழுதி வரும் எம்.ரிஷான் ஷெரீப் ஒரு இலக்கியப்படைப்பாளி, மொழி பெயர்ப்பாளர், ஊடகவியலாளர் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர் என தேசத்தின் எல்லை தாண்டிச்சென்ற, இலங்கையின் மாவனல்லைப் பிரதேசத்தில் பிறந்த இளைஞர் ஒருவராவார். இது அவருடனான ஒரு கலந்துரையாடல். இந்தியாவில் 2010 ஆண்டு வெளிவந்த ரிஷானின் முதலாவது தொகுப்பைக்குறித்தும், ... Read More »