அரசியல்

காத்திருக்கும் கரங்கள்-எம்.எம்.ஏ.ஸமட்

த

மனித செயற்பாட்டினால் ஏற்படும் அனர்த்தங்களைத் தடுக்க முடிந்தாலும், இயற்கையின் நியதியினால் நிகழும் அனர்த்தங்களை மனிதனால் தடுத்து நிறுத்த முடியாது.  வெள்ள அனர்த்தம்  உட்பட  மண்சரிவு, பூகம்பம், சூறாவளி, கடற்கோள், வறட்சி போன்ற இயற்கை அனர்த்தங்கள் எவ்வாறு ஏற்படும் என்று கூறவோ அல்லது அவ்வாறு ஏற்படும் இயற்கை அனர்த்தங்களை தடுக்கவோ மனிதன் சக்தி பெறமாட்டான். அது படைத்த இறைவனின் சக்திக்குட்பட்டது. மனிதனின் கரங்கள் புரிகின்ற தீமைகளுக்கான சோதனையாகவே இவ்வாறான அனர்த்தத்கங்கள் படைத்த இறைவன் புறத்திலிருந்து ஏற்படுகிறது என்பதையும் மறுக்க முடியாது. எந்தந்தப் பாவங்கள் உலகில் இடம்பெறுமோ ... Read More »

இலங்கை அரசியல் நெடுகிலும் பௌத்த ஆதிக்கம்- சாய்ந்தமருது எம்.எம்.எம்.நூறுல்ஹக்

noo

“விகாரையொன்றை அமைத்தாலோ அல்லது கோவில் அல்லது பள்ளிவாசல் போன்ற மதஸ்தலங்களை அமைத்தாலோ அங்கு பிரச்சனை ஏற்படுகிறது. இவ்வாறான மதஸ்தலங்கள் இருக்கும் இடங்களில் இருக்க வேண்டிய சுதந்திரமும் சமாதானமுமே தவிர, மோதல்கள் கிடையாது. எனினும், ஏனிந்த மோதல்கள் ஏற்படுகின்றன என்பதற்கான பதில்கள் எனக்கு தெரியும். நாட்டில் சமாதானம் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதற்கும் அரசுக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதற்குமே இவ்வாறு செயற்படுகின்றனர். அதிகாரத்திலிருந்து இன்று இல்லாமல் போனவர்களை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டு வரவே இவை இடம்பெறுகின்றன என்றும்” ஜனாதிபதி மைத்திறிபால சிறிசேன சிட்னி நகரில் ... Read More »

மறந்த உள்ளங்களுக்கு ஒரு நினைவூட்டல்: அஷ்ரஃப் ஏன் படிக்கப்பட வேண்டும்? தொடர்-01

WhatsApp Image 2017-05-30 at 2.11.56 PM

ஓட்டமாவடி எம்.என்.எம்.யஸீர் அறபாத் (கல்குடா) பதினாறு ஆண்டுகள் உருண்டு விட்டன. எப்போதெல்லாம் அவரை நினைவு கூர்ந்தோம். தேர்தல் காலங்களில்- இறந்த தின நினைவு நிகழ்வுகளின் போது – வேறு எப்போது? அவரை காலம் பூராவும் நினைவு கொள்ளத்தக்க அம்சங்கள் ஏதேனும் இருக்கின்றதா? இப்படி – ஒருவரை நினைவு கொள்ளச் செய்வது என்ன? மனிதர்கள், மனிதர்களைத் தாராளமாகவும், ஏராளமாகவும் நினைவுபடுத்திக் கொள்கிறார்கள். தனது மரண பரியந்தம் நினைவு கூர்கின்றவர்களும் இருக்கின்றார்கள். எல்லாப் பிரிவினர் மத்தியிலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்விதமான நினைவுகூரல்கள் தொடர்கின்றன. ஆத்மார்த்தமான தம்பதியர் மத்தியில், ... Read More »

சவால்களுக்குள் சமகாலம்- எம்.எம்.ஏ.ஸமட்

samad -2

பல்லின சமூகங்களைக் கொண்ட இலங்கை ஆண்டு தோறும் பல்வேறு சவால்களை எதிர்நோக்குகிறது. அச்சவால்களில் சில சவால்கள் உருவாகும் காலங்களிலேயே வெற்றி கொள்ளப்பட்டும், சில சவால்கள் வெற்றி கொள்ளப்படாது சந்ததி வழியாக விடப்பட்டும் வருவதை வரலாற்றில் காண முடிகிறது. இலங்கை எதிர்கொண்ட சவால்களுள்  ஏகாதிபத்தியவாதிகளின் பிடியிலிருந்து இந்நாட்டை மீட்டெடுக்க  மேற்கொண்ட போராட்டங்களும் அதன் வெற்றியும் அடங்கும். சுதந்திர வெற்றியின் பின்னர் அவ்வப்போது தலைதூக்கிய சிவில் கொள்கைப் போராட்டங்களும், இனவாதச் செயற்பாடுகளும், அதனால் உருவான இனப்பிரச்சினையும், இயற்கை அனர்த்தங்களும் மேலும் பல சவால்களுக்கு இலங்கையை முகங்கொடுக்கச் செய்தன. ... Read More »

சமூக மாற்றத்தின் மூலம் தனி நபர் ஆளுமைக்கு உயிரூட்டுவோம்!-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்

972271_10151528844433401_738963329_n

எந்தவெரு சமூக மாற்றமும் தனி மனித மாற்றங்களின் மூலம் உயிர் பெறுகிறது. மாற்றத்திற்கான புரட்சி என்பது எமது தனிப்பட்ட உணர்வுகளிலிருந்து தான் முதலில் படையெடுக்க வேண்டும். சமூகப்புரட்சி என்பது ஆயுதம் ஏந்துவதால் முழுமைப்பட முடியாது. ஆயுதப்புரட்சி எப்போதும் ஒரு பக்க வெற்றிகளை மட்டுமே தக்க வைக்கும். ஆனால், எமது உணர்வுகள் மூலம் மாற்றத்தை உருவாக்க ஆரம்பிக்கும் புரட்சி முழுச்சமூகத்தையும் வெற்றியாளராகவும், பங்களராகவும் மாற்றும். நாம் வாழ்கின்ற வாழக்கையின் ஒவ்வொரு நாட்களிலும், ஒரு நிமிடமாவது எங்களது சிந்தனையை பொதுமைப்படுத்த வேண்டும். இந்த வேகமான நாகரீகம் தனக்கு ... Read More »

முஸ்லிம் காங்கிரஸினை விமர்சிக்கவில்லை: ரவூப் ஹக்கீமின் பிழைகளையே சுட்டிக்காட்டுகின்றோம்-நாபீர் பெளண்டேசன் (வீடியோ)

cvx

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் அமைப்பாகவும் இஸ்தாபனமாகவுமே பார்க்கப்பட வேண்டும். அதனுடைய உருவாக்கம் மற்றும் ஏனைய விடயங்களெல்லாம் அம்பாறை மாவட்டத்தினை உயிர் நாடியாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. அதே போன்று, ஜனநாயக ரீதியான கண்ணோட்டத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்திலுள்ள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியும், முழு கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியும் அதனோடு சேர்த்து வடகிழக்கிற்கு வெளியிலுள்ள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியும் இயங்கிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சியாகவே நாங்கள் அதனைப்பார்க்கின்றோம். ஆனால், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினையும் ஏனைய கட்சிகளையும் விமர்சித்து ... Read More »

கூட்டுச்சதி?- பொதுபல சேனா+சிவ சேனா

972271_10151528844433401_738963329_n

அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா கூட்டுச்சதிகளின் அரங்கேற்ற மையமாக இலங்கை மாறியுள்ளது. ஒரு மதத்தை, அவர்களின் பொருளாதாரத்தை பகிரங்கமாகத் தாக்குகின்ற தெரு ரவுடி ஞான சார தேரர். நீதி மன்றத்தை அவமதித்தமைக்காக கைது செய்வதற்கு இன்னும் தேடுகிறது. உண்மையில் தேர்தல் தோல்வி பயம் பேரினவாத ஆட்சியாளர்களுக்கு ஞான சார தேரர் விடயத்தில் உண்டு. மேலும் நோர்வே அரசின் ஆசிர்வாதத்துடன் ஆரம்பமாகி மஹிந்த அரசால் வளர்க்கப்பட்டு தற்போது இந்தியப் பிரதமர் மோடியின் நேரடிக்கண்கானிப்பில் சிவசேனவின் வழிகாட்டலில் கடந்த மார்ச் மாதம் முதல் இயங்கத்தொடங்கியுள்ளனர். தற்போது இந்திய ... Read More »

பொம்மலாட்டம் – இனவாதத்தை ஆட்டுவிப்பது யார்? -

த

- ஏ.எல்.நிப்றாஸ் தூங்குகின்ற போது சிலர் உரிய நேரத்தில் தானாகவே கண்விழித்து விடுவார்கள். இன்னும் சிலர் அலாரம் வைத்து கண்விழிப்பார்கள். அநேகர் அலாரம் ஒலி எழுப்ப எழுப்ப அதனது ஒலியை நிறுத்தி விட்டு, சிறுதூக்கம் கொள்வார்கள். இப்படியே பொழுது விடிந்து விடும். இன்னும் சிலருக்கு அதைவிடப் பெரிய ஒலியை எழுப்பினாலும் கண்விழிக்கச் செய்வது பெரும்பாடாக இருக்கும். இலங்கையில் இனவாதமும் கடும்போக்கு சக்திகளின் செயற்பாடுகளும் தலைவிரித்தாடுகின்ற போதும், நாட்டின் நல்லிணக்கத்திற்கு அபாய சங்காக அது ஒலித்துக் கொண்டிருக்கின்ற போதும் அரசாங்கமும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோரும் இன்னும் முழுமையாக ... Read More »

இலங்கையில் மீண்டுமொரு சிங்கள-முஸ்லிம் கலவரம் உருவாகும் அபாயம்?

18741266_659781427562976_716308066_n

அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் (பாதிஹி) இலங்கை ஒரு பல்லின சமூகங்களைக் கொண்டுள்ள நாடு. இங்கு பெளத்தர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்று மூவின சமூகங்களும் இன, மத வேறுபாடுகளின்றி ஐக்கியமாகவும் சகவாழ்வுடனும் ஆண்டாண்டுகளாக வாழ்ந்து வந்ததுள்ளர்கள். வாழ்ந்தும் வருகின்றார்கள். இப்படி வாழ்ந்து வந்த பல்லின சமூகங்களுக்கு மத்தியில் இன்று ஒரு சில இனவாதத்கருத்தாடல்களும் தாக்குதல்களும் விருட்சமடைந்து வருகின்றது. கடந்த ஒரு வாரமாக இதுவரைக்கும் முஸ்லிம்களின் 8 வர்த்தக நிலையங்கள் தீக்கரையமாக்கப்பட்டுள்ளது. பல பள்ளிவாசல்கள் மீது பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் இனவாதத்தைத் ... Read More »

இலங்கையில் பெறுமானங்களைக் கொண்ட அணுகுமுறையே அவசியம்

18718583_661186940755758_769346368_n

அஷ்ஷெக் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி ) இலங்கை பெளத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடு. பெளத்த மதத்தின் போதனைகள் பண்பாட்டியல் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளவை. அவை பண்பாடு ரீதியான போதனைகளூடாக தனி நபர்களையும் சமூகத்தையும் வழிப்படுத்துகின்றது. எனவே, இலங்கை முஸ்லிம்களாகிய நாங்கள் இஸ்லாமிய சிந்தனைகளை அறிமுகஞ்செய்யும் போது, பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்ட அணுகுறையே மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன். காரணம் ஆரம்பகால இஸ்லாமிய அறிஞர்கள் நாடுகளை இரண்டாகப்பிரிப்பார்கள். இஸ்லாமிய நாடுகள் (தாருல் இஸ்லாம்) அடுத்தது போராட்ட நாடுகள் (தாருல் ஹர்ப்) என. ... Read More »