ஆன்மீகம்

“ஸகாத்துல் பித்ர்” கூட்டாகவா? தனியாகவா? பணமாகவா? பொருளாகவா? எவ்வாறு நிறைவேற்றுவது ? -எம்.எல்.பைசால் காஷிபி

ww

“ஸகாத்துல் பித்ர்” என்ற  பெயரும், அதன் சட்டதிட்டங்களும் ரமழான்  மாத இறுதிப்பகுதியில் விவாதிக்கப்பட்டு பெருநாள் தொழுகையுடன்   நிறைவடைவதை நாமறிவோம். தேவையின் போது, நாம் உரிய அறிவினைப்பெற்று, அதன்படி  நடக்க ஆர்வாமாய் இருப்பதே இதற்குக்காரணம். இன்று எமது பிரதேசங்களில்  “ஸகாத்துல் பித்ர்” பற்றி  பின்வரும்  கருத்துக்களும், கேள்விகளும் நிலவுகின்றன. 01.அரிசி, தானிய வகையினைத்தவிர வேறேதும் உணவுப்பொருட்களைக் கொடுக்கலாமா? 02.தனியாக  நிறைவேற்றும்  அதே வேளை, கூட்டாக  நிறைவேற்ற நபி வழியில் ஆதாரமுண்டா? 03.தானிய வகையினைத்தவிர்த்து அதன்  அளவுக்கேற்ப பெறுமதியை (பணமாக) கொடுக்கலாமா? மேற்சொன்ன விடயங்கள்  பற்றி  நீண்ட ... Read More »

வரம்பு மீறுதல்!- எம்.எம்.ஏ.ஸமட்

scs

புனித ரமழான் மாதம் நம்மை விட்டுப்பிரிவதற்கு இன்னும் சில தினங்களே எஞ்சியிருக்கிறது. இந்நிலையில், ஈகைத்திருநாளான பெருநாளை எதிர்பார்த்தவர்களாக, அவற்றுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்பவர்களாக நோன்பு நோற்றவர்களும், நோற்காதாவர்களும் ஏற்பாட்டுக்களத்தில் இறங்கியிருப்பதை முஸ்லிம்கள் செறிந்து வாழும் நகர மற்றும் கிராமப்புற பிரதேசங்களிலுள்ள ஜவுளிக்கடைகளை அவதானிக்கின்ற போது புரிய முடிகிறது. பெருநாள் தினத்திற்கான ஆடைத்தெரிவுகளுக்காக கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் வணக்க வழிபாடுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அதிகமாக அமையப்பெற்றிருப்பதையும் நோக்க முடிகிறது. புனித மாதத்தின் கடைசிப்பத்து இரவுகளையும், பகல்களையும் இறை வணக்க வழிபாடுகளில் கழிக்க வேண்டுமென அறிந்தும், அவை பற்றி ... Read More »

இசை உலகில் புகழ்பெற்ற கேட் ஸ்டீபன்ஸ்–யூசுப் இஸ்லாமாக மாறிய வரலாறு.

ss

வாழைச்சேனை SIM.நிப்ராஸ் கேட் ஸ்டீபன்ஸ் இந்தப்பெயர் நம்மில் எத்தனை பேருக்குத்தெரியும் என்று தெரியவில்லை. 1948 இல் லண்­டனில் பிறந்தவர். 1970 ஆம் ஆண்டு கால கட்டத்தில் புகழ் பெற்ற பொப் இசைப்பாடகராக விளங்கியவர். இவர் வெளியிட்ட பல பாடல்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மில்லியன் கணக்கில் விற்பனையாகி சாதனை படைத்தது. மேலும், அந்தக் கால கட்டத்தில் பல புகழ் பெற்ற விருதுகளையும் பெற்றார். அவரின் வாழ்க்கை தொகுப்பு. சிறு பிராயம்: தொழில் நுட்பத்துறையில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் பகுதியில் நான் பிறந்து வளர்ந்தேன். எனது குடும்பம் ... Read More »

ஸகாத் ஒரு சமூகக்கடமை-எம்.ஐ அன்வர் (ஸலபி)

dscdssvdsvds

நோன்பும் ஸகாத்தும் தனித்தனியாக பிரிந்தமைந்த இரு பெரும் கடமைகள். எனினும், நம் சமூகத்தில் ரமழான் மாதத்திலேயே ஸகாத் கடமையையும் நிறைவேற்றுகின்ற பாரம்பரியம் இருந்து வருகின்றது. இந்நடைமுறை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டுமென்றில்லாவிடின், இத்தகைய ஒருங்கிணைப்பு மூலம் செல்வந்தர்கள் தமது சொத்துக்களை வருடாந்தம் கணக்கிட்டு அதன் கடமையை நிறைவேற்றவும் ஸகாத் சேகரிப்பை இலகுபடுத்தவும் முடியாமல் போய் விடுவது நோக்கத்தக்கதாகும். நோக்கமும் பயன்பாடும் “நபியே அவர்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தை எடுத்து, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மைப்படுத்துவீராக” (09:103) மேற்குறிப்பிடப்பட்ட அல்-குர்ஆன் வசனம் ஸகாத் கடமையாக்கப்பட்டதன் நோக்கத்தை தெளிவுபடுத்துகின்றது. ... Read More »

வாழ்ந்து காட்டி வாழக்கற்றுக்கொள்வோம்

unnamed (2)

இஸ்லாம் மிகவும் கண்ணியமான மார்க்கம். ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை சகலவற்றுக்கும் சரியான ஒழுங்குபடுத்தலை நெறிப்படுத்தியுள்ளது. இதனை எமது கண்மணி நாயகம் வாழ்ந்து காட்டிச் சென்றுள்ளார்கள். மற்றைய சமூகம், அயலவர், மற்றைய மதத்தாருடன் ஒரு முஃமீன் எவ்வாறு நடக்க வேண்டுமென்பதை அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகிறது. குறிப்பாக, மாற்று மதத்தவர்கள் விடயத்தில் நாம் நடந்து கொள்கின்ற விடயங்கள் மிகவும் வேதனைக்குரியதாகவுள்ளது. நாம் ஒன்றில் 1} மாற்று மதத்தவரை தூரமாக்கி வாழ்கிறோம். இதன் மூலம் நமது கடினமான கொள்கைகளால் தூரமாகிறோம். 2} மாற்று ... Read More »

பசியுடன் பக்குவப்படுத்தும் றமழான்-சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்

Untitled-1

றமழான் மாதம் ஒவ்வொரு மனிதப்பிறவிக்கும் அடுத்த மரணத்திற்கு முன் கிடைக்குமா? என்ற கேள்விக்குறியுடன் கிடைக்கின்ற அரிய சந்தர்ப்பமாகும். ஆகவே, இந்த மாதத்தைச் சந்திக்கும் ஒவ்வொரு ஜீவனும் அதிஷ்டசாலிகளே. தான் ஒரு இறையடிமை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் இன்னும் ஆழமாக இறைவனிடமும், உலகப்பார்வையாளர்கள் முன்பும் பதித்துக் கொள்ளும் மாதம். அனுமதிக்கப்பட்ட உணவுகளைக்கூட ஒதுக்கி வைத்து விட்டு, பட்டினிக்கிடப்பதில் ஆனந்தம் கொள்ளும் அற்புதம் நிகழும் மாதம். மனிதன் தன் உள்ளத்தையும் உடலையும் பக்குவப்படுத்துவதற்கு எவ்வளவோ முயற்சி செய்கிறான். அவன் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளை உள்ளடக்கியதாக நோன்பு அமைந்துள்ளது. ... Read More »

புனித ரமழான் மாதம்: சில அவதானங்கள்- சாய்ந்தமருது எம்.எம்.எம்.நூறுல்ஹக்

noo

இஸ்லாத்தின் கட்டாயக்கடமைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கோணங்களில் முக்கியத்துவமும் ஈருலகப் பாக்கியங்களும் நிறைந்ததாக அமைந்திருப்பது அவற்றின் சிறப்புக்களில் ஒரு பகுதியாகும். அத்தகைய கடமைகளுள் ஒன்றான புண்ணியங்கள் நிறைந்த கண்ணிய ரமழானில் இருக்கின்றோம். ஆயினும், அது வழங்குகின்ற வளமான வாழ்வில் எம்மை உட்படுத்திக்கொள்வதன் மூலம் எம்மை நாம் வளப்படுத்திக்கொள்ளலாம். ”விசுவாசம் கொண்டவர்களே உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல், உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. (அதனை நோற்பதன் மூலம்) நீங்கள் பயபக்தியுடையவர்களாக ஆகலாம்.” (குர்ஆன் 02:183) இவ்வசனத்தின் மூலம் உபவாசம் புரிகின்ற வழக்கம் நபி ஆதம் (அலை) ... Read More »