சமூக சேவை

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் வருடாந்த இரத்த தான முகாம்

14826249_1271666906208359_36928484_n

அலுவலக செய்தியாளர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து கல்குடா  ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா வருடா வருடம் நடாத்தி வரும் இரத்த தான முகாம் இம்முறையும் இடம்பெறவுள்ளது. வருடாந்தம் முஹர்ரம் புத்தாண்டில் நடைபெறும் இம்முகாம் எதிர்வரும் 29.10.2015ம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை மீராவோடை, எம்.பி.சி.எஸ் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் பள்ளிவாயல் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கலந்து கொண்டு  ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். Read More »

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவினால் மீராவோடையில் மீனவர்களுக்கு உலருணவு வழங்கல்

12511816_1094631973889058_1803794607_n-min

பர்ஷான் ஹயாத்து முஹம்மது கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் சமூக சேவைப்பணித்தொடரில் கடந்த சில தினங்களாக பெய்த அடைமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் நன்மைகருதி உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று 09.01.2016ம் திகதி சனிக்கிழமை மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மெளலவி அஷ்ஷெய்க் எச்.எல்.முஹைதீன் பலாஹி தலைமையில் இடம்பெற்ற மேற்படி உலருணவு வழங்கும் நிகழ்வில், மீராவோடை கிழக்கு மேற்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள மீனவர்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில், கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் பொதுத்தலைவர் மெளலவி அஷ்ஷெய்க் ... Read More »

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் வாழ்வாதார உதவி

2-min

அபு அம்றா கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் நிதி அனுசரணையின் கீழ் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களுக்கான சுயதொழில் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. சமூகத்தில் இனங்காணப்படாத சுய தொழில் ஆர்வமுள்ளவர்களை இனங்கண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் இவ்வுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. குடிசைகைத்தொழில் மற்றும் தையல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான உதவிகள்  ஜம்இய்யாவின் தலைமையகத்தில் நடைபெற்றன. மேற்படி நிகழ்வில், ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷெய்க்.ஏ.எல்.பீர்முஹம்மது காசிமி, செயலாளர் அஷ்ஷெய்க்.எஸ்.எச்.எம்.அறபாத் ஸஹ்வி, நிருவாக உத்தியோகத்தர். அஷ்ஷெய்க். ஏ.அப்துர்ரஹ்மான் அஸ்ஹரி ஆகியோர் கலந்து கொண்டு உதவிகளை வழங்கி வைத்ததும் குறிப்பிடத்தக்கது. Read More »

தொகுதிவாரித்தேர்தல் முறையின் கீழ் அடுத்த தேர்தல் நடைபெறும்-தெளஹீத் ஜமாஅத்துடனான சந்திப்பில் பிரதியமைச்சர் அமீர் அலி

download-min-min

அபூ அம்றா கல்குடா தவ்ஹீத் ஜமாஅத் நிருவாகிகளுடனான சந்திப்பில்  ஐ.தே.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சருமான சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தொகுதிவாரித்தேர்தல் முறையின் கீழ் அடுத்த தேர்தல் நடைபெறுமெனத் தெரிவித்தார். மேற்படி சந்திப்பு எம்.பி.சி.எஸ் வீதி, மீராவோடையில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஜமாஅத்தின் நிருவாகத்தின் கீழுள்ள அனைத்துப்பள்ளிவாயல்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். ஜமாஅத்தின் பொதுத்தலைவர் மௌலவி ஏ.எல்.பீர் முஹம்மது காசிமி அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, வேட்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ... Read More »

மட்டு.மாவட்ட வேட்பாளர்கள் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவைச் சந்திப்பு

download-min (1)

அபூ அம்றா மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசியில் போட்டியிடும் வேட்பாளர்களான கணக்கறிஞர் எச்.எம்.எம்.ரியாழ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் பொறியியலாளர் எம்.எம். அப்துர்ரஹ்மான் மற்றும் அதன் மற்றுமொரு வேட்பாளரான கவிஞர் எஸ்.நழீம் ஆகியோர் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா நிறுவனத்தின் பிரதிநிதிகளை அதன் தலைமையகமான தாருஸ்ஸலாமில் கடந்த சனிக்கிழமை (1.8.2015) சந்தித்துப்பேசினர். ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா நிறுவனத்தின் கீழ் செயற்படும் சுமார் 10 பள்ளிவாயல்களின் நிருவாகிகள் உட்பட ஜம்இய்யா நிருவாகிகளும் மேற்படி சந்திப்பில் கலந்து கொண்டனர். இரு வேட்பாளர்களும் தங்களது தேர்தல் ... Read More »

காவத்தமுனை-காகித நகர் அப்துல் அஸீஸில் இடம்பெற்ற இப்தார்

1-min-min

அபூ அம்றா காவத்தமுனை அப்துல் அசீஸ் பள்ளிவாயலின்  ஏற்பாட்டில் ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் அனுசரணையில் இப்தார் நிகழ்வொன்று கடந்த வாரம் இடம்பெற்றது. இப்தார் நிகழ்வில் பிரதேசத்தின் பிரமுகர்கள், பொது மக்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். Read More »

கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் புத்தாடை வழங்கும் நிகழ்வு

2-min-min

அபூ அம்றா கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் (ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா) ஏற்பாட்டில் தந்தையை இழந்த 74 மாணவர்களுக்கான பெருநாள் புத்தாடை வழங்கும் நிகழ்வுகள் கடந்த வாரம் ஜமாஅத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றன. ஏழாயிரம் ரூபா பெறுமதியான ஆடைகள் கல்குடா தொகுதியெங்கும் பரந்து வாழும் வறிய தந்தையை இழந்த மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான ஆடைகள் வழங்கி வைக்கப்பட்டன. மேற்படி நிகழ்வில் ஜமாஅத்தின் பொதுத்தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்;.பீர்முஹம்மது காசிமி செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.அறபாத் ஸஹ்வி, நிருவாக உத்தியோகத்தர் ஏ.அப்துர்ரஹ்மான் அஸ்ஹரி, சமூக சேவை இணைப்பாளர் எம். சாஜஹான் ... Read More »

ஜம்இய்யதுஷ்ஷபாப் நிறுவனத்தின் அனுசரணையில் ஓட்டமாவடியில் இப்தார்

6-min-min

அபூ அம்றா தந்தையை இழந்த மாணவர்கள் அவர்களின் குடும்பங்களுடன் இப்தார் நிகழ்வை கழிக்கும் நிகழ்வொன்று ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடியில் இடம்பெற்றது. கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் வழிகாட்டலில் மாவடிச்சேனை இஸ்லாமிய நிலையத்தில் இடம் பெற்ற மேற்படி இப்தார் நிகழ்வில், தந்தையை இழந்த பல மாணவர்கள் தமது பாதுகாவலர்களுடன் இப்தாருடன் இராப்போசன விருந்திலும் கலந்து கொண்டனர். மேற்படி இப்தார் நிகழ்வுக்கு கொழும்பு ஜம்இய்யதுஷ்ஷபாப் நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. Read More »

குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில், கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவினால் தண்ணீர் டாங்கிகள், நீர்ப்பம்பிககள் வழங்கல்

DIGITAL CAMERA

கல்குடா செய்தியாளர் கல்குடாத் தொகுதியில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளைச் செய்து வரும் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா குடிநீர்ப் பிரச்சினையால் கஷ்டப்படுபவர்களை இனங்கண்டு அவர்களுக்கான குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில், தண்ணீர் டாங்கிகளையும், நீர் பம்பிகளையும் வழங்கி வருகின்றது. இந்த வகையில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் குடிநீர்ப் பிரச்சினையால் சிரமப்பட்டவர்களை இணங்கண்டு அவர்களுக்கான தண்ணீர் டாங்கி மற்றும் நீர் பம்பிகள் கையளிக்கும் நிகழ்வு வாழைச்சேனை தபாலதிபர் வீதியில் அமைந்துள்ள அல் ஹிக்மா குர்ஆன் கலாசாலையில் இடம் பெற்றது. தாருல் பிர் நிறுவனத்தின் ... Read More »

கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் மனிதாபிமான உதவிகள்

4

அபூ ஹம்தான் கல்குடா தவ்ஹீத் ஜமாஅத் அண்மையில் வறிய குடும்பங்களைத்தெரிவு செய்து பயனாளிகளுக்கு சுயதொழில் முயற்சிகளுக்கான உதவிகளை வழங்கி வைத்தது. பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் சுயதொழிலை விருத்தி செய்யும் நோக்குடன், வழங்கப்பட்ட இவ்வுதவிகள் உள்ளூர் தனவந்தர்களின் நிதியுதவியுடன் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேற்படி நிகழ்வில் ஜமாஅத்தின் பொதுச்செயலாளர்  எஸ்.எச்.எம்.அறபாத் ஸஹ்வி, பொருளாளர் ஈ.எல்.எம்.சுபைர் ஆகியோர் கலந்து கொண்டு உதவியினை வழங்கி வைத்தனர். Read More »