தஃவா

ஓட்டமாவடி – நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கலாபீடத்யில் ஹிப்ழ் பிரிவு ஆரம்பம்.

23231397_1695618963813426_4588630640773316920_n

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) ஓட்டமாவடி – நாவலடியில் மிகவும் சிறப்பாக இயங்கிவரும் மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரியின் முன்னேற்றப்பாதையின் அடுத்த நகர்வாக கல்லூரியில் அல்குர்ஆன் மனனப்பிரிவு இன்று (8) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது அல்குர்ஆனை தங்களது உள்ளத்தில் சுமந்து அதனூடாக பல நன்மைகளை தங்களின் வாழ்வில் எடுத்து நடக்கக்கூடிய ஹாபீழ்களை உருவாக்கும் நோக்கில் ஹிப்ழ் பிரிவு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது (அல்ஹம்துலில்லாஹ்) என கலாபீடத்தின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ.ஹபீப் காஸிமி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்… இனிவரும் காலங்களில் கல்லூரியில் இணையும் அனைத்து மாணவர்களும் ஹாபீழ்களாக உருவாகிய பின் தொடராக ... Read More »

JDIK யின் நிர்வாகத் தலைவர் ஹபீப் காஸிமியின் தாய் வபாத்.

janaza

ஓட்டமாவடி – மாஞ்சோலையைச் சேர்ந்த இப்ரா லெவ்வை கதீஜா உம்மா கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் நிர்வாகத் தலைவரும் நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கலாபீடத்தின் அதிபருமாகிய அஷ்ஷெய்க் ஏ.ஹபீப் காஸிமி அவர்களின் தாயார் வபாத் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹீ ராஜிவூன் ஜனாசா நல்லடக்கம் இன்று (4) ம் திகதி அஷர் தொழுகையின் பின்னர் மாஞ்சோலை ஹிளுரியா ஜும்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். -ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான் Read More »

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்.

_DSC0586

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் இஸ்லாமிய அறிவையும் ஒழுக்க விழுமியங்களையும் விருத்தி செய்வதற்காக பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் கலாசாரக் குழுவின் ஏற்பாட்டில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் அனுசரணையில் ஏற்பாடு செய்த ஒரு நாள் இஸ்லாமிய வழிகாட்டல் நிகழ்வு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இதில் பாடசாலைக் கல்வியை முடித்துவிட்டு பட்டப் படிப்பினை கற்பதற்காக வருகை தந்த மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் நாம் எதற்காக இங்கு வந்திருக்கின்றோம் நம் பெற்றோர்கள் ... Read More »

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் உயர்தர மாணவர்களுக்கான இஸ்லாமிய செயலமர்வு

DSC_0560

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் முஹம்மதியாவின் அனுசரணையில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான இரண்டு நாள் இஸ்லாமிய செயலமர்வு கடந்த 23, 24 ம் திகதிகளில் மருதமுனை அக்பர் ஜும்ஆப்பள்ளிவாயலில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. மாணவர்கள் மத்தியில் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய உணர்வையும் ஏற்படுத்துவதற்காக இடம்பெற்ற இந்நிகழ்வில், வளவாளர்களாக மருதமுனை தாருல் ஹுதா மகளிர் அரபுக்கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல். முபாரக் மதனி, வைத்திய கலாநிதி டொக்டர் ரைசுதீன் ஷரஈ, இஸ்லாமிய அழைப்பாளர் ஏ.சீ.கே முஹம்மத் ... Read More »

சிறப்பாக நடந்து முடிந்த ராபிதாவின் இஸ்லாமிய எழுச்சி மாநாடு.

DSC_0380

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) ராபிதது அஹ்லிஸ் ஸுன்னாவின் மட்டக்களப்பு மாவட்ட இஸ்லாமிய எழுச்சி மாநாடு இம்முறை கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி – மாஞ்சோலை ஹிழுரியா ஜும்ஆ மஸ்ஜிதில் நேற்று 22 ம் திகதி வெள்ளிக்கிழமை அஷர் தொழுகை முதல் இரவு 10 மணி வரை மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழ் பேசும் உலகில் பிரபல்யமான இஸ்லாமிய அழைப்பாளர்களான கலாநிதி எம்.எல். முபாரக் மதனி, உண்மை உதயம் இஸ்லாமிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி, Dr ரைசுதீன் ஷரஈ, ... Read More »

ராபிதாவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட இஸ்லாமிய எழுச்சி மாநாடு.

iiii

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்) ராபிதது அஹ்லிஸ் ஸுன்னாவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட இஸ்லாமிய எழுச்சி மாநாடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22 ம் திகதி வெள்ளிக்கிழமை அஸர் தொழுகை முதல் இரவு 9.30 மணிவரை ஓட்டமாவடி – மாஞ்சோலை ஹிழுரியா ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் தலைசிறந்த இஸ்லாமிய அழைப்பாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்கள். இந்நிகழ்வில் அனைத்து சகோதரர்களும் முழுமையாகக் கலந்து கொண்டு ஈமானிய உணர்வையும் இஸ்லாமிய அறிவையும் அதிகரித்துக் கொள்வதுடன் மறுமை வாழ்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள இவ்வரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வருகை தருமாறு ராபிதது ... Read More »

மதீனா பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் பெருநாள் ஒன்றுகூடலும்.

hhhhhhh

கல்குடா தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் கல்குடா பிரதேசத்திலிருந்து சவூதி மதீனா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைத் தொடர்வதற்கு செல்லவுள்ள மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும், ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்றுகூடலும் 02ம் திகதி (சனிக்கிழமை) மீராவோடை எம், பீ, சீ, எஸ் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் அஷ்ஷெய்க் ரீ.எல். அமானுல்லாஹ் ஷர்கி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டதுடன் இவ்வருடம் மதீனா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடர தெரிவு செய்யப்பட்டுள்ள அபூபக்கர் முஹம்மது இர்பான் (சலபி) மற்றும் ஈசா ... Read More »

சிறப்பாக நடைபெற்ற கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை – செம்மண்ணோடையில்.

aaaaaa

(எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ் பெருநாள் திடல் தொழுகை இன்று (2) சனிக்கிழமை செம்மண்ணோடை அல் ஹம்ரா வித்தியாலய மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றுதலில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. குறித்த ஹஜ் பெருநாள் தொழுகையினை அஷ்ஷெய்க் எம்.பீ.எம். சியாம் (ஹலீமி) அவர்களினால் தொழுகை  நிறைவேற்றியதோடு குத்பா பேருரையினை ஜம்இய்யாவின் நிர்வாகத் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.ஹபீப் (காஸிமி) அவர்கள் நிகழ்த்தினார்கள், நபி இப்ராகிம் (அலை) அவர்களின் தியாகமும் அவர் இந்த இஸ்லாமிய சமூகத்துக்கு செய்த பணிகள் ... Read More »

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் நபி வழி பெருநாள் திடல் தொழுகை.

unnamed-58

(எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா வருடா வருடம் குர்ஆன் சுன்னா அடிப்படையில் நடாத்தி வரும் பெருநாள் தொழுகையின் தொடரில் இம்முறை ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்ஷா அல்லாஹ் வழமை போன்று செம்மண்ணோடை அல்- ஹம்ரா வித்தியாலய மைதானத்தில் (சாட்டோ) வில் பெருநாள் தினமாகிய நாளை 02ம் திகதி சனிக்கிழமை சரியாக காலை 06.20 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பெருநாள் தொழுகைக்கு அனைவரும் உரிய நேரத்திற்கு வீடுகளிலிருந்து வுழூச்செய்து வருமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.(F) Read More »

மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான அல்குர்ஆன் விளக்க வகுப்பு.

download

(எச்.எம்.எம்.பர்ஸான்) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா பிரதி சனிக்கிழமைகளில் அஸர் தொழுகையின் பின்னர் நாடத்தி வந்த பெண்களுக்கான அல்குர்ஆன் விளக்க வகுப்பு இன்று (22.07.2017) சனிக்கிழமை முதல் தொடர்ந்தும் ஜம்இய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்ஹ் ஏ.எல்.பீர் முஹம்மட் (காஸிமி) அவர்களினால் மீராவோடை தாருஸ்ஸலாம் பள்ளிவாயலில் நடைபெறும் என்பதனை மகிழ்வோடு அறியத்தருகின்றோம். பெண்களுக்கு பயனுள்ளதாக நடைபெறும் இவ் வகுப்பில் அனைத்து தாய்மார்களும், சகோதரிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம். ஏற்பாடு: தஃவாப் பிரிவு JDIK Read More »