தஃவா

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா நோன்புப் பெருநாள் தொழுகை: பெருந்திரளான மக்கள் பங்கேட்பு

DSC_3109

எம்.ரீ.எம்.பாரீஸ் கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக பெருநாள் தொழுகைகளை நபி வழியில் திடலில் தொழுகை நடாத்தி வரும் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா இம்முறை நோன்புப்பெருநாள் தொழுகையையும் இன்று 26.06.2017ம் திகதி திங்கட்கிழமை காலை 06.30 மணிக்கு செம்மண்ணோடை அல் ஹம்றா விளையாட்டு மைதானத்தில் நடாத்தியது. ஆண்கள், பெண்கள், சிறியோர், முதியோர் எனப் பெருந்திரளான மக்கள் நோன்புப்பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனா். நோன்புப்பெருநாள் தொழுகையினையும் குத்பாவினையும் ஜம்இய்யாவின் பொதுத்தலைவா் அஷ்ஷெய்க் ஏ.எல். பீா்முஹம்மது காஸிமி MA அவா்கள் நிகழ்த்தினார். தொழுகையின் முக்கியத்துவமும் அதன் பின்னர் ... Read More »

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் அனுசரணையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் விஷேட இப்தார் நிகழ்வு

DSC_2975

எம்.எச்.எம்.இத்ரீஸ் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் அனுசரணையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அண்மையில் விஷேட இப்தார் நிகழ்வொன்று இடம்பெற்றது. கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் கல்விப்பிரிவு இணைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எல்.எம்.இப்றாஹீம் மதனி அவர்களின் விஷேட உரையுடன் இடம்பெற்ற இவ்விப்தார் நிகழ்வில், கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.அறபாத் ஸஹ்வி அவர்களும், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய அதிகாரிகள், விஷேட பிரிவுகளுக்குப் பொறுப்பான வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், வாழைச்சேனை சுகாதாரப்பணிமனையின் அதிகாரிகள், சுகாதாரப்பரிசோதகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... Read More »

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் நோன்புப்பெருநாள் தொழுகை செம்மண்ணோட அல் ஹம்றா மைதானத்தில்

தத்

எச்.எம்.எம்.இத்ரீஸ் & எச்.எம்.எம்.பர்ஸான் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா பல்லாண்டு காலமாக நடாத்தி வரும் பெருநாள் திடல் தொழுகையை இம்முறையும் நடாத்த தீர்மானித்துள்ளது. அந்த வகையில், இம்முறையும் நோன்புப்பெருநாள் தொழுகையை வழமை போன்று பெருநாள் தினத்தன்று காலை 6.30 மணிக்கு செம்மண்ணோடை அல் ஹம்ரா வித்தியாலய மைதானம் (சாட்டோ) வில் இடம்பெறவுள்ளது. குறித்த நேரத்தில் தொழுகை நடைபெறவுள்ளதால் உரிய நேரத்துக்குள் சகோதர, சகோதரிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். Read More »

ஜம்இய்யத்துத் தஃவதில் இஸ்லாமிய்யாவின் ரமழான் கால வினா-விடைப்போட்டி

295237_102133633223405_7188685_n

எச்.எம்.எம்.இத்ரீஸ் போட்டி நிபந்தனைகள்: இது ஒரு திறந்த போட்டியாகும். மொளலவிமார், மௌலவியாக்கள் அல்லாத 11 வயதிற்கு மேற்பட்ட அவனைவரும் கலந்து கொள்ள முடியும். ஜம்இய்யத்துத் தஃவதில் இஸ்லாமிய்யாவின் நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ள முடியாது. ஒருவர் ஒரு வினாப்பத்திரத்தை மட்டுமே சமர்ப்பிக்க முடியும். சகல வினாக்களுக்கும் விடையளிக்கப்படல் வேண்டும். பூரணமாக விடையளிக்கப்படாதவை போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது. சம புள்ளிகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பெறும் பட்சத்தில் பரிசுக்குரியவர் குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படுவர். விடைத்தாளை மீள் மதிப்பீடு செய்யக்கோர முடியாது. அல்-குர்ஆன் வசனங்களை எழுதும் போது ... Read More »