ஜம்இய்யா

உள்ளூர் நலன்விரும்பியொருவரின் அனுசரணையில் தாருஸ்ஸலாமில் இப்தார்

1 (1)-min

அபூ அம்றா கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா உள்ளூர் நலன்விரும்பி ஒருவரின் அனுசரணையில் தாருஸ்ஸலாம் பள்ளிவாயலில் இப்தார் நிகழ்வொன்றை நடாத்தியது. கடந்த 3ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.வெளிநாட்டு நலன்விரும்பிகளின் அனுசரணையில் இதுவரை இடம்பெற்று வந்த இப்தார் நிகழ்வுகளைப்போல் உள்ளுரிலும் நன்மைகளைப்பெற தனவந்தர்கள் முன் வந்திருப்பது பாராட்டப்படவேண்டிய அம்சமாகும். மேற்படி இப்தார் நிகழ்வில் ஜம்இய்யாவின் பொதுத்தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முஹம்மது காசிமி அவர்கள் சிறப்புரையாற்றியதும் குறிப்பிடத்தக்கது. Read More »

கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் நிருவாகிகளுக்கான விஷேட இப்தார்

1-min-min

அபூ அம்றா கல்குடா தவ்ஹீத் ஜமாஅத் கடந்த வாரம் விசேட இப்தார் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. ஜமாஅத்தின் நிருவாகத்தின் கீழுள்ள பள்ளிவாயல்களின் உறுப்பினர்கள், இஸ்லாமிய தஃவா நிலையங்களின் உறுப்பினர்கள், இளைஞர் அமைப்புக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மருதமுனை தாருல் ஹுதா மகளிர் கல்லூரின் முதல்வர் அஷ்ஷெய்க் எம்.எம்.முபாரக் மதனி அவர்கள் சிறப்புச் சொற்பொழிவாளராகக் கலந்து கொண்ட மேற்படி இப்தார் நிகழ்வில், கல்குடா தொகுதியில் வாழும் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. Read More »

கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் புத்தாடை வழங்கும் நிகழ்வு

2-min-min

அபூ அம்றா கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் (ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா) ஏற்பாட்டில் தந்தையை இழந்த 74 மாணவர்களுக்கான பெருநாள் புத்தாடை வழங்கும் நிகழ்வுகள் கடந்த வாரம் ஜமாஅத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றன. ஏழாயிரம் ரூபா பெறுமதியான ஆடைகள் கல்குடா தொகுதியெங்கும் பரந்து வாழும் வறிய தந்தையை இழந்த மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான ஆடைகள் வழங்கி வைக்கப்பட்டன. மேற்படி நிகழ்வில் ஜமாஅத்தின் பொதுத்தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்;.பீர்முஹம்மது காசிமி செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.அறபாத் ஸஹ்வி, நிருவாக உத்தியோகத்தர் ஏ.அப்துர்ரஹ்மான் அஸ்ஹரி, சமூக சேவை இணைப்பாளர் எம். சாஜஹான் ... Read More »

ஜம்இய்யதுஷ்ஷபாப் நிறுவனத்தின் அனுசரணையில் ஓட்டமாவடியில் இப்தார்

6-min-min

அபூ அம்றா தந்தையை இழந்த மாணவர்கள் அவர்களின் குடும்பங்களுடன் இப்தார் நிகழ்வை கழிக்கும் நிகழ்வொன்று ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடியில் இடம்பெற்றது. கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் வழிகாட்டலில் மாவடிச்சேனை இஸ்லாமிய நிலையத்தில் இடம் பெற்ற மேற்படி இப்தார் நிகழ்வில், தந்தையை இழந்த பல மாணவர்கள் தமது பாதுகாவலர்களுடன் இப்தாருடன் இராப்போசன விருந்திலும் கலந்து கொண்டனர். மேற்படி இப்தார் நிகழ்வுக்கு கொழும்பு ஜம்இய்யதுஷ்ஷபாப் நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. Read More »

கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் ரமழான் கால பயிற்சிகள்.

295237_102133633223405_7188685_n-min

அபூ அம்றா கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் ரமழான் கால வழிகாட்டல் கருத்தரங்குகள் சென்ற வாரம் ஆரம்பாகியுள்ளன. க.பொ.த சாத மாணவிகளுக்கான பயிற்சி நெறிகள் மீராவோடை அல்-ஹிதாயா வித்தியாலயத்திலும் 10ம்ஆண்டு மற்றும் அறபுக்கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி நெறிகள் தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்திலும் நடைபெறுகின்றன. மேற்படி பயிற்சி நெறியில் இஸ்லாமிய அடிப்படை அம்சங்கள் உள்ளிட்ட வழிகெட்ட பிரிவுகள் தொடர்பாக விழிப்புனர்வும் வழங்கப்படுவதுடன், பயிற்சி நெறியின் முடிவில் எழுத்து மூலப்பரீட்சைகளும் நடைபெறவுள்ளன. பரீட்சைகளில் சித்தியடைபவர்களுக்கு பணப்பரிசில்களும் ,பங்குபற்றியோருக்கு சான்றிழ்களும் வழங்கி வைக்கப்படும். மேற்படி பயிற்சி நெறிகளுக்கு ஜமாஅத் அன்சாரிஸ்சுன்னதில் ... Read More »

கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில்  ‘உஸ்ரதுன் ஸயீதா’ பயிற்சி நெறி ஆரம்பம்.

saac

அபூ அம்றா மகிழ்ச்சியான குடும்பம் என்ற தொணிப்பொருளில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் பயிற்சி நெறியொன்று ஆரமபிக்கப்படடுள்ளது. இப்பயிற்சி நெறி 55 மணித்தியாலங்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்டு துறைசார் வளவாளர்கள் மூலம் வழங்கப்படவுள்ளதுடன், பயிற்சி நெறியின் முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும்  வழங்கி வைக்கப்படும். மேலும் பயிற்சி நெறியில் கலந்து கொள்ளும் பெண்களின் அறிவு மட்டத்தினையும் கிரகித்தல் தன்மையினையும் பரீட்சிக்கும் நோக்கில் பயிற்சி வகுப்பின் இறுதி நாளில் எழுத்துப்பரீட்சையும் நடைபெற்று திறமையின் அடிப்படையில் பணப்பரில்களும் வழங்கப்படும். மேற்படி பயிற்சி நெறியில் ஆன்மீகம், சட்டம், சுகாதாரம் ... Read More »

குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில், கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவினால் தண்ணீர் டாங்கிகள், நீர்ப்பம்பிககள் வழங்கல்

DIGITAL CAMERA

கல்குடா செய்தியாளர் கல்குடாத் தொகுதியில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளைச் செய்து வரும் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா குடிநீர்ப் பிரச்சினையால் கஷ்டப்படுபவர்களை இனங்கண்டு அவர்களுக்கான குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில், தண்ணீர் டாங்கிகளையும், நீர் பம்பிகளையும் வழங்கி வருகின்றது. இந்த வகையில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் குடிநீர்ப் பிரச்சினையால் சிரமப்பட்டவர்களை இணங்கண்டு அவர்களுக்கான தண்ணீர் டாங்கி மற்றும் நீர் பம்பிகள் கையளிக்கும் நிகழ்வு வாழைச்சேனை தபாலதிபர் வீதியில் அமைந்துள்ள அல் ஹிக்மா குர்ஆன் கலாசாலையில் இடம் பெற்றது. தாருல் பிர் நிறுவனத்தின் ... Read More »

கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் மனிதாபிமான உதவிகள்

4

அபூ ஹம்தான் கல்குடா தவ்ஹீத் ஜமாஅத் அண்மையில் வறிய குடும்பங்களைத்தெரிவு செய்து பயனாளிகளுக்கு சுயதொழில் முயற்சிகளுக்கான உதவிகளை வழங்கி வைத்தது. பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் சுயதொழிலை விருத்தி செய்யும் நோக்குடன், வழங்கப்பட்ட இவ்வுதவிகள் உள்ளூர் தனவந்தர்களின் நிதியுதவியுடன் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேற்படி நிகழ்வில் ஜமாஅத்தின் பொதுச்செயலாளர்  எஸ்.எச்.எம்.அறபாத் ஸஹ்வி, பொருளாளர் ஈ.எல்.எம்.சுபைர் ஆகியோர் கலந்து கொண்டு உதவியினை வழங்கி வைத்தனர். Read More »