ஜம்இய்யா

மனிதாபிமானப்பணிகளில் கல்குடா தெளஹீத் ஜமாஅத்

2

மாவடிச்சேனை செய்தியாளர். கல்குடா  தெளஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் கட்டாரில் வசிக்கும் எமது பிரதேசத்தைச்சேர்ந்த நலன் விரும்பி ஒருவரால் வழங்கப்பட்ட உலருணவுப்பொதிகள் வறிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. செம்மண்னோடை மீள்குடியேற்றப்பகுதியில் நிரந்தரமாக வசிக்கும் 62 குடும்பங்கள் உள்ளிட்ட இஸ்லாத்தை தழுவி செம்மண்னோடை மற்றும் மாஞ்சோலை, மீராவோடைப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் இவ்வுதவியினால் பெரிதும் நன்மையடைந்தனர். மேற்படி நிகழ்வு 1.1.2015ம்திகதி  செம்மண்னோடை மீள் குடியேற்றக்கிராமத்தில் மர்கஸ் அஸ்சைப்பள்ளிவாயலில் நடைபெற்றது. கல்குடா தெளஹீத் ஜமாஅத்தின் தலைவர் மௌலவி ஏ.எல்.பீர் முஹம்மது (காசிமி), செயலாளர்  மௌலவி எஸ்.எச்.எம்.அறபாத் (ஸஹ்வி), பொருளாளர் ஈ.எல்.சுபைர், ... Read More »

நாவலடி மர்கஸ் அந்நூரில் இரண்டாம் கட்ட நேர்முகத்தேர்வு

001

மாவடிச்சேனை செய்தியாளர் கொழும்பு வீதி-நாவலடியில் அமைந்துள்ள மர்கஸ் அந்நூர் கல்வி நிறுவனத்திற்கு புதிய மாணவர்களை (2015 ம்ஆண்டு ) இணைத்துக்கொள்வதற்கான  இரண்டாம் கட்ட நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் 21.12.2104ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற நேர்முகத்தேர்வில் சீரற்ற காலநிலையால் கலந்து கொள்ள முடியாமல் போனவர்களும், விண்ணப்பங்கள் கிடைக்காமல் தவற விட்டவர்களும் குறித்த திகதியில் பரீட்சைக்குத் தோற்ற முடியுமென கல்லூரியின் அதிபர் ஏ.ஹபீப் அவர்கள் கல்குடா நேசனுக்கு தெரிவித்தார். 2015ல் 6 ம் ஆண்டில் கல்வி கற்கத் ... Read More »

கல்குடா தெளஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற உம்ரா விஷேட செயலமர்வு

10752832_889225171096407_143956181_o-1024x576

அலுவலக செய்தியாளர் இவ்வருடம் புனித உம்றா யாத்திரையை மேற்கொள்ளவுள்ளவர்களுக்கான உம்றா கிரியை தொடர்பிலான அமல்களைப் போதிக்கும் விஷேட செயலமர்வு சனிக்கிழமை 13.12.2014 ம் திகதி அஸர்த்தொழுகை முதல் மஃரிபு தொழுகை வரை மீராவோடை எம். பி. சி. எஸ். வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் பள்ளிவாயலில் இடம்பெற்றது. ஆண்-பெண் இரு பாலாருக்கும் நடைபெற்ற இவ்வமர்வில், கல்குடா தெளஹீத் ஜமாஅத்தின் பொதுத்தலைவர், ஏறாவூர் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது காஸிமி  அவர்களும், நாவலடி மார்கஸ் அந்நூர் கலாபீட அதிபர் ஏ,ஹபீப் காஸிமி அவர்களும் கலந்து ... Read More »

தாருஸ்ஸலாம் புதிய மாணவர் நேர்முகத்தேர்வு

Dharussaalamghghg

மாவடிச்சேனை செய்தியாளர் கொழும்பு வீதி, தியாவட்டவானில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம்  அறபுக்கலாபீடத்திற்கு  2015 கல்வி ஆண்டிற்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் 14.12.2014 ம்திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு  கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே கலாபீடத்தில் சேர்ந்து கொள்வதற்காக விண்ணப்பித்தவர்களும், விண்ணப்பிக்கத்தவறியவர்களும் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், கடைசியாகப் பெற்றுக்கொண்ட மாணவர் தேர்ச்சி அறிக்கை, வேறு தகைமைகளை உறுதிப்படுத்தும் சான்றிதழ் சகிதம் குறித்த திகதியில் நேர்முகப்பரீட்சைக்குத் தோற்ற முடியுமென கல்லூரியின் அதிபர் எம். இஸ்மாயில் மதனி கேட்டுக்கொண்டுள்ளார். ஹிப்ளு மற்றும் கிதாபு மாணவர்களுக்கு மேற்படி நேர்முகப்பரீட்சைகள் ... Read More »

புதிய மாணவா் நோ்முகத்தேர்வில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவா்கள்

002

மாவடிச்சேனை செய்தியாளா் 2015 கல்வி ஆண்டிற்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வு இன்று நாவலடியில் அமைந்துள்ள மர்கஸ் அந்நூர் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. தந்தையை இழந்த 6ம் ஆண்டிற்கு சித்தியடைந்த மாணவர்கள் உள்ளிட்ட, தந்தையுள்ள குறித்த ஆண்டிற்கு சித்தியடைந்த மாணவர்களும் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பரீட்சைக்குழுவின் மூலம் மாணவர்களின் வாசிப்பு, கிரகித்தல், குர்ஆன் திவாலத் மற்றும் பொது உளச்சார்பு தொடர்பான வினாக்கள் நேர்முகப்பரீட்சையில் வினவப்பட்டதுடன், ஒரு மணி நேர பொதுக்கேள்விகளை உள்ளடக்கிய எழுத்துப்பரீட்சையும் நடைபெற்றது. இன்றைய தினம் சீரற்ற கால நிலையால் பரீட்சைக்கு ... Read More »

மஞ்சந்தொடுவாய் மண்ணுக்கு பெருமை சோ்த்த மாணவா்களை கௌரவிக்கும் நிகழ்வு

SAM_0080

-டீன் பைரூஸ்- மட்டக்களப்பு  மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்தல், தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு (06.12.2014 வெள்ளிக்கிழமை) பாடசாலை அதிபர் ஜனாப் MLM. கான் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது. நிகழ்விக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  கௌரவ அல்ஹாஜ் MK. முகம்மது சிப்லி  கலந்து கொண்டார். மஞ்சந்தொடுவாய் அமீர் அலி வித்தியாலயத்தின் வரலாற்றில் முதல் முறையாக புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை தேடித் கொடுத்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வில் பிரதேச கல்விப் பணிப்பாளர் ... Read More »

உலமாக்களுக்கான இஸ்லாமியக் கருத்தரங்கு

DSC05633

அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) கல்குடா ஜம்இய்யதுல் தஃவதில் இஸ்லாமியாவின் கீழியங்கும் உலமாக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், கல்குடா பிராந்திய உலமாக்களுக்கான இஸ்லாமியக் கருத்தரங்கு நேற்று 30.11.2014 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி உமர் அப்துல்லாஹ் மஸ்ஜித் மண்டபத்தில் மாலை 4.30 முதல் இரவு 10.30 மணி வரை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மேற்படி கருத்தரங்கில், பிரதேசத்திலுள்ள உலமாக்கள் பலர் கலந்து கொண்டதுடன், உலமாக்களுக்கான சில முக்கிய மார்க்க விடயங்கள் தொடர்பில் கருத்துரைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், அஷ்ஷெய்க் ஏ.எல் பீர்முஹம்மது (காஸிமி), அஷ்ஷெய்க் எம்.ரீ.அப்துர்ரஹ்மான் (அஸ்ஹரி), அஷ்ஷெய்க் ... Read More »

கல்குடா ஜம்இய்யது தஃவாதில் இஸ்லாமியாவின் “வாசிப்போம்,வளம் பெறுவோம்” சஞ்சிகை,நூற்கள் காட்சிப்படுத்தும் திட்டம்

ஊடகப்பிரிவு-கல்குடா ஜம்இய்யது தஃவாதில் இஸ்லாமியா கல்குடா ஜம்இய்யது தஃவாதில் இஸ்லாமியாவின் தஃவாப்பணியின் தொடர்ச்சியாக மக்கள் செறிந்து காணப்படும் இடங்களை அடையாளப்படுத்தி, மக்களின் வாசிப்பார்வத்தை மேம்படுத்தும் நோக்கில், சஞ்சிகை மற்றும் இஸ்லாமிய நூற்களை காட்சிப்படுத்தும் திட்டம் இன்று 17.11.2014ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், ஜம்இய்யாவின் செயலாளர் மௌலவி எஸ்.எச்.எம். அறபாத் ஸஹ்வி, தாருஸ்ஸலாம் அரபுக்கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் மெளலவி எம். இஸ்மாயீல் மதனி, தஃவாப்பிரிவு இணைப்பாளர் பீ,எம் பசால் ஆசிரியர், ஊடகப்பிரிவின் உறுப்பினர் சகோதரர் எம்.எச்.எம்.பர்சான் ஆகியோர் கலந்து கொண்டு நூல்கள் இடும் ட்ரக்குகளை ... Read More »