ஜம்இய்யா

இன்று முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் கவலை தருகின்றன-மீராவோடையில் அலி சாஹிர் மௌலானா எம்.பி

15666002_685023691675580_1170247329_n

(எச்.எம்.எம்.பர்ஸான்) இன்று நம் சமூகம் தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பல சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது. இவ்வாறான விடயம் மிகவும் வேதனையையும் கவலையையும் தருகிறது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா மீராவோடையில் நடைபெற்ற கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவுக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், எமது நாட்டில் பல அமைப்புக்களும், நிறுவனங்களும் சிறு சிறு பிரச்சினைக்காக ஒற்றுமையை இழந்து பல பிரிவுகளாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்பிரிவுகளின் செயற்பாட்டால் ... Read More »

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவினால் ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கல்

15666082_685002241677725_817678782_n

(எச்.எம்.எம். பர்ஸான்) கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யத் அலி சாஹிர் மௌலானாவின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியோதுக்கீட்டிலிருந்து ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று 20.12.2016ம் திகதி திங்கட்கிழமை மீராவோடை  தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யத் அலி சாஹிர் மௌலானா அவர்கள் கலந்து கொண்டு மேற்படி ஒலிபெருக்கி சாதனங்களை கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் நிருவாகிகளிடம் வழங்கி வைத்தார். மேற்படி ... Read More »

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் தஃவா நலன்புரி ஒன்றியத்தினால் மனிதாபிமான உதவிகள்

15320518_1346322265386693_571133017_n

அபு அம்றா கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் கீழியங்கும் தஃவா நலன்புரி ஒன்றியத்தின் அனுசரணையில் விஷேட தேவையுடைய குழந்தைக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில், கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க்  எஸ்.எச்.எம்.அறபாத் ஸஹ்வி, பொருளாளர் ஈ.எல்.சுபைர் ஆகியோர் கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தனர். Read More »

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவினால் உம்றா வழிகாட்டல் கருத்தரங்கு

15218490_1334578476561072_1006708625_n

எம்.எஸ்.எம்.இப்றாஹீம் ஆசிரியர் கல்குடா உம்றா செய்வது பற்றி செயன்முறை சார்ந்த வழிகாட்டல் கருத்தரங்கு நேற்று 24.11.2016ம் வியாழக்கிழமை பி.ப 4:00 மணியளவில் ஓட்டமாவடி-மீராவோடை தாருஸ்லாம் பள்ளிவாயலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மர்கஸ் அந்நூர் கலாபீடத்தின் முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.ஹபீப் (காஸிமி)  அவர்கள் கலந்து கொண்டு உம்றா செய்வது பற்றிய செயன்முறையுடனான வழிகாட்டல்களை வழங்கினார். இதில் பிரதேசத்திலிருந்து இம்முறை உம்றாவுக்குச் செல்லவிருக்கும் சுமார் 35 பேர் கலந்து கொண்டிருந்தனர். Read More »

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவினால் கல்வி, ஜீவனோபாய உதவிகள்

15207963_1333038703381716_895845965_n

எம்.எஸ்.எம்.இப்றாஹீம் ஆசிரியர் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் தந்தையை இழந்த சிறுவர்களுக்கான கல்வி, ஜீவனோபாய உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. குருணாகல்-பறகஹதெனிய ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா நாடளாவிய ரீதியில் தந்தையை இழந்த பல்லாயிரக்கணக்கான சிறுவர்களுக்கான கல்வி மற்றும் ஜீவனோபாய நிதியுதவிகளை வழங்கி வருகின்றன. இதன் தொடரில் ஓட்டமாவடி, வாழைச்சேனை போன்ற பிரதேசங்களில் வசிக்கும் தந்தையை இழந்த சிறுவர்களுக்கான உவித்தொகை வழங்கும் நிகழ்வு நேற்று 23.11.2016ம் திகதி புதன்கிழமை மாலை 6:30 மணியளவில் தாருஸ்ஸலாம் பள்ளிவாயலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ... Read More »

மிகச்சிறப்பாக இடம்பெற்ற கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் வருடாந்த இரத்த தான முகாம்

14877074_1305483212803932_1081877783_n

செய்தி-எச்.எம்.எம்.பர்ஷான் படங்கள்-எச்.எம்.எம்.இத்ரீஸ்   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து கல்குடா  ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா வருடா வருடம் நடாத்தி வரும் இரத்த தான முகாம் இம்முறையும் சிறப்பாக இடம்பெற்றது . வருடாந்தம் முஹர்ரம் புத்தாண்டில் நடைபெறும் இம்முகாம் இன்று 29.10.2015ம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை மீராவோடை, எம்.பி.சி.எஸ் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் பள்ளிவாயல் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவுப் பொறுப்பாளர் டொக்டர் மனோ தலைமையிலான குழுவினரின் ... Read More »