சர்வதேச செய்திகள்

நெருக்கடியைச் சமாளிக்குமா கட்டார்?

15326336_1182103191876303_7216282641921751684_n

ஆரிப் எஸ்.நளீம் தனித்து விடப்பட்ட ஆட்டை வேட்டையாடுவது எளிது. நீங்கள் தனித்தனியாகி விடாதீர்கள். அல்லாஹ்வின் பாதுகாப்புமிக்க ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள். முஸ்லிமல்லாத எவரையும் உங்களின் பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்கிறது வான் மறை. புதுப்பணக்காரின் அபரிமித முன்னேற்றம் பழைய பணக்காரனுக்கு எரிச்சலையும் பொறாமையையும் ஏற்படுத்துவது இயல்பானவொன்று. கத்தார் பெரும் முயற்சிக்குப் பின் இமாயலயத்தை தொட்ட நாடு என்று சொன்னால் அது மிகையில்லை. மட்டுமல்லாது, சகோதர இஸ்லாமிய நாடுகளுடனான அதனின் அணுகுமுறை, நகர்வு காருண்யமிக்கது. பிராந்தியத்தில் பொருளாதார ரீதியில் தங்களை விட விஞ்சி விடுவார்களோ என ... Read More »

புங்குடுதீவு “தாயகம்” அமைப்பினால் பாதிக்கப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு உதவி

IMG_3015a

பாறுக் சிஹான் & சுவிஸ் ரஞ்சன் கடந்த சில நாட்களாக இலங்கையின் மலையகம், களுத்துறை, இரத்தினபுரி, காலி, அம்பாந்தோட்டை உட்பட தென்னிலங்கை எங்கும் ஏற்பட்ட மழை, வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ் உறவுகள் தந்த பொருட்களை “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பின் (சுவிஸ் பிரதிநிதிகள்) சார்பில் பொறுப்பேற்று, சுவிஸிலுள்ள பௌத்த விகாரை பீடாதிபதியின் உதவியுடன் நேற்றைதினம் இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்காக ஒப்படைக்கப்பட்டது. மேற்படி பொருட்களை சுவிஸ் பேர்ண் மாநில கும்லிங்கன் பகுதியிலுள்ள “சிலோவா” வைத்தியசாலையில் (SILOHA Spital, Gumlingen) தொழில் ... Read More »

சவூதி எல்லையை மூடியதனால் நிரம்பி வழியும் கட்டாரின் வியாபாரத்தலங்கள்

C4-2

சவூதி அரேபியா திடீரென கட்டாருடனான சகல தொடர்புகளையும் துண்டித்து தனது எல்லையை மூடியமை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கட்டாரிலுள்ளோர் உணவுப்பொருட்களை மேலதிகமாக கொள்வனவு செய்தி சேமிப்பதில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக இன்று அதிகாலை முதல் கட்டாரின் வியாபாரத்தலங்கள் வாடிக்கையாளர்களினால் நிறைந்து காணப்பட்டதுடன், உணவுப்பொருட்கள், மற்றும் குடி தண்ணீர்களை அதிகளவு கொள்வனவு செய்து வருகின்றமை அவதானிக்க கூடியதாகவுள்ளது. கொள்வனவு செய்த பொருட்களுக்கான பணச்செலுத்துகைக்கு நீண்ட வரிசையில் காத்துக்கிடைப்பதையும் காணக்கூடியதாகவுள்ளதாகவுள்ளது. அதே நேரம் சவூதி அரேபியாவின் மிகப்பெரும் ... Read More »

கட்டாருடனான சகல தொடர்புகளையும் முறித்துக்கொண்ட சவுதி அரேபியா, UAE, எகிப்து, பஹ்ரைன்

தத்

சவுதி அரேபியா தலைமையில் UAE, எகிப்து, பஹ்ரைன் போன்ற நாடுகள் கட்டார் நாட்டுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொண்டுள்ளதாக கட்டாரின் செய்தி தளமான அல் ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது. அத்தோடு, தமது தரை, கடல், ஆகாய வழிகள் எதையும் கட்டார் இனி பயன்படுத்த முடியாதென்றும் இந்நாடுகள் அறிவித்துள்ளதால், கட்டார் விமானங்கள் பயணிப்பதற்கு ஈரானின் ஆகாய வழியைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. எனினும், இதற்கு ஈரான் இன்னும் அனுமதியளிக்கவில்லை. அல்கைதா மற்றும் ஐஸ்ஐஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு கட்டார் உதவி செய்வதே இந்த தடைக்கு காரணமென்று ... Read More »

கட்டார் வாழ் ஏறாவூர் சகோதரர்களுக்கான விஷேட இப்தார் நிகழ்வு

unnamed

முஹம்மது முனாபர் புனித ரமழானில் Eravur Associations of Qatar- EAQ ஏற்பாட்டில் 2வது வெற்றி வருடமாகவும் கத்தார் வாழ் ஏறாவூர் சகோதரர்களுக்கான விஷேட இப்தார் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2017-06-09 ம் திகதி மாலை 5.30 முதல் Phoenix Private School Auditorium Salwa Road இல் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில், அஷ்ஷெய்க் ஜமாலுத்தீன் கபூரி மௌலவி அவர்களது விஷேட சிறப்புரையோடு இஸ்லாமியப்போட்டி நிகழ்ச்சிகளுடன் பரிசில்களும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கட்டார் வாழ் ஏறாவூர் சகோதரர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு ... Read More »

கவிக்கோ அப்துல் ரகுமான் இன்று அதிகாலை காலமானார்

kavikko_2596528f

உலகறிந்த இந்தியக்கவிஞர் வானியம்பாடியைச் சேர்ந்த கவிக்கோ அப்துல் ரகுமான் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன். பல்வேறு நூல்களையும் கவிதை இலக்கிய உலகிற்கு அளித்த கவிக்கோவுக்கு கவி உலகில் தனி இடமுண்டு. 1937 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் தேதி பிறந்த கவிக்கோ, வானம்பாடி’ இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலை நிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவராவார். அவர் பால்வீதி என்ற கவிதைத்தொகுதி மூலம் ... Read More »

புனித ரமழானில் கட்டார் வாழ் இலங்கையர்களிடம் உதவிகளை எதிர்பார்க்கும் ஓட்டமாவடி சிறாஜிய்யா அறபுக்கல்லூரி-வீடியோ

கவர் போட்டோ

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் கல்குடாப்பிரதேசத்தில் மிகவும் பழமை வாய்ந்த அறபுக்கல்லூரியாக இருக்கின்ற ஓட்டமாவடி சிறாஜிய்யா அறபுக்கல்லூரியானது சமூகத்தினால் போற்றப்படக்கூடைய உலமாக்களையும், ஆலிம்களையும், புத்திஜீவிகளையும், துறைசார்ந்த மனிதர்களையும் உருவாக்கியுள்ளதோடு, சமூகத்தில் தாக்கம் செலுத்தக்கூடிய அரசியல், கலாசாரம், சமயம், மார்க்கம், சரிஆ போன்றவற்றில் முக்கிய தேவையான ஆலோசனைகளை தக்க சமயத்தில் வழங்கி வருகின்றதென்பது கல்குடாவின் வரலாறுகளின் ஒன்றாகும். அந்த வகையில் பல குறைபாடுகளுடன் இயக்கிக்கொண்டிருக்கும் குறித்த சிறாஜிய்யா அறபுக்கல்லூரியின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும், புதிதாக சரீஆ கலாபீடத்திற்காக நிர்மாணிக்கப்படுகின்ற இடத்திற்கு சுற்றுமதில்களை அமைப்பதற்காகவும் கல்லூரியின் அதிபர் ... Read More »

கட்டாரில் மாவனல்லை ஸாஹிராவின் ‘த விஷன் 2020’ நிகழ்வு

IMG_6543

ஆர்.எஸ்.மஹி மாவனல்லை ஸாஹிராக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கட்டார் கிளை “த விஷன் 2020″ எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு அண்மையில் டோஹா எல் எட்டோலி ஹோட்டலில் இடம்பெற்றது. மாவனல்லை ஸாஹிராக்கல்லூரியின் கட்டார் வாழ் பழைய மாணவர்கள் அதிகளவில் கலந்து கொண்ட இக்கருத்தரங்கில், கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் சட்டத்தரணி ஜவாட் (நளீமி), பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், கட்டார் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். இதன் போது கருத்துத்தெரிவித்த கல்லூரி அதிபர், “எமது பாடசாலை அடைய வேண்டிய இலக்கு என்ன? ... Read More »

கத்தாரில் ஏறாவூர் அலிகாரின் பழைய மாணவர்களின் ஒன்றுகூடலும், டீசேட் அறிமுக நிகழ்வும்

IMG-20170514-WA0015[1]

முஹம்மது முனாபர் கத்தாரில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் 105 ஆவது ஆண்டு நிறைவையொட்டி  பழைய மாணவர்களின்  ஒன்றுகூடலும், டீசேர்ட்  அறிமுக நிகழ்வும் கட்டார் அலிகாரியன்ஸ் ஏற்பாட்டில் ERAVUR ASSOCIATION OF QATAR ன் இணை அனுசரணையுடன் கடந்த 12.05.2017 ஆம் திகதி கத்தார் பீனிக்ஸ் தனியார் பாடசாலை அரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வுகளுக்கு விசேட அதிதிகளாக ஏbறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் தௌபீக் அவர்களும், உப அதிபர் அப்துல் மஜீத் அவர்களும் ஏறாவூர் அலிகார் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் அப்துல் ... Read More »