தேசிய செய்திகள்

அரிசி ஆலைகளால் அழிந்து வரும் ஏறாவூர் மீராகேணி: பாதிக்கப்பட்டவரின் மனக்குமுறல்

IMG_20170723_171628

முஹம்மது அஸ்லம் அநீதிகள் நிலைப்பதில்லை. இற்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்னால் ஏறாவூரிலே எழில் மிகு கிராமம் அது. அன்றைய இளைஞர்களின் மாலை நேர பொழுது போக்கு இடமும் அதுவே. முந்திரித்தோட்டங்களும் வெள்ளை வெளீரென்ற மணலுடன் அத்தனை இயற்கைகளும் சாலப்பொருந்திய சோலையது. ஆம். மீராடகேணி என்றழைக்கப்பட்டதொரு சோலை இன்று சுடுகாடாய் மாற்றப்படும் அவலத்தைக் காண்பீர். அதன் சோகக்கதையை கொஞ்சம் கேளீர். இயற்கையின் அத்தனை எழில்களும் நிறைவாய்ப் பெற்றிருந்த எமது கிராமம். அன்று எப்பிரதேசத்தவருக்கும் இரண்டு மணித்தியாலங்கள் இதன் மணலிலே இருந்தாலே கவலையெல்லாம் காணாமல் போக வைத்து ... Read More »

முஸ்லிம் திணைக்களத்தின் 9ஆவது அல்- குர்ஆன் கிராஅத் மனன பரிசளிப்பு விழா

3

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சும் முஸ்லிம் கலாசார திணைக்களமும் இணைந்து கடந்த மூன்று தசாப்த காலமாக ஏற்பாடு செய்து தேசிய ரீதியாக நடத்தப்படும் அல் – குர்ஆன் கிராஅத் மனனப் போட்டி இம்முறை 9 ஆவது தடவையாகவும் நடத்தப்பட்டு, அதற்கான பரிசளிப்பு விழா (20) வியாழக்கிழமை தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தபால், தபால் சேவைகள் முஸ்லிம் கலாசார அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தலைமையிலும் முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் எம். ஆர். எம். மலிக் (நளீமி) ... Read More »

மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவின் புணரமைப்பு ஏற்பாட்டாளராக முபீன் நியமனம்.

14479760_1064553166994017_7847699348838125658_n

(ஆதிப் அஹமட்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவட்ட மத்திய குழுக்கள் புணரமைப்பு செய்வதற்கான தீர்மானம் கடந்த 19.07.2017 அன்று கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்ச பீடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் கட்சியின் தேசியத் தலைவர் அமைச்சர் றவூப் ஹகீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாடு தோறும் கிராம மட்டத்திலிருந்தே கட்சியை மீள் புணரமைப்பு செய்வது தொடர்பில் விஷேடமாக ஆராயப்பட்டது.முதல் கட்டமாக மாவட்ட மத்திய குழுக்களை புணரமைத்து தொடர்ந்து கிராம மட்டத்தில் கட்சியை புணரமைத்தல் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ... Read More »

தலைமைத்துவப்போட்டியை மறந்து முஸ்லிம் கட்சித்தலைவர்கள் ஒன்றுபட வேண்டும் – அமைச்சா் பைசா் முஸ்தபா

ymma14

(அஷ்ரப் ஏ சமத்) அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் 67வது வருடாந்த மாநாடு இன்று(23) கொழும்பு -07 ல் உள்ள இலங்கை மன்றக் கல்லுாாியில் அதன் தலைவா் தௌபீக் சுபைர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாகாணசபைகள் உள்ளுராட்சி அமைச்சா் பைசா் முஸ்தபா, கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சா் பொறியியலாளா் ஹாபீஸ் நசீர் அஹமட் கலந்து கொண்டனா். இந் நிகழ்வின்போது சிறந்த வை” விருது தோ்தல் ஆணையாளா் சுகந்த தேசப்பிரியவிற்கு வழங்கப்பட்டது. அத்துடன் சிறந்த கிளைகளுக்கும் அதிதிகளினால் விருதுகள் வழங்கி ... Read More »

மங்களகம பகுதிக்கு பிரதியமைச்சர் அமீர் அலி விஜயம்

05

எஸ்.எம்.எம்.முர்ஷித் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான கெவிளியாமடு மற்றும் மங்களகம பகுதிக்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் மூலம் குழாய்க்கிணறு மற்றும் பாடசாலை சுற்றுமதில் அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெவிளியாமடு பகுதியில் அமைக்கப்பட்ட குழாய்க்கிணற்றை மக்கள் பாவனைக்கு கையளித்ததுடன், மங்களகம மகா வித்தியாலயத்திற்கான சுற்றுமதில் அமைப்பதற்கான வேலைககளையும் ஆரம்பித்து வைத்தார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் மூலம் குழாய்க்கிணறு அமைப்பதற்கு ஐந்து இலட்சம் ... Read More »

இஸ்லாத்தின் பார்வையில் போக்குவரத்துச்சட்டங்கள்-ஷியான் யாக்கூப்

Untitled-1

ஷரீஆவானது சில விடயங்களைச் செய்வதற்கு அனுமதியளித்து, சில விடயங்களைச் செய்வதையிட்டும் தடுத்துள்ளது. இதனைக்கொண்டு எது சட்டபூர்வமானது? எது சட்டபூர்வமற்றது என்ற முடிவிற்கு எம்மால் இலகுவாக வர முடிகின்றது. ஆனால், ஷரீஆவின் வேறு சில இடங்கள் வெறுமையாவை. இவ்வெறுமையான பகுதி காலத்திற்கும் சூழ்நிலைக்குமேற்ப பொருத்தமான சட்டங்களினால் நிரப்பப்பட வேண்டும். இவ்வாறான வெறுமையான பகுதிகள் தான் ஷரீஆவின் விசாலத்தன்மைக்கும், நெகிழ்வுத்தன்மைக்கும் வழியேற்படுத்தி, அதனை காலா காலத்திற்கும் எல்லாச்சூழலிற்கும் பொருத்தப்பாடுடையதாக மாற்றுகின்றது. இவ்வாறு இயற்றப்படுகின்ற போக்குவரத்துச்சட்டங்கள் “மஸாலிஹ் முர்ஸலா” விற்குள் அடங்குகின்றன. ஆனால், இஸ்லாமிய ஆட்சி நடைபெறாத போதும் ... Read More »

படிப்பினை தரும் சிங்களத் தொழிலதிபரின் முன்மாதிரி: யாசிப்பவனை வெறுக்காதீர்

66390.gif

ஆரிப் எஸ்.நளீம் எப்போதும் வாடிக்கையாளர்களால் நிரம்பி வழிகின்ற, நாளொன்றுக்கு இலட்சங்கள் புரலும் சிங்களவர் ஒருவருக்குச்சொந்தமான வியாபார நிலையம். அங்கே வாடிக்கையாளர்கள் காக்க வைக்கப்பட்டாலும், யாசகர்கள் காக்க வைக்கப்படமாட்டார்கள். இதனைத்தொடர்ந்து அவதானித்து வந்த நான், ஒரு தடவை இது பற்றி அந்தக்கடை முதலாளியிடம் கேட்டேன். அவர் எனக்கு சொன்ன பதில், அவர் மேலே நான் வைத்திருந்த நல்லெண்ணம் இன்னும் அதிகரிக்கக் காரணமாயிற்று. நம்மை நாடி வரும் யாசகர்களுக்கு நாம் வழங்குவது வெறும் ஐந்து, பத்து. என்னைப் பொருத்தமட்டில் பிச்சைகாரன் வடிவில் வருபவன் இறைவனாக எண்ணுகிறேன். இறைவனைக் ... Read More »

மட்டக்களப்பில் என்ன நடக்கின்றது? – அப்துல் ரஹ்மான் (அஸ்ஹரி)

images

(எச்.எம்.எம்.பர்ஸான்) கடந்த இரு வாரங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் ஒரு முஸ்லிம் இறைச்சி வியாபார நிலையத்தில் நாய் இறைச்சி விற்பனை செய்தவர் கைது என்ற செய்தி வெளியாகியிருந்தது ஆனால் அந்த வியாபார நிலையமோ! உரிமையாளரோ! அடையாளப்படுத்தபடவில்லை மாறாக அச்செய்தியில் சேர்க்கப்பட்டிருந்த புகைப்படம் சுகாதாரம் இன்மையால் மட்டக்களப்பில் சீல் வைக்கப்பட்ட இப்றாஹிம் ஹோட்டல் என்பதுவும் யாழ்ப்பாணத்தில் அவ்வாறான நாய் இறைச்சி விற்கப்பட்டதாக சொல்லப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்பதுவும் தெரிய வந்தது. இந்நிலையில் குறித்த இப்றாஹிம் ஹோட்டலிலேயே நாய் இறைச்சி சமைத்து விற்றதாக அதே புகைப்படங்களுடன் ... Read More »

அம்பாறை மாவட்டத்திற்கான மெய்வல்லுனர் போட்டியின் இறுதி நிகழ்வு.

07

(சப்னி அஹமட்) அம்பாறை மாவட்டத்திற்கான மெய்வல்லுனர் போட்டியின் இறுதி நிகழ்வு இன்று (23) அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். 10 000 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றவர்களுக்கான பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண எதிர்ச்க்கட்சித்தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவிச்செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் இதன் போது ... Read More »

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் போதைப்பொருள் பாவனைக்கெதிரான விசேட செயலமர்வு.

DSC03060

(எச்.எம்.எம்.பர்ஸான்) கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு ஆகிய பிரதேச செயலாளர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் அடிப்படையில் போதைப்பொருள் பாவனைக்கெதிரான விசேட செயலமர்வொன்று கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் அவர்களின் தலைமையில் 22.07.2017 ம் திகதி சனிக்கிழமை ஓட்டமாவடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இவ் விசேட செயலமர்வில் கல்குடா ஜம்இய்யத்துல் உலாம சபையின் உறுப்பினர்கள், பிரதேச பள்ளிவாயல்களின் நிருவாகிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், சிறுவர் கழகங்களின் அங்கத்தவர்கள், சமுர்த்தி திணைக்கள வெளிக்கள உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர். ... Read More »