தேசிய செய்திகள்

தடைகளைத் தாண்டி ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா நாளை: ஏற்பாடுகள் மும்முரம்

IMG_2887

(எம்.ரீ.எம்.பாரிஸ்) ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா நாளை சனிக்கிழமை 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. இவ்விழா தொடர்பில் பல்வேறு சர்ச்சைகளை கிளம்பி, இவ்விழாவினை குழப்பி அரசியல் சாயம் பூசி விடலாம் என்ற போர்வையில் சிலர் முயற்சித்த போதும், தடைகளைத் தாண்டி வெற்றிகரமாக விழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இவ்விழாவின் செயற்பாட்டாளர்களாக ஆரம்ப கட்டத்திலிருத்த சிலர் தாம் சில காரணங்களுக்காக விழா தொடர்பான பணிகளில் முன்நிற்கப்போவதில்லை என்று பின்வாங்கிக்கொண்ட சந்தர்ப்பத்தில் “இது எமது பாடசாலை, பாடசாலை நமக்கு எதனைச்செய்தது? ... Read More »

மாயக்கல்லி விவகாரத்தில் மு.கா. – கூட்டமைப்பு இணைந்து செயற்படும்

unnamed (1)

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) இறக்காமம் மாயக்கல்லி மலையில் பௌத்த விகாரை அமைப்பதைத் தடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இணைந்து செயற்படத்தீர்மானித்துள்ளன. இது தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் நேற்று இரவு (26) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில், மாயக்கல்லி மலை விவகாரம் தொடர்பில் ஆழமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. மாயக்கல்லி மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக மேற்கொள்ளவேண்டிய உயர் மட்ட நடவடிக்கைகள் ... Read More »

கனேவல்பொல முஸ்லீம் மகா வித்தியாலயதுக்கு முன் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஆட்பாட்டம்.

IMG_6950

(அஸீம் கிலாப்தீன்) கெகிறாவ கல்வி வலயத்துக்கு உற்பட்ட கனேவல்பொல முஸ்லீம் மகா வித்தியாலயம் 4 கிராமங்களை உள்ளடக்கிய பாடசாலையாகும் இப் பாடசாலை அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை எனும் செயற்றிட்டதுக்கு இப் பாடசாலை தெரிவு செய்யப்படுள்ளது. இப் பாடசாலைக்கு வெளியில் இருந்து அதிக மாணவர்கள் வருகின்னறனர். கனேவல்பொல முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் வளாகத்தில் பாடசாலை அதிபருடன் இனைந்து அரச சாரா நிறுவனம் ஒன்றின் நிதி ஒதுக்கீடுட்டில் (அல் மீசான்) நிறுவனத்தினால் நிறுவப்பட்டு வரும் தனியார் பாலர் பாடசாலை ஒன்று நிறுவப்பட்டு வருவதை கண்டித்து எதிர்ப்பினைத் ... Read More »

கொலை அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாவில்லு வனத்துக்கு அமைச்சர் ஹக்கீம் பயணம்

18118520_2003219439911394_8230559133336932010_n

முகம்மத் இக்பால்-சாய்ந்தமருது சர்ச்சைக்குரிய வில்பத்து பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினைக் காணும் பொருட்டு குறித்த பிரதேசத்துக்குச் சென்று பார்வையிடுமுகமாக தலைவர் ஹக்கீம் தலைமையில் இன்று காலை முசலி பிரதேச சபை மண்டபத்தில் அது பற்றிய கலந்துரையாடலுடன், விளக்க உரையும் இடம்பெற்றது. இதனைக் குழப்புவதற்கு அமைச்சர் ரிசாத்தின் ஆதரவாளர்கள் பலர் நாட்டின் பல பாகங்களிலுமிருந்து வரவழைக்கப்பட்டிருந்தார்கள். பதற்ற நிலையொன்றை உருவாக்கி, இறுதியில் குழப்பம் செய்ய முற்பட்டவர்கள் தோல்வியடைந்து கலைந்து சென்றார்கள். அதனைத்தொடர்ந்து பிரச்சினைக்குரிய வனப்பிரதேசத்துக்கு செல்வதற்கு ஆயத்தமான நிலையில், அங்கு செல்வதில் பாதுகாப்புப் பிரச்சினையுள்ளதாகவும், அங்கு ஆபத்து ... Read More »

மலேசிய மலாயா-தென் கிழக்கு பல்கலைக்ககழகங்களுக்கிடையே ஒப்பந்தம்

SAMSUNG CSC

(அஷ்ரப் ஏ சமத்) மலேசியா மலாயா பல்கலைக்கழகத்திற்கும்-தென் கிழக்கு பல்கலைக்ககழகத்திற்குமிடையில் ஒப்பந்தமொன்று நேற்றிரவு (27) தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்கிசையிலுள்ள கற்கை நிலையத்தில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. இதனூடாக இரு பல்கலைக்கழகங்களது கல்வி நடவடிக்கைகள், பாடவிதானம், புலமைப்பரிசில் மற்றும் மேற்படிப்புகளுக்கும் நன்மை பயக்கும். இவ்வொப்பந்தத்த நிகழ்வுகள் கலாநிதி ஏ.றமீஸ் தலைமையில் நடைபெற்றது. தென் கிழக்கு உபவேந்தா் பேராசிரியா் எம்.எம்.எம்.நாஜீம் , மலேசியா மலாயா பல்கலைக்கழகத்தின்  கல்வி கற்கை நெறிகளுக்கான பேராசிரியை கலாநிதி மரினா மேடி நுாா் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனா். இந்நிகழ்வில் தென் கிழக்கு பல்கலைக்கழக ... Read More »

வில்பத்துக் கூட்டத்தைக் குழப்புவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முயற்சி தோல்வி

wilpattu meeting 2

- பிறவ்ஸ் முசலி பிரதேச செயலகத்தில் சற்றுமுன் நடைபெற்ற வில்பத்து விவகாரம் தொடர்பில் விளக்கமளிக்கு விசேட கலந்துரையாடலுக்கு வருகை தந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நபவி அக்கூட்டத்தைக் குழப்பி விட்டு அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளார். நபவி பின் வரிசை ஆசனத்தில் தனது சகாக்களுடன் அமர்ந்திருந்தார். அவருடன் றியாஸ் சாலியும் உடனிருந்தார். தீடீரென அவர்கள் கூட்டத்தைக்குழப்பும் முயற்சியை மேற்கொண்டு விட்டு, அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளனர். இருப்பினும், குறித்த கூட்டம் எவ்வித இடைஞ்சலுமின்றி தொடர்ந்தும் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ... Read More »

பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்தும் எந்தவொரு நபரைக்கெதிராகவும் நடவடிக்கை -எஸ்எஸ்பி ஸ்ரனிஸ்லஸ்

ccc

பாறுக் ஷிஹான் தேசிய பாதுகாப்புக்கும் சமாதானத்துக்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையில் எவராவது செயற்பட்டால் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில்  இன்றைய தினம் (27)  மேற்கொள்ளப்படும் ஹர்த்தாலினால் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் கருத்துத்தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். இன்றைய தினம் காணாமலாக்கப்பட்டோருக்கு ஆதரவாக கதவடைப்புப் போராட்டத்தை மக்கள் அமைதியாக மேற்கொள்ள வேண்டும். விஷேட பொலிஸ் ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவற்றை விட தேசிய பாதுகாப்புக்கும் சமாதானத்துக்கும் ... Read More »

பிரதியமைச்சர் பைசால் காசீமால் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு புதிய வாகனம் கையளிப்பு

த்வ்ட்ஸ்

(அஷ்ரப் ஏ சமத்) உலக மலேரியா தினத்தை முன்னிட்டு கடந்த 24 ஆம் திகதி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு புதிய வாகனமொன்று கையளிக்கப்பட்டது. பிரதி சுகாதார அமைச்சர் பைசால் காசீம் அவர்களால் கல்முனைப் பிராந்தியத்தில் தொற்றுநோய்களைத் தடுப்பதற்குப் பொறுப்பான  வைத்திய அதிகாரி டாக்டர் நாகூர் ஆரிப் அவர்களிடம் கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சில் வைத்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர்  டாக்டா் ராஜித சேனாரத்தினவும் கலந்து கொண்டாா் மலேரியா முற்றிலும் இல்லாது ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை கருதப்படுகின்றது. இருப்பினும், புதிய தொற்றுக்கள் ஏற்படுவதைத் ... Read More »

தொடரும் கல்குடா அவலமும், கண்டு கொள்ளாத முஸ்லிம் கட்சிகளும்..!

த்வத்

ஷிபான் BM-மருதமுனை கல்குடா மதுபானத்தொழிற்சாலை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் பலரும் ஆக்கங்களை வெளியிட்டிருந்தார்கள். இருப்பினும், தொழிற்சாலைப் பணிகள் இன்று வரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டே வருகின்றன. எனினும், எமது முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் இதனை எள் முனையின் மூக்களவும் கண்டு கொள்ளவில்லையென்பதே உண்மை. ஆனால், கடந்த ஏப்ரில் 7ம் திகதி ஜும்ஆவின் பிற்பாடு மட்டக்களப்பில் நல்லாட்சிக்கான மக்கள் முன்னணியினால் (NFGG) அமைதிப்பேரணியொன்று நடாத்தப்பட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எஸ்.யோகேஸ்வரன் எம்.பி யும், வியாழேந்திரன் எம்.பியும் இது ... Read More »